புதுக் கருவி
தோட்ட வேலைக்காகப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நானே உருவாக்கிய (Two in one ) கடப்பாரை!
ஒரு பக்கத்தைக் குழி தோண்டவும் மறுபக்கத்தை மரம் செடி வெட்டவும் பயன்படுத்தலாம்!
இனியும் ஒரு சிறப்பு என்னவென்றால் கோடரி நுழைய முடியாத முள் செடிப் புதர்களில் உள்ள தேவையற்ற மரங்களையும் புதர்களையும்கூட முள் படாமல் எளிதில் வெட்டலாம்!
கள்ளிப் புதர்களை வெட்ட ஆள் கூப்பிட்டபோது என்ன கூலி கொடுத்தாலும் வரமாட்டோம் என்று சொல்லி விட்டார்கள்.
அவர்களுக்குக் கொடுப்பதாக நான் சொன்ன பணத்தில் பாதித் துகையைக் கொண்டு இதை நான் தயாரித்தேன்.
அதன் பின் இன்றும் பன்னிரண்டு வருடங்களாக எனக்குப் பயனுள்ள துணைவனாக இருந்து வருகிறது!
வேலைக்கு வர மறுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
அதன் தயாரிப்பு விபரம்:.......
நான்கு அல்லது ஐந்து அடி நீளக் கடப்பாரை ஒன்றை ஒரு பக்கம் கடப்பாரை முனையாக அடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
மறு பக்கத்தைப் பட்டையாக செய்து சுமார் மூன்று அங்குல இடை வெளியில் அரை அங்குலம் விட்டமுள்ள இரண்டு துளைகள் போட வேண்டும்.
முக்கால் அடி நீளம் உள்ள - லாரியில் பயன்பட்ட ஒரு பழைய வில் தப்பையைப் பட்டறையில் காய்ச்சி ஒரு பக்கத்தைக் கோடரி போன்று செய்ய வேண்டும்.
மறு பக்கத்தைப் படத்தில் உள்ளதுபோல் ஒடுக்கிக் கொண்டே வந்து சுமார் ஒரு அங்குல அளவுக்குச் சிறிதாக்கவேண்டும்.
அதிலும் மூன்று அங்குலம் இடை வெளியில் அரை அங்குலம் விட்டமுள்ள இரண்டு துளைகள் இடவேண்டும்.
இப்போது அரை அங்குல போல்ட் நட் இரண்டைக் கொண்டு கடப்பாரையுடன் இணைத்து விட்டால் கருவி தயார்!
நமது விருப்பம்போல் வெட்டலாம் . குத்தலாம். தேவைப்படாத நேரத்தில் தனியாகக் கழட்டியும் வைத்துக் கொள்ளலாம்!....
அருமையான யோசனை!வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅடடே!!!.. கலக்குங்க...
ReplyDeleteஅருமையான யோசனை!
ReplyDeleteநன்றி நண்பர்களே!
ReplyDelete