குதிரையும் ஈக்களும்.
வண்டிக்காரர் வண்டியில் அமர்ந்து வண்டியைச் செலுத்துகிறார்!
வண்டியைக் குதிரை இழுத்துச் செல்கிறது.
அந்தக் குதிரையின் முதுகில் ஈ ஒன்று ஒட்டிக்கொண்டு உள்ளது!
அது என்னநினைக்கிறது தெரியுமா?....
"இந்தக் குதிரை சரியில்லை , தேவையும் இல்லை! அதையும் சேர்த்து நான் இழுக்கவேண்டியுள்ளது!...."
ஆதாவது வண்டியையும், வண்டிக்காரனையும், குதிரையையும் சேர்த்து அந்த ஈ தான் இழுத்துப் போகிறதாம்!....
இது எப்படி இருக்கு?...
இப்படியாகத்தான் சமுதாயத்திலும் நிறையப்பேர் பேசித் திரிகிறார்கள்!
வண்டி என்பது மனித சமுதாயம்.
வண்டியோட்டிதான் அறிவாற்றல். ஆதாவது ஞானம்!
அல்லது மெஞ்ஞானம் என்றும் வைத்துக்கொள்ளலாம்!
அல்லது மெஞ்ஞானம் என்றும் வைத்துக்கொள்ளலாம்!
குதிரை என்பது அறிவியல்!ஆதாவது விஞ்ஞானம்!
மதங்களும் மூடநம்பிக்கைக்களும்தான் குதிரையின் முதுகில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈக்கள்!
அந்த ஈக்களைப்போல் அறிவியலால் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக்கொண்டே அறிவியல் தங்களை விட உயர்ந்தது அல்ல , மாறாகத் தாமே அறிவியலைவிட மேலானவை என்று பிதற்றுகின்றன!
அந்தமாதிரிப் பிதற்றலையும் தத்துவங்களாக பிரச்சாரம் செய்பவர்களையும் அதை நம்புபவர்களையும் என்ன செய்வது!....
தங்களையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதே நாம் அறிய வேண்டிய உண்மை!
சரியான உண்மை தான்...
ReplyDeleteஅருமை அண்ணா அருமை
ReplyDeleteகோயம்புத்தூர் பாலு