யானையும் பூனையும் ராக்கெட் விடுமா?...
நண்பர்களே!
இன்று எனது நண்பர் ஒருவருடன் சுவையான ஒரு உரையாடல் நடந்தது!
அதன் கடைசி கட்டத்தில் மற்ற உயிரினங்களிடம் இல்லாத நிலையில் மனிதனுக்குப் பகுத்துணரும் சக்தி இருப்பதாக வாதிட்டார்!
அதற்கு ஆதாரம் கேட்டபோது, யானையும் பூனையும் ராக்கெட் விடுமா என்று கேட்டார்!
அதற்கு நான் அளித்த பதில் :
இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!
நிச்சயம் யானையும் பூனையும் ராக்கெட் விடாது!
காரணம் அவற்றால் அது முடியாது!
அவற்றுக்கு அது தேவையும் இல்லை!
அதே சமயம் மனிதனாலும் ஒரு கொசுவைப்போல் பறக்கவோ மற்றவர்களைக் கடிக்கவோ முடியாது!
காரணம் அவனால் அது முடியாது .
அது அவனுக்குத் தேவையும் இல்லை!
இதில் மனிதனின் பகுத்தறிவு எப்படி முதலிடத்தைப் பிடித்தது?\\\\\\\\\\
-----------------------------------------------
இதில் நான் முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டேன்! யானையும் பூனையும் ராக்கெட் விடாததால் உலகம் கெட்டுப்போய்விட வில்லை!.
ஆனால் மனிதன் ராக்கெட் விட்டதால் (அந்த அளவு முன்னேறியதால்) உலகமே கெட்டுப் போய் விட்டதே!
//மனிதன் ராக்கெட் விட்டதால் (அந்த அளவு முன்னேறியதால்) உலகமே கெட்டுப் போய் விட்டதே!//
ReplyDeleteசூப்பரு!!
அதுசரி...! நல்லதொரு சிந்தனை ஐயா...
ReplyDeleteஒத்துக்கொள்கிறேன் அய்யா.
ReplyDelete