தெரிந்து செய்தால்.....
ஒரு தவற்றைத் தெரியாமல் செய்துவிட்டால் அது பெரிய தவறல்ல! ஆனால் தெரிந்தே செய்தால் பெரும் குற்றம் என்கிறோம்.
அதேபோல் தேர்தலில் நிற்பவர் இப்படித்தான் செய்வார்கள் என்று தெரியாமல் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சியில் அமர்ந்தபின் கண்டறியப்பட்டால் அவர்களைத் தேர்வு செய்ததைச் சாதாரணத் தவறாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் குற்றவாளிகள், சுயநலவாதிகள் என்று தெரிந்தும் நாடறிந்த திருடர்களை தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிந்தே தேர்வு செய்வது மட்டும் பெரும் குற்றம் அல்லவா?
மக்கள் ஏன் ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்?
No comments:
Post a Comment