ss

Monday, December 17, 2012

விவசாயம் ( 41 )


கண்ணுக்கு முன்னால்.....

நண்பர்களே!

இது நேற்று எடுத்த படம்!

மக்காச் சோளப்பயிர்!

நாங்கள் இருக்கும் உடுமலைப்பேட்டை,பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சம் ஏக்கர் இந்த நிலையில்தான் உயிர் போய்க்கொண்டு உள்ளது!

முதல் காரணம் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கிணறுகளில் வழக்கமாக இருக்கும் தண்ணீர் இல்லை.

இரண்டாவது காரணம் வடகிழக்குப் பருவமழையை நம்பி வழக்கம்போல நடவுசெய்தது.

மூன்றாவது காரணம் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனது! 

நான்காவது காரணம் மழை பொய்த்தபோது ஒத்தாசை செய்யுமளவுகூட கிணறுகளில் தண்ணீரில்லாமல் வறண்டுபோனது! 

இதனால் இந்தப் பட்டத்தில் வரவேண்டிய வருவாய் இழப்பு முதலாவது!

இரண்டாவது போட்டமுதல்கூட இல்லாமல் நட்டமடைந்தது!

மூன்றாவது கால்நடைகளுக்குகூடத் தீவனம் இல்லாமல் இருப்பவற்றையும் அடிமாட்டுக்கு விற்பனை செய்வது!

நான்காவது அடுத்து இன்னும் ஒரு வருடத்துக்கு விவசாயப் பணிகள் எதுவும் செய்ய முடியாமல் காய்ந்துபோன தென்னைமரங்களைப் பார்த்துக்கொண்டு காலந்தள்ள என்னசெய்வது என்பது! 

இந்த வறட்சியைத் தொடர்ந்தும் மின்சாரப் பிரச்சினையாலும் தொழில்களும் சிறப்பான வருவாய் கொடுக்காது! அப்படியிருந்தாலும் விவசாய நிலங்களை முடியாதவர்கள் விற்றுவிட்டுப் போகலாம் .
அதற்கும் வழி இல்லை! 

நிறைய விவசாயிகளின் கண்களுக்கு முன்னால் பசுமையான எதிர்காலமல்ல வேறு எதோ தெரிகிறது!  

No comments:

Post a Comment