அட நாராயணா!....
இலையைப் பார்த்ததும் பகீர்னுதாம்!
கண்ணுல தண்ணி கதகதன்னு வந்திருச்சாம்.
அட நாராயணா! எனக்கு முன்னால நீ இங்கே வந்துட்டியா? அப்படின்னு நொந்து நூலாப் போனானாம்!
விவரம் வேறொண்ணும் இல்லே!
அவங்க வசதியானவங்க. வகை வகையா வாய்க்கு வக்கணையா தினமும் சாப்பிடறவங்க!
அதனால ஆசைக்கு ஒருநாள் சாப்பிட்டுப் பார்ப்போமே அப்படின்னு சொல்லி அன்னைக்கு செய்தது ......
ராகிக் களியும் கீரையும்!
ஒரு கிராமத்தில் ஒரு அப்பாவி ஏழை இருந்தானாம்.
அவனுடைய சாப்பாட்டில் ராகிக் களியும் கீரையும் பழைய சோறும்தான் தினமும் இருக்கும்.
ஆசைப்படுவதை உண்ணுமளவு வசதி இல்லை!
அவனுக்கு ஒரு ஆசை இருந்தது.
ஆதாவது பக்கத்து ஊரில் உள்ள மாமா வீட்டுக்கு ஒரு நாளைக்குப் போய் வாய்க்கு ருசியா ஒரு நேரம் சாப்பிட்டு வரணும் அப்படிங்கிறதுதான் அந்த ஆசை!
நினைச்ச மாதிரியே ஒருநாள் புறப்பட்டு மாமா ஊருக்குப் போனானாம்.
நல்ல வரவேற்ப்பு!
கொஞ்ச
நேரம் பேசிட்டு இருந்தாங்களாம்.
சாப்பாட்டு நேரம் ஆனதும் இலைபோட்டு பரிமாறினாங்ளாம்!
இலையைப் பார்த்ததும் பகீர்னுதாம்!
கண்ணுல தண்ணி கதகதன்னு வந்திருச்சாம்.
அட நாராயணா! எனக்கு முன்னால நீ இங்கே வந்துட்டியா? அப்படின்னு நொந்து நூலாப் போனானாம்!
விவரம் வேறொண்ணும் இல்லே!
அவங்க வசதியானவங்க. வகை வகையா வாய்க்கு வக்கணையா தினமும் சாப்பிடறவங்க!
அதனால ஆசைக்கு ஒருநாள் சாப்பிட்டுப் பார்ப்போமே அப்படின்னு சொல்லி அன்னைக்கு செய்தது ......
ராகிக் களியும் கீரையும்!
No comments:
Post a Comment