வறட்சி!
இந்த வருடம் மழை பொய்த்துப்போய் கடும் வறட்சியை நோக்கி விவசாயம் போய்க்கொண்டுள்ளது!
தென்னை மரங்கள் நிறைய காய்ந்து விட்டன. மிக அதிக அளவு காயத்துவங்கிவிட்டன.
பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் வரண்டுவிட்டன.
கால்நடைகளுக்கும் மக்களுக்கும் கடும் தண்ணீர்ப்பஞ்சம் முன்னால் எதிர்நோக்கி நிற்கிறது!
மழைக்கால விவசாயம் எதுவும் நடக்காத நிலையில் அடுத்தகட்ட வறட்சி துவங்குகிறது!
பாசன வசதி உள்ள இடங்களில்கூட அணைகளும் ஏரி குளங்களும் தண்ணீரில்லாமல் கிடக்கின்றன!
ஆனாலும் விவசாயிகள் மத்தியில் அதற்கான எதிர்விளைவுகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை!
காரணம் மக்களின் விவசாயத்தைச் சார்ந்து வாழும் வாழ்வு முறை வேகமாக மாறிவருகிறது!
விவசாயம் என்ன ஆகப் போகிறது?...
No comments:
Post a Comment