எது சிறப்பு?
நமது உள்ளத்தில் தோன்றுவதும் மற்றவர்களிடமும் கல்வியின்மூலம் தான் தேடியதுமான கருத்துக்கள் சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அவை மதிப்பு மிக்கவை!
காரணம் சரியாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம். தவறாக இருந்தால் விமர்சனங்களை எதிர்கொண்டு திருத்திச் செழுமைப் படுத்திக்கொள்ளலாம்!
அதன்மூலம் அந்தக் கருத்து மதிப்புப் பெறுகிறது. கருத்துக்கு உரியவரும் மதிப்புப் பெறுகிறார்!
அதைவிட்டு புத்தகங்களிலும் இணையத்திலும் பெரியோர்களின் போதனைகளிலும் இருந்து எடுத்து சுட்டிக்காட்டுவதன்மூலம் அந்தக் கருத்துக்களால் சொல்பவருக்கு எந்தப் பெருமையும் இல்லை!
அடுத்தவர் கருத்துக்களைக் கையாள்வதைவிட நம்மிடம் உள்ள கருத்துக்களை வெளிப்படுத்துவதே சிறப்பு! வெளிப்படுத்த இயலவில்லை என்றால் தங்கள் ஐயங்களை வெளிப்படுத்தலாம்! அதுவும் முன்னதற்கு இணையான சிறப்பு ஆகும்!
அதற்கு மற்றவர்கள் பதில் அளிப்பார்கள்! அதன்மூலம் அறிவுத் தேடலும் அறிவுத் திறனும் அதிகமாகும்!
ஒவ்வொரு சிறப்பும் நமது முயற்சியால் அடைய வேண்டும்!
அதுதான் உண்மையான சிறப்பு!
No comments:
Post a Comment