மூன்று வழிகள்
உலகில் நாம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் உயர்ந்த எண்ணம் படைத்தவர்களுக்கு அது திருப்தியான வாழ்வாக இருப்பதில்லை!
அது ஒரு வகையில் முரண்பட்டதாகவும் திருப்தியற்றதாகவுமே இருக்கிறது!
ஆக எங்கே இருந்தாலும் நாம் விரும்பும் அமைதியான சூழல் இல்லை என்பது நிரூபணமாகிறது!
அதைச் சரிசெய்ய இரண்டு வழிகள் உள்ளன! ஒன்று சூழலுக்கு ஏற்ப நமது உணர்வுகளைச் சரிப்படுத்திக்கொள்வது.
இரண்டாவது நமது அனைவரின் நியாயமான உணர்வுகளுக்கு ஏற்ப சூழலைச் சரி செய்வது!
இதில் முதலாவதை விட இரண்டாவது சிறந்ததாகும்!
மூன்றாவது ஒன்றும் இருக்கிறது!
ஆதாவது அனைத்து உலகச் சூழலை அனைத்து மக்களின் மற்றும் சாத்தியப்பட்ட உயிரினங்களின் அமைதியான வாழ்வுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் திசையில் இயன்றவரை போராடுவது!
அதுவே என்றென்றும் உக்க வாழ்வை மேலும் மேலும் சிறப்பான திசையில் இட்டுச் செல்லும்!
No comments:
Post a Comment