நண்பர்களே!
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஐயம்!
அதனாலேயே அதுபற்றி நான் வாய் திறப்பதில்லை.
யாராவது சொன்னாலும் காதில் போட்டுக்கொள்வதில்லை!
ஆதாவது நிறையப்பேர் அடிக்கடி உடல் உபாதை சம்பந்தமாகப் பேசும்போது அதற்குக் காரணமாக உஷ்ணம் அல்லது குளிர்ச்சி என்று சொல்வார்கள்!
அப்படி என்றால் என்ன?
மனித உடல் வெப்பம் 98.4 என்ற நிலையில் இருந்து அதிகமானால் காய்ச்சல் , குறைந்தால் ஜன்னி போன்ற பாதிப்புகள் வரும் என்று அனைவருக்கும் தெரியும்!
ஆனால் இந்தக் குளிர்ச்சி அல்லது உஷ்ணம் என்று சொல்லப்படும் பாதிப்புகளின்போது உடல்வெப்பம் மாறுபாடு இருப்பதில்லை!
அப்படியானால் இவற்றின் உண்மையான பொருள் என்ன?
நமது உடல் குளிராக இருந்தால் சுற்றுப் புறம் வெம்மையாகத் தெரியும். உடல் வெம்மையாக இருந்தால் சூழல் குளிராகத் தெரியும்.
ReplyDelete…
…வெம்மை என்றுச் சொல்லும் போது தோலுக்கு குருதி ஓட்டம் சரியாக இல்லாமல் இருக்கலாம் அவ்வளவே.
புற வெப்பம் அல்லது குளிர்ச்சியை வைத்துச் சொல்லப்படுவது அல்ல நண்பரே! உண்ணும் உணவை வைத்துச் சொல்கிறார்கள். அதுதான் குழப்பமாக உள்ளது!...
ReplyDelete