புது வியாதி!
இப்பொழுது ஒரு வியாதி பரவி வருகிறது!
ஆதாவது அரசுகள் பொறுப்பற்றவை, ஊழல் நிறைந்தவை! மக்களைக் கவனிக்க அவற்றுக்கு நேரமில்லை .
இப்படிச் சொல்லி விட்டு சும்மா இருந்தால்கூடப் பரவாயில்லை!
அவற்றை எதிர்த்து மக்கள் போராடவேண்டும் என்று சொன்னால் நல்லது!
ஆனால் இந்தப் புது வியாதிக்காரர்கள் என்ன சொல்கின்றார்கள் அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காமல் மக்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டுமாம்!
ஆதாவது தாங்கள் அரசுக்கு அழ வேண்டியதை எல்லாம் அழுதுவிட்டு அதையெல்லாம் எவனோ திருட விட்டுவிட்டு தங்கள் தேவைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டுமாம்!
இது எப்படி சாத்தியம்? சாதாரண மக்களுக்கு அதற்கான அதிகாரம் உள்ளதா?
இந்த நோயைப் பரப்புபவர்கள் மக்களின் விரோதிகளுக்கு உதவுகிறார்கள். அல்லது அப்படி உதவுகிறோம் என்பதை அறியாமல் சொல்கிறார்கள்!
எப்படி இருந்தாலும் அது தவறானதே!
அரசுகளை நிற்பந்தித்துத் தங்கள் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவதே சரியானதும் சாத்தியமானதுமான வழி ஆகும்!
No comments:
Post a Comment