ஒரு சோதனை!
ஒரு வாளி நிறையத் தண்ணீர் எடுத்துக் கொள்வோம்!
அதில் ஒரு பெரிய செம்மண் கட்டியைப் போட்டுக் கலக்கினால் என்ன ஆகும்?
அதில் ஒரு பெரிய செம்மண் கட்டியைப் போட்டுக் கலக்கினால் என்ன ஆகும்?
கரைந்து போகும் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதே மண் கட்டியை அளவாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்து அச்சுக்களாகச் செய்து சூளையில் வைத்துச் சுட்டெடுப்போம்.
அதன் பின் சுடப்பட்ட அந்த அச்சுக்களை எடுத்து வாளித் தண்ணீரில் போட்டுக் கலக்கினால் என்ன ஆகும்?
கரையுமா?
கரையாது! ஏன்?
அது உயர்வேப்பத்தில் சுடப்பட்டதால் வேதி மாற்றம் ஏற்ப்பட்டு நீரில் கரையும் தன்மையை இழந்துவிட்டது!
அப்படித்தானே?...
அப்படியானால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை மட்டும் எண்ணையில் போட்டுப் பொறித்தெடுத்தால் அதேமாதிரி வேதிவினையால் அதன் குணத்தில் மாற்றம் ஏற்படுமா இல்லையா?
அதைத்தான் எண்ணையில் சுட்ட உணவுப் பண்டங்கள் உடல்நலனுக்கு எதிரானவை என்று சொல்கிறோம்!...அவை நாக்குக்கு மட்டும் சுவை தரும்
உடல் நலனுக்கு நிச்சயம் தீங்குதான் விளைவிக்கும்!
No comments:
Post a Comment