மாவீரர்கள் யார்?
தனது உரிமைக்காகவும் தனது மக்களின் உரிமைக்காகவும் தனது நாட்டின் உரிமைக்காகவும் அனைத்துலக மக்களின் நலனுக்காகவும் போராடி வெல்பவரும் அல்லது அந்தப் போராட்டத்தில் உயிர் நீப்பவரும்தான் மாவீரர் என்று சொல்லத் தகுதி உடையவர்கள்!
அனால் உண்மை நடைமுறை வேறுவிதமாக இருக்கிறது!
எண்ணற்ற மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான போர் வெறியர்களும் , பல நாடுகளை தனது காலடியில் விழவைக்க ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தியவர்களும், ஈவிரக்கமற்ற கொடுங்கோலர்களும் எல்லாம் மாவீரர்களாகச் சித்தரிக்கப் படுகிறார்கள்!
உண்மையில் அவர்கள் எல்லாம் வரலாற்றின் குப்பைக்கூடையில் எறியப்பட வேண்டியவர்கள்!
ஒரு நாட்டை வல்லரசு ஆக்கவேண்டும் என்று கனவு காண்பவர்கள் எல்லாம் அத்தகைய குப்பைகளைத் தலையில் சுமப்பவர்களே!
No comments:
Post a Comment