ஆன்மீகத்தின் அடிப்படை முரண்பாடு
முரண்பாடான வியாக்கியானங்களால் உலக மக்கள் மத்தியில் நமது இருப்பைப் பற்றிய பொதுவான கோட்பாடு என்பதே இல்லை என்பதுதான் உண்மை!
அடிப்படையான ஒன்றைப் பற்றி அடிப்படையே இல்லாத விளக்கங்கள்தான் நடப்பில் உள்ளன!
அவற்றில் எதுவும் நியாயமான ஐயங்களைப் போக்கி உண்மை ஒளியைப் பாய்ச்சுவது இல்லை!
மக்கள் தொடர்ந்து குழப்பமான தெளிவற்ற தத்துவங்களின்கீழ்தான் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்!
அதனால்தான் பிளவு பட்டும் பகைமை உணர்வுடனும் வாழ்கின்றனர்!
அண்டத்தில் உள்ள அத்தனையும் அதற்கு
அப்பால் உள்ள நம்மால் உணரமுடியாத எதோ ஒரு பெரும்சக்தியால் உருவாக்கப் படுகிறது என்பதுதான்
இன்றளவும் நடப்பு ஆன்மிகத்தின் அடிப்படைக் கோட்பாடாக உள்ளது!
அடிப்படை முரண்பாடே இதில் இருந்துதான்
துவங்குகிறது!
ஒரு ஜடப்பொருளை ஆதாரமாகக் கொள்ளாமல்
எந்த ஒன்றும் நிலவ முடியாது என்பதுதான் விதி!
ஆனால் அத்தகைய ஜடப்பொருட்களை ஆதாரமாகக்
கொள்ளாத அதற்கு அப்பால் நிலவும் ஒன்றுதான் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் என்பது காலங் காலமாக நம்பப்பட்டு வருகிறது!
அதுதான் இன்றுவரை பலவேறு முரண்பட்ட
நம்பிக்கைகளாகவும் தத்துவங்களாகவும் நிலவுகிறது.
ஆனால் அந்த முரண்பட்ட அனைத்துத் தத்துவங்களின் பொதுவான
பண்பு என்னவென்றால் அது ஒரு ஜடப்பொருளை ஆதாரமாகக்
கொள்ளாமல் எந்த ஒன்றும் நிலவ முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதே!
ஆதாவது சார்பியல் தத்துவத்தை அவை
அனைத்தும் நிராகரிக்கின்றன!
சார்பியல் தத்துவத்துக்கு முரண்படாததுதான்
உண்மையான ஆன்மிகமாக இருக்கும்!
ஆனால் அப்படிப்பட்ட ஆன்மிக சிந்தனைகள்
இன்னும் உருவாக வில்லை!
காரணம் ஆன்மிகம் என்பது இன்று
சுயநலவாதிகளின் மற்றும் அறிவியல் சிந்தனை அற்றவர்களின் கைகளில் இருப்பதுதான்!
No comments:
Post a Comment