ss

Tuesday, December 11, 2012

உணவே மருந்து ( 41 )



விரதத்தின் பலன் 

நண்பர்களே! 

மக்கள் எதற்கெல்லாமோ காரணம் சொல்லி விரதம் இருக்கிறார்கள்!


வாரத்துக்கு ஒரு நாள் என்றும், அமாவாசை,கிருத்திகை போன்று மாதத்துக்கு ஒருதடவை வரும் நாட்களிலும் விரதம் இருக்கிறார்கள்!

வருடத்துக்கு ஒரு தடவை குறிப்பிட்ட நாட்கள் குறிப்பிட்ட காரணத்துக்காக விரதம் இருக்கிறார்கள்.

ஆனால் விரதம் என்றால் என்ன என்பதை எத்தனை பேர் சரியாகப் புரிந்து பயனுள்ள முறையில் விரதமிருக்கிறார்கள் என்று பார்த்தால் பயனற்ற ஒன்றாகத்தான் தெரியும்!

ஒரு நோய்க்கு மருந்து உண்ணும்போது சிலவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் சிலவற்றை சேர்க்க வேண்டும் என்று வைத்தியர்கள் சொல்வார்கள்! 

அதற்குப் பெயர் பத்தியம்! 

அதன்மூலம் உடலில் உள்ள நோய்கள் நீங்கப்பெற்று சுகமான வாழ்வை அடைகிறோம்!

அதுபோலவே ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்வதன்  காரணமாக பல்வேறு பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். அதனால் பல்வேறு உடல் மற்றும் உள்ளம் சம்பந்தமான குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள்!

அதைத் தவிர்த்து உடலாலும் உள்ளத்தாலும் உயர்ந்த நிலையை அடைவதற்கு சில சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். 

அத்தகைய பயிற்சிக்குப் பெயர்தான் விரதம் ஆகும்! 

அதன்மூலம் உடலாலும் உள்ளத்தாலும் மேம்பட்ட நிலையை அடைய முடியும்!

பத்திய காலத்தில் சரியாக பத்தியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் நோய் குணமாகாது என்பது மட்டுமல்ல, மேலும் அதிகமாகும்! துயரத்தில் தள்ளிவிடும்!

அதுபோலவே விரத காலத்தில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கத் தவறினாலும் அந்த விரதத்தால் எந்தப் பயனும் இருக்காது. மாறாக உடலாலும் உள்ளத்தாலும் மேலும் கேடுகேட்டுத்தான் போகவேண்டி வரும்!


ஆனால் விரதம் இருப்பவர்கள் பெரும்பாலோர் விரத காலங்களில் மற்ற காலங்களைவிட வாய்க்குச் சுவையான ஆனால் உடல்நலத்துக்கு எதிரான  உணவுகளை உண்பதைப் பார்க்கலாம்! புகைபிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைக்கூட விடாமல் தொடர்வதைப் பார்க்கலாம். மது அருந்துபவர்கள் அதே நினைவாக விரத நேரம் எப்போ முடியும் என்று அலைவதைப் பார்க்கலாம்! 

விரத காலங்களிலும் மற்ற காலங்களில் இருப்பதைப் போன்றே எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் நடக்கிறார்கள்!

இதனால் என்ன பயன்?

விரதம் என்றால் தீய பழக்கங்களுக்கு எதிராகவும் நல்ல பழக்கங்களைப் புதிதாகக் கற்றுக்கொள்வதற்காகவும் நடத்தும் மவுனப் போராட்டமாக இருக்கவேண்டும்! 

அதன்காரணமாக உடலாலும் உள்ளத்தாலும் நமக்கு நாமே சுத்திகரிப்பு செய்து கொள்ளவேண்டும்!

அதனால் நாம் உயர்நிலையை அடைவது மட்டுமல்ல மற்றவர்களுக்கும் வழிகாட்டுவதன்மூலமாக சமுதாயத்துக்கே பயன்பட்டு வாழமுடியும்!

அதுதான் விரதத்தின் பலன்! 


No comments:

Post a Comment