பசுமைத் திருட்டு!
நண்பர்களே!
நேற்று ஒரு நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன்.
அவர் வேறொரு இடத்தில் குத்தகை விவசாயம் செய்து வருகிறார்.
அங்கு பசுமைக் குடில் முறை விவசாயம் செய்யப் பெரிய அளவில் வேலை நடந்து கொண்டிருந்தது!
அதுபற்றி அறிந்துகொள்ள அவரிடம் விசாரித்தேன்.
அதில் ஒரு பயங்கர உண்மை தெரிந்தது!
ஆதாவது அவர்கள் பசுமைக் குடில் விவசாயம் தொடர்ந்து செய்யப்போவது இல்லை!
ஆனால் அதற்காக அரசு அளிக்கும் லட்சக் கணக்கான மானியத்தை ஆட்டையைப் போடும் திட்டம் ஜோராக நடப்பது தெரிந்தது!
எப்படி?
ஆதாவது பசுமைக் குடில் அமைத்துக் கொடுக்கும் நிறுவனம் அதற்கான அனைத்து உபகரணங்களையும் கொண்டுவந்து குறிப்பிட்ட விவசாயியின் நிலத்தில் குடில் அமைப்பார்கள்! அதில் குறிப்பிட்ட பயிர்களை நடுவார்கள்.
அதற்குள் அரசு கொடுக்கும் மானியம் முழுவதும் கைக்கு வந்து விடும்!
உடனே அந்தக் குடில்களை அப்படியே வேறிடத்துக்கு வேறு விவசாயியின் நிலத்துக்குக் கடத்தி இடம் மாற்றி விடுவார்கள்!
அதன் மூலம் ஒரு இடத்தில் குடில் அமைப்பதற்கான சாதனங்களைக் கொண்டே தொடர்ந்து பல்வேறு விவசாயிகளின் பெயரால் லட்சக்கணக்கில் அரசு மானியத்தை ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள்!
அவர்களுக்கு ஆகும் செலவு எல்லாம் இடம் மாற்றம் செய்து குடில் அமைப்பதே!
இந்தமாதிரிதான் எல்லாப் பக்கமும் நடப்பதாக அப்பாவித்தனமாக சொல்கிறார்!
இதன்மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு கொஞ்சம் பங்கு கொடுத்துவிட்டு குடில் அமைக்கும் நிறுவனங்கள் மீதிப்பணம் முழுக்கவும் விழுங்கி விடுகின்றன!
பறிபோவது மக்கள் பணம் கோடிக்கணக்கில்! பயன் அடைவது சில வர்த்தக நிறுவனங்கள்! பெயர் மட்டும் பசுமைக்குடில் விவசாயத்தைப் பற்றி விழிப்புணர்வு வளர்வதாக!
இதைத் தடுக்க ஒரே வழி ஏற்க்கனவே இத்திட்டத்துக்காக மானியம் பெற்றவர்கள் அந்த முறை விவசாயம் செய்கிறார்களா என்று சரிபார்த்து சோதிப்பதும் புதிதாக சேருபவர்கள் அத்தகைய தவறுகள் செய்யாமல் கண்காணிக்கப்படுவதும்தான்!
இதை யார் செய்வது?
ருசிகண்ட பூனைகள் செய்யுமா?
No comments:
Post a Comment