உணர்வு அறிவாகுமா?....
உணர்வு இரு வகைப்படும் !
உடல் சார்ந்தது ஒன்று. அறிவு சார்ந்தது மற்றொன்று.
ஆனால் அறிவு என்பது மனம் சார்ந்தது மட்டுமே!
உடல் சார்ந்த உணர்வை அறிவு என்று சொல்ல முடியாது!. அது தவறு .
மனம் சார்ந்த உணர்வைக்கூட அறிவின் ஒரு நிலை என்று சொல்லலாம்.
உடல் சார்ந்த உணர்வை வலி, வெப்பம், குளிர்ச்சி, சுகம், பசி, தாகம், என்கின்ற பெயரில்தான் குறிப்பிட முடியுமே தவிர கோபம், அன்பு, விருப்பு, வெறுப்பு, இரக்கம், குரூரம் , அறிவு, ஆசை, காதல், என்பதுபோன்ற பெயர்களால் வழங்க முடியாது!
ஆனால் பலர் மொழி வழக்குக்கும் பொருள் வழக்குக்கும் மாறாக உடல் சார்ந்த உணர்வையும் அறிவு என்று சொல்கிறார்கள்!
அது பெறும் தவறாகும்!
ஒருவர் சொல்லும் கருத்து சரியாக மட்டுமே இருக்கும் என்று முடிவெடுத்து விட்டால் அதன் பின் குறைகள் தெரியாமல் போய்விடும். உலகில் அப்படிக் குறையே இல்லாதவர் வரலாற்றில் இல்லை !...
அதனால் எதைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் அதை நடைமுறை அனுபவங்களுடனும் வரையறுக்கப்பட்ட உண்மைகளுடனும் ஒப்பிட்டு உண்மையான பொருளை உணரவேண்டும்!
அதுவே அறிவுடைமை!....
/// உலகில் அப்படிக் குறையே இல்லாதவர் வரலாற்றில் இல்லை !... ///
ReplyDeleteஉண்மை...