குப்பையான கிணறு!
இது ஒரு கிணறு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?....
ஆம்! ஒரு கிணறு செத்துப்போய்க் குப்பைக் குழியாக மாறிவிட்டது!
முன்னர் அதில் தண்ணீர் சேந்திக்கொண்டிருந்த உருளைகூட இன்னும் கழட்டப்படவில்லை....
சமையலறையில் இருந்து கிணற்றில் தண்ணீர் சேந்த இருந்த வழிகூட இன்னும் அடைக்கப்படவில்லை!
அருகில் இருந்த மாவாட்டும் கல்கூட இன்னும் அகற்றப்படவில்லை!
அதற்குள் கிணற்றுக்கு என்ன வந்தது?
ஆம்! சுற்றுச் சூழல் கேடுகளாலும் அளவற்ற நச்சுப்பொருள் பயன்பாட்டாலும் கிணறுகள் குப்பைக் குழிகளாகி மறைந்து வருகின்றன.
இன்னும் எதையெல்லாம் தொலைக்கப் போகிறோம்?.....
No comments:
Post a Comment