துவரை
இந்த உயர் ரகத் துவரைச் செடி ஒன்று அல்லது இரண்டு வீட்டின் காலி இடத்தில் நட்டு வளர்த்தால் சுமார் ஆறு மாதத்தில் காய்ப்புக்கு வந்து விடும்.
வடருடக் கணக்கில் க்காயத்துக்கொண்டே இருக்கும்!
காய்களைப் பச்சையாகப் பறித்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
இயற்கை உணவுடன் கலந்தும் சாப்பிடலாம்!
முற்றிய காய்களைத் தொலித்து அதன் விதைகளை பல்வேறு விதமான சமையல் தயாரிப்புகளுடன் சேர்த்துக்கொள்ளலாம்!
குருமாவுக்கும் வெறு சிலவற்றுக்கும் பச்சைப் பட்டாணிக்குப் பதில் இதைப் பயன்படுத்தலாம்.
தேவைக்கும் அதிகமாகக் காய்த்து முற்றிக் காய்ந்துபோன காய்களைப் பறித்துக் காயவைத்து காய்ந்த துவரையை அடித்து எடுத்துப் பருப்பாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
முயற்சி செய்யுங்களே!
ஐயா இந்த துவரை செடியை எங்கு பெறலாம். மேலும் மறுமுறை நாமே இதை பயிரிட இதன் விதைகளை எவ்வாறு சேமிப்பது என்பதையும் சற்று விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். நன்றி.
ReplyDeleteஇந்தத் துவரைச் செடி உள்ளவர்கள் வீட்டில் சில காய்ந்த காய்களைக் கேட்டால் கொடுப்பார்கள். அதில் உள்ள விதைகளை நடலாம். விதை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கலாம். நமது வீட்டில் இருந்தால் அதன் காய்களை அப்படியே மறுபடிப் பயன்படுத்தலாம். நீண்ட காலம் காய்க்கும். அதனால் அடிக்கடி நடத்த தேவை இருக்காது!
ReplyDelete