ss

Monday, April 22, 2013

இயற்கை ( 15 )



வேலிக்கருவை -  உண்மையும் பொய்யும்.....

 இந்தியாவில் வேலிக் கருவை என்கிற விஷமுள் செடி மிகப் பரவலாக பரவியுள்ளது. 

ஒரு காலத்தில் அது மிகவும் பயனுள்ளதாக இருந்து அதன்பின் அதன் பயன் குறைந்து மக்களுக்கு இடையூறு செய்யும் ஒரு சவாலாக வளைந்துள்ளது.

அதுதொடர்பான பின்னணியை அறியாமல் எதோ ஒரு அமெரிக்க நிறுவனம் தடை செய்யப்படவேண்டிய தாவரங்கள் பட்டியலில் இதைச் சேர்த்துவிட்டது என்று சொல்லி வேலிக் கருவைக்கு எதிரான பிரச்சாரம் சமூக வலை தளங்களில் முடுக்கி விடப்பட்டது.

அது கணக்கற்றவர் மத்தியில் பரவி உண்மையை உணராமலே கண்மூடித்தனமாக பிரச்சாரம் போய்க்கொண்டுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் வேலிக் கருவை மக்களுக்கு அவசியமற்றதாகவும் இடையூறு செய்வதாகவும் இருப்பதால் அதை ஒழிப்பதில் தவறு கிடையாது! 

ஆனால் வேலிக் கருவைக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள பிரச்சாரத்தில் உண்மையான காரணங்களைச் சொல்லாமல் அறிவுக்கும் அறிவியலுக்கும் நடைமுறை உண்மைகளுக்கும் மாறான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

அந்தத் தகவல்கள் இயற்கையையும் தாவர இயலையும் தவறாகப் புரிந்துகொள்ளவே உதவி செய்யும். 

அதனால் பொய்யான பிரச்சாரத்தைக் கைவிட்டு உண்மையான தகவல்களைச் சொல்லுமாறு கடந்த மூன்று வருடங்களாக போராடி வருகிறேன்....

ஆனால் கொடுமை என்னவென்றால் வேலிக் கருவையை ஒழிப்பதற்கான உண்மையான காரணங்களைச் சொல்லவேண்டும் என்று கேட்ட பாவத்துக்கு நான் வேலிக் கருவையை ஆதரிப்பதாகவும் அதை வளர்க்கவேண்டும் என்று சொல்வதாகவும் புரிந்து கொண்டும் என்னசொல்கிறேன் என்பதை படிக்காமலே கண்மூடித்தனமாக எனது கருத்தை மறுப்பதாகவும்  எதிர்ப்பதாகவும் நினைத்து எதிர்க்கிறார்கள்....

அதனால் எனது நிலை என்னவென்று விரிவாக உணர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

அதனால் அது தொடர்பான எனது கட்டுரைகளையும் பதிவுகளையும் படித்துப் பார்க்க எதுவாக அவை தொடர்பான லிங்க்குகளையும் பதிவுகளையும் இங்கு தருகிறேன்....

http://www.drumsoftruth.com/2012/05/19_22.html

http://www.facebook.com/photo.php?fbid=362880010446351&set=pb.100001730669125.-2207520000.1366630878.&type=3&theater


http://www.facebook.com/photo.php?fbid=390207081046977&set=pb.100001730669125.-2207520000.1366623483.&type=3&theater


http://www.facebook.com/photo.php?fbid=392596140808071&set=pb.100001730669125.-2207520000.1366607738.&type=3&theater


http://www.facebook.com/media/set/?set=a.504369772964040.1073741837.100001730669125&type=3

இது தொடர்பான எனது முகநூல் பதிவுகள் இதில் தொடர்ந்து பதியப்படும்....
===================================================================
கேள்வி:Karuvelamaram Nalla visayame. Anaal silavakai velikkaruvai marankal irunthaal athan arukil irandu saal alavukku Paruthi, milakaai sedi pondravai karukuvidum.

என் பதில்: அது எல்லாமரங்களுக்கும் உண்டான பொதுக் குணம் கிருஷ்ணா குமார்! கற்றாழை போன்றவற்றுக்கு அருகில்கூட கொஞ்ச தூரம் விவசாயம் செய்ய முடியாது! அதற்காக வேலிக் கருவை மட்டும்தான் அப்படி என்று சொல்வது எப்படி நியாயம்?....புளியமரம் உட்பட எல்லாமரங்களும் அப்படித்தான்!

Subash Krishnasamy எப்போது இதை கருவேலம் என்று ஒருவர் சொல்கிறாரோ அவருக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்பது பொருள்! இதைப் பற்றி ஒருவர் கருத்துக்கூற விரும்பினால் கருவேல மரத்துக்கும் சீமைக் கருவைக்கும் வேறு பாடு தெரிந்தவராக இருக்கவேண்டும். அல்லது அது பற்றிக் கற்றுக்கொள்ள விரும்புபவராக இருக்க வேண்டும்! அதைவிட்டு பொய்ப் பிரச்சாரத்தை நம்புவது பயன்படாது! அந்தப் பிரச்சாரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களைப் பற்றி யார் விவாதிக்க விரும்பினாலும் நான் தயாராக உள்ளேன்!



வேலிக்கருவையை நல்ல தாவரம் என்று நான் எந்த இடத்திலும் சொல்ல வில்லை! அது பற்றிய பிரச்சாரம் தவறு என்பதுதான் நான் சொல்வது!
April 9 at 12:12pm


கேள்வி: Puliya maram oxy eduthukkondu carbon di oxide i veliyidum ungalukku theriuma?

Subash Krishnasamy : அப்படியானால் புளியமரம் ஒளிச சேர்க்கையின்போது கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுவது இல்லையா?....அப்புறம் என் புளியமரத்தை வெட்டச் சொல்லி யாரும் சொல்ல வில்லை?....



 கேள்வி: Veli karuvayin payanai mattum sollungal pothum .

நான்:  அது நிறையப் பயன் உள்ளது. கண்டிப்பாக வளர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை! அதுபற்றிய பிரச்சாரம் தவறு! பயப்பட ஒன்றும் இல்லை என்பதே எனது கருத்து! தேவையான இடங்களில் தேவைப்படும்போது அழித்துவிட்டு அதைவிடப் பயனுள்ள தாவரங்களைப் பயிரிடலாம்!



நான் இப்போதும் விவசாயம் செய்கிறேன்... இப்போதும் இந்த முட்களுக்கு இடையே நடமாடுகிறேன்....அதுபற்றிய அச்சம் இல்லை! இப்போதும் ஒப்புக்கொள்ளும்படியான செய்திகளைச் சொல்லியிருந்தால் நான் மறுக்கப்போவது இல்லை! வேலிக்கருவை ஒழிக்கப்படவேண்டிய தாவரம்தான்! ஆனால் அதற்காகச் சொல்லப்படும் காரணங்கள் உண்மை அல்ல ! உண்மையான காரணங்களைப் பற்றி உரையாடினால் பயனுள்ளதாக இருக்கும்!



கேரளாவில் ஒழித்ததற்கும் தமிழ்நாட்டில் அப்படி ஒழிக்கப்படாமல் போனதற்கும் உண்டான காரணங்களை ஆராய்ந்தால் சில உண்மைகளை உணரலாம்!



கேள்வி: நாட்டில் பஞ்சம் வந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோதுமையில் கலந்து நமது நாட்டின் விவசாயத்தை பாதிப்பதர்காகவே இங்கு அனுப்பப்பட்டது.

நான்:வேலிக் கருவை மட்டும் அல்ல நண்பரே! அதையொத்த குணம் படைத்த வரட்சிதாங்கி வளரும் அனைத்து மரங்களின் குணமும் அதுவே! அதனால்தானே விவசாய நிலங்களைப் பண்படுத்த காடுகளை அழித்தார்கள்? மரங்கள் மற்ற பயிர்களைப் பாதிக்காது என்றால் ஏன் வெட்டுகிறார்கள்? பாதிக்கவே செய்யும்! அது வேலிக்கருவையின் தனிப்பட்ட குணம் அல்ல! தற்கால நிலைமையில் அதனால் நமக்குப் பல இடையூறுகள் உள்ளன. அது அழிகப்படவேண்டிய தாவரம் என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணங்கள் அறிவுபூர்வமானவை அல்ல என்பதுதான் முக்கியம்! அதை அழிக்கவேண்டும் என்பதற்கான உண்மைக் காரணங்கள் சொல்லப்படவில்லை என்பதுதான் இதில் முக்கியம்!


Subash Krishnasamy ஒருகாலத்தில் இது பலவகையிலும் பயன்பட்டது.

தற்காலத்தில் இதனால் பெரிய நன்மை எதுவும் இல்லை !

விறகுக்குத் தவிர வேறு எதற்கும் பயன்படாது.

பெரிய மரங்கள்தான் நிழலுக்கு ஆகும்!

அதற்காக இதை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை!

ஆனால் இவை மனித நடமாட்டத்துக்கு இடையூறு செய்கின்றன.

வலிமையான முட்கள் பட்டால் வலி அதிகமாக உள்ளது!

வாகனங்கள் பஞ்சர் ஆவதற்கு இந்த முட்கள் பெரிதும் காரணமாக இருக்கின்றன.

ஆட்கள் கிடைக்காத இக்காலத்தில் இவற்றை அழிப்பது சிரமமாக உள்ளது.

இத்தனைக்கும் மேலாக ஒரு முக்கியக் காரணம் உள்ளது.

ஆதாவது நமது நாடு வறண்ட நிலங்களில்கூட மூலிகை வளம் நிறைந்துள்ளது!

இவற்றின் வளர்ச்சியாலும் ஆழமான வேர்களாலும் வேகமாகவும் அதிகமாகவும் பரவுவதாலும் மூலிகைகளுக்கு ஆபத்தான தாவரமாக உள்ளது!

இப்படிப் பல உண்மையான காரணங்கள் இருக்க இல்லாத காரணங்களைச் சொல்வதும் நம்புவதும் எந்த வகையிலும் சரியானதோ பயனுள்ளதோ இல்லை......

Subash Krishnasamy எனது பதிவுகளின் நோக்கம் வேலிக் கருவையை ஒழிக்கச் சொல்லப்படும் காரணங்கள் சரியாக இருக்கவேண்டும் என்பதே! வரட்சிதாங்கி வரரக்கூடிய பல தாவரங்களின் அருகில் எந்த மாதிரித் தாவரங்கள் வளருமா அந்த மாதிரித் தாவரங்கள்தான் வேலிக் கருவையின் அருகிலும் வரும். பாசனப் பயிர்களைப் பற்றி இங்கு பேசப்படவில்லை! பாசனப் பயிர்கள் எந்த மரத்தின் அடியிலும் வளமாக வராது! அது வேலிக் கருவையின் தனிப்பட்ட குணம் அல்ல!. ஆதாவது வேலிக் கருவையை ஒழிக்கச் சொல்லப்படும் காரணங்கள் உண்மையாக இருக்க வேண்டும்....


Subash Krishnasamy வரட்சிதாங்கி வளரும் மரங்கள் ஒவ்வொன்றின் அடியிலும் மழைக்காலங்களிலும் செழிப்பான காலங்களிலும் சில தாவரங்கள் செழிப்பாக இருக்கும். ஆனால் வரட்சிக் காலங்களில் மேல்மட்டத்தில் உள்ள ஈரப் பதத்தை மரங்கள் இழுத்துவிடுவதால் அதன் கீழ் உள்ள தாவரங்கள் வாடிக் கருகி விடும். அது வேலிக் கருவைக்கும் உண்டான குணமே! அதற்கு மட்டும் உண்டான குணம் என்பதுதான் சரி அல்ல! அதற்கான உண்மையான காரணங்களை ஏன் சொல்லவில்லை என்பதுதான் முக்கியம்? தாவரங்களைப் பற்றிய சரியான புரிதலுக்கு எதிராக வேலிக் கருவைக்கு எதிரான பிரச்சாரம் இருக்கிறது. அதுதான் தவறு!


Subash Krishnasamy கேரளத்தில் அது ஏன் விட்டுவைக்கப்படுவது இல்லை என்பதற்குச் சரியான காரணங்களை அறிய வேண்டும். கேரளம் மழை அதிகம் பெய்யும் மாநிலம். மானாவாரியாக அனைத்து விவசாயமும் செய்யும் அளவு மழை பெய்கிறது! அதனால் அவர்களுக்கு இந்த வேலிக் கருவையை ஒழிக்கவேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி அல்ல! மானாவாரி விவசாயம் பெருமளவில் நின்றுபோய் நிலங்கள் தரிசாகப் போடப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் தரிசு நிலங்களில் வேலிக் கருவை தங்குதடை இன்றி வளர்கிறது. அதை எரிபொருளுக்காகப் பயன்படுத்தும் பழக்கம் பெருமளவு மறைந்துவிட்டதால் அதை அழிப்பதற்கான முயற்சி எடுக்கப்படாததால் பெருகி விட்டது. அதனால் அரசு முன்முயற்சி எடுத்தால்தவிர அதை அழிக்க முடியாது. அதனால் உண்மையான காரணங்களுடன் உண்மையான புரிதலுடன் வேலிக் கருவையை அழிப்பதற்கான இயக்கம் நடத்தப்படவேண்டும்.

Subash Krishnasamy அதைவிட்டு விஷமப் பிரச்சாரம் தவறு என்று சொன்னால் அது வேலிக் கருவையை ஆதரிப்பதாகப் புரிந்துகொண்டு உண்மை அறியாமல் பேசுவது பயனற்றது!

Subash Krishnasamy ஆம்! விஷமப் பிரச்சாரத்தில் நான் சொன்ன காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. தவறான காரணங்கள் சொல்லப்படுகின்றன. சரியான காரணங்களைச் சொல்லுங்கள் என்றுதான் சொல்கிறேன்... என் கருத்துக்களில் முரண்பாடு ஒன்றும் இல்லை!





3 comments:

  1. பல இணைப்புகளுக்கு நன்றி ஐயா... வாசிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!

      பொய்களை நம்புவதற்கு சுலபமாக இருக்கிறது நண்பரே! உண்மையைப் பார்க்க மறுக்கிறார்கள். அதனால் நிறைய இடங்களில் பதில் சொல்லியே அலுத்துப்போய் விட்டேன். அதனால் எங்கெல்லாம் பதில் சொல்கிறேனோ அதையெல்லாம் இதில் சேர்த்து விடலாம் என்று நினைக்கிறேன். ஒரே லிங்க் கொடுத்தால் போதுமல்லவா?...

      Delete
  2. eyarkaien padaipil ethuvuem thavarana maram alla, intha ulagil elavatrirkum idam unndu ..... nam suyanalathirkaga, vendiyathai valarthu, thevai ilathathai alikirom.

    ReplyDelete