மதங்களா? கடவுளா?
எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே மருத்துவ மனையில் பிறக்கிறார்கள்!
ஒரே மருத்துவரிடம் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள்.
ஒரே கருவியையும் மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
ஒரே மளிகைக்கடையில் பொருள் வாங்கி உண்ணவும் செய்கிறார்கள்!
ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கவும் ஒரே மொழியைப் பேசவும் செய்கிறார்கள்!
நான் கேட்கிறேன் ........
வாழும்போது ஒரே தேவைகளுடன் வாழும் இவர்களை செத்தபின்பு ஏன் ஒரே இடத்தில் புதைக்க மதங்கள் விடுவதில்லை?
அனைத்து மனிதரும் ஓரிடத்தில் புதைக்கப்படக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவன் சொன்னானா?
இறைவனே சொல்லாத ஒன்றை இந்த மதங்கள் செய்கின்றன என்றால் அவை இறைவனுக்கு எதிரானவை அல்லவா?
அப்படியானால் நாம் நிற்கவேண்டியது இறைவனின் பக்கமா? மதங்களின் பக்கமா?
நிச்சயமாக ஒன்றை ஏற்றுக்கொள்வதென்றால் மற்றதைத் தூக்கிக் குப்பையில் எறிந்தாக வேண்டும்!
நாம் எதை ஏற்றுக் கொள்ளப் போகிறோம்?
எதைத் தூக்கிக் குப்பையில் எறியப் போகிறோம்!
No comments:
Post a Comment