ss

Sunday, December 2, 2012

எனது மொழி ( 86 )




நான்கு படிகள் 

நாம் நமது சிறப்பான வாழ்வுக்கு எதுவெல்லாம் அடிப்படையாக இருக்கும் என்று நம்புகிறோமோ அவையனைத்தும் நம்மைப்போன்ற உலக மக்கள் அனைவருக்கும் அடிப்படை என்பதை உணர்வது முதல் படி ! 

அனைவருக்குமான அமைதியான உலகை உருவாக்கத் இட்டமிடுவது இரண்டாம்படி!

அதற்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் தகர்க்கும் திசையில் பொதுக் கருத்தை உருவாக்குவது மூன்றாம் படி! 

அதன்படி மக்கள் சக்தியைத் திரட்டி சாதிப்பது நான்காம் படி! 

அதுதான் இறுதிப் படி!

அனைவரின் தேவைகளும் ஆயிரம் விதமாக இருக்கலாம் . ஆனால் நியாயமான தேவைகள் என்ற கருத்தால் வடிகட்டும்போது அனைத்தும் ஒன்றாகிவிடும்!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து வளங்களும் அனைத்து மக்களுக்கும் ,இயன்றவரை சாத்தியப்பட்ட உயிரினங்களுக்குமானது என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் உதவி செய்து வாழ்தல் என்ற கண்ணோட்டத்தில் உலக வாழ்வு சம்பந்தமான அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்! 

மேற்படிக் கோட்பாட்டுக்கு நேர் மாறாக பிறரை வஞ்சித்து வாழ எண்ணுவதும் யார் எக்கேடு கேட்டால் என்ன , தாம் வாழ்ந்தால் போதும் என்ற கண்ணோட்டத்தில் பிறர்க்குண்டானதை அபகரிக்க எண்ணுவதும், அத்தகைய எண்ணங்களை ஊக்குவிக்கும் சக்திகளும், அவற்றுக்கு ஆதரவான அரசியல் சக்திகளாக உள்ள தேசிய சர்வதேச ஒடுக்கும் சக்திகளும் மக்களைப் பிளவு படுத்தும் அனைத்து சக்திகளும் இன்னும் பலவும்தான் நல்லவற்றுக்கான தடைகள்!.....

அமைதியான உலக வாழ்வை விரும்புகின்ற, பிறரது மகிழ்ச்சியில் தாம் மகிழ்கின்ற உலகளாவிய மனித நேயம் கொண்ட அனைவரும் உள்ளூர் அளவில் இருந்து உலகளாவிய அளவு வரை ஒன்றாகத் திரள வேண்டும். அது உலகில் வெல்லற்கரிய தீர்மானிக்கும் சக்தியாக வளர்வதும் நாளைய உலகை அமைதிப் பூங்காவாக மாற்றும் திசையில் நடைபோடுவதுமே சாதிக்கவேண்டிய உன்னத லட்சியம் ஆகும்!

அப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்படாமல் எதிர்காலத்தில் ஒரு உலக வாழ்க்கை இருக்க முடியாது!


1 comment: