ss

Sunday, December 16, 2012

எனது மொழி ( 91 )


அறிவியலும் மூட நம்பிக்கையும்! 

அறிவியல் என்பது மூட நம்பிக்கையாக இருந்தால் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். 

ஆனால் அது வாழ்வையும் உலகையும் அண்டத்தில் உள்ள அத்தனையையும் பற்றி எட்டியவரை சரியாக விளக்குகிறது. 

விளக்க முயல்கிறது! 

அது ஒரு மாறும் அறிவு! மனித அறிவுக்கு எட்டிய எல்லைகள் விரிவடையும் அளவு அறிவியலின் வீச்சும் விரிவடைந்துகொண்டே இருக்கும். 

ஆனால் இன்னும் சூரியனையும் சந்திரனையும் கிரகங்கள் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் அறிவாளிகள் அறிவியலைப் பழிப்பதற்கு வெட்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை! 

புதுப்புது தேவைகளுக்கு ஏற்ப புதுப்புது கண்டுபிடிப்புகளை அறிவியல் நிகழ்த்திக்கொண்டே இருக்கும். 

ஆனால் மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையைப் பார்க்கும் எவரும் அறிவியல் கண்டு பிடிப்புகளைவிட அவற்றின் தேடல்களைவிட அறிவுக்கு எட்டாத இன்னும் கண்டுபிடிக்கப்படாதவற்றைஎல்லாம் தாங்கள் கண்டறிந்து விட்டதுபோல் அறிவியலைப் பழிப்பதை கெட்டிக்காரத்தனமாகக் கொண்டிருக்கிறார்கள்!

அறிவியல் எட்டிய எல்லைக்கு அப்பால் அறிவியல் என்ன சாதித்தது என்று கேட்பவர்கள் எப்படி மூடநம்பிக்கைகளை அப்பழுக்கற்ற கண்டுபிடிப்புகளைப்போல் துணிந்து சொல்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை! 

அறிவியலைப் பழித்துக்கொண்டே தங்களின் மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியானது என்று சொல்லவும் கூச்சப்படுவதே இல்லை!

இந்த லட்சணத்தில் தங்களை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொண்டு ஆன்மிகத்தையும் கொச்சைப்படுத்தவும் தவறுவதில்லை! 

No comments:

Post a Comment