தண்ணீர் தண்ணீர்!
உலகம் முழுமையும் தண்ணீரின் அருமை உணரப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில் தண்ணீருக்காக நாடுகளுக்கு இடையே போர்கள் கூட வரலாம் என்று கூறுகிறார்கள்.
ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்கவேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.
ஆம்! அதிகமான தண்ணீரை வீணாக்கும் பேர்வழிகள் தண்ணீர் ஊற்றிவைக்க ஓட்டைப் பானைக்குக்கூட வழி இல்லாதவர்களைப் பார்த்து தண்ணீரை வீணாக்காதே என்று அறிவுரை வழங்குகிறார்கள்!
தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருக்கவேண்டும் என்றால் தண்ணீர்த் தேவை அதிகம் உள்ள பண்டங்களை உண்ணக்கூடாது!
அதுபோல தண்ணீர்ப் பயன்பாடு குறையவேண்டுமானால் தண்ணீர்த் தேவை அதிகமாக உள்ள அனைத்துத் துறைகளையும் தண்ணீர்த் தேவை குறைவாக இருக்கும்படி மாற்றி அமைக்கவேண்டும்.
தவிர மழை அதிகம் பெய்யக்கூடியதான சூழலை பூமியில் உருவாக்கவேண்டும்.
அதுவல்லாமல் ஒரு பொருளின்மேல் குதிரைக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டே அந்தப் அதைத் தலையில் தூக்கி வைக்க முயற்சி செய்யக்கூடாது!
அதைத் தான் செய்கிறோம்!
எப்போது புத்தி வரும்?.....
இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை...
ReplyDelete