பாலும் பாவமும்!
பால் மற்றும் பசு மாடுகள் சம்பந்தமான முரண்பாடான கருத்துக்களால் மக்கள் தங்களுக்குள் பலநேரங்களில் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் அது பற்றிய யதார்த்த நிலையைக் கணக்கில் கொண்டால் முரண்பாடுகளுக்கு அவசியம் இல்லை என்பது விளங்கும்!
மூன்று வகையினர் உள்ளனர்.
பாலையும் பசுவையும் புனிதமாக மட்டும் கருதும் ஒரு பகுதியினர் உள்ளார்கள்.
அவர்கள் பசுக்கள் கொல்லப்படுவதற்கும் கன்றுகள் கொடுமைப்படுத்துவதற்கும் மாமிசம் உண்ணப்படுவதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என நினைக்கிறார்கள்.
இரண்டாவது பகுதியினர் அதற்கு நேர் மாறானவர்கள்!
அவர்கள் பசுவையும் பாலையும் வெறும் உணவுப் பொருளாக மட்டும் பார்க்கிறார்கள்!
அதன் உயிர்வாழும் பண்பையும் அவை வதைப்
படுதலையும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை!
ஆனால் மூன்றாவது பகுதினரான இயற்கை நல்வாழ்வுப் பற்றாளர்கள் வேறு வகையில் சிந்திக்கிறோம்!
பால் மனிதனின் தவிர்க்கமுடியாத உணவு அல்ல!
அது சமைக்கப்ப்படும்போது ஒரு விதமாகவும் பச்சைப்பால் ஒரு விதமாகவும் நமது உடம்பில் மற்ற உணவுப் பொருட்களைப் போலவே செயல்படும்.
அதனால் அதற்கு சிறப்பு முக்கியத்துவம் இல்லை!
அதனால் கன்றுகளை வதைத்து பாலைக் குடிப்பதைவிட பாலுக்குப் பதில் மற்ற தாவர உணவுகளைப் பயன்படுத்தலாம் என்கிறோம்.
அதனால் முதல் இரண்டு வகையினரைவிட மூன்றாவது வகையினர் யதார்த்த வாழ்க்கையை சரியாகக் கையாள்கிறார்கள்!
அதைவிடச் சிறந்த உபாயம் வேறு இல்லை!
நன்றாகவே விளங்குகிறது ஐயா... நன்றி...
ReplyDeleteநான்காவது வகையினரும் உண்டு.
ReplyDelete…அவர்களுக்கு பசுவிற்கு உயிர் உண்டென்று என்று தெரியும்..
…
…பசு பால் மனிதன் இவற்றிற்கு இடையேயான தொடர்பு கூட்டுயிரி வாழ்க்கை முறைக்கு எடுத்துக் காட்டு என்றும் தெரியும்.
…
…உயிர் பலி இல்லாமல் எந்த உணவும் இல்லை என்றும் தெரியும்.
நன்றி நண்பர்களே!
ReplyDeleteநான்காவது வகையினரும் உண்டு.
ReplyDelete…அவர்களுக்கு பசுவிற்கு உயிர் உண்டென்று என்று தெரியும்..
…
…பசு பால் மனிதன் இவற்றிற்கு இடையேயான தொடர்பு கூட்டுயிரி வாழ்க்கை முறைக்கு எடுத்துக் காட்டு என்றும் தெரியும்.
…
…உயிர் பலி இல்லாமல் எந்த உணவும் இல்லை என்றும் தெரியும்.\\\\\\உண்மை நண்பரே! நிச்சயம் எவ்வுயிரையும் கொல்லாமல் எவ்வுயிரும் வாழ முடியாது! ஆனால் நாம் காணுகின்ற நாம் அன்பு செலுத்துகின்ற நாம் வளர்க்கின்ற நமது மனதைப் பாதிக்கும் உயிரினங்களை அவற்றைக் கொல்லும்போதோ கொல்லும்வரையோ துன்புறுத்தாமல் அன்பு செலுத்தலாமே! அதுதானே நம்மால் முடியும்?...மற்ற போலி காருன்யத்தைப் பற்றிக் கவலைப் படத் தேவை இல்லை!