போலி மருத்துவங்கள்!...
நண்பர்களே!
அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம், யுனானி, அக்கு பஞ்சர் போன்ற பல மருத்துவ முறைகள் வழக்கில் உள்ளன.
ஒவ்வொரு மருத்துவமும் எப்படி நோய்களைக் குணப்படுத்துகின்றன என்பதற்கு அறிவியல் அடிப்படைகள் உள்ளன.
இப்போது நமது நாட்டில் வேகமாக ஒரு மருத்துவம்(?) பரவி வருகிறது!
ஆதாவது அக்கு பஞ்சர் மாதிரியே வெறும் கை விரல்களால் தொட்டுச் சிகிச்சை தரும் அக்கு டச், அக்கு பிரஸ்சர், தொடாமலேயே சிகிச்சைதரும் பிராணிக் சிகிச்சை, காதுகளால் கேட்டாலே புற்று நோய் உட்பட அனைத்தும் குணமாவதாகச் சொல்லப்படும் செவிவழித் தொடு சிகிச்சை, அதையெல்லாம் புத்தகத்தில் படித்தாலே குணப்படுத்தும் என்று சொல்லப்படும் கண் வழித் தோடு சிகிச்சை இவையெல்லாம் மருத்துவச் சந்தையில் இடம் பெற்றுள்ளன.
இவற்றுக்கும் அறிவியலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
இல்லை என்பதே எனது கருத்து!
ஆனாலும் அவற்றை ஏராளமான மக்களும் படித்தவர்களும்கூட நம்புகிறார்கள்.
அலோபதி மருத்துவத்தின் அவலங்களைச் சொல்லி அதன்மேல் கொண்ட அதிருப்தியின் வாயிலாகவே கடைசியில் சொல்லப்பட்ட போலி மருத்துவங்கள் புகழ்பெற்று வருகின்றன!
அது தாற்காலிகம்தான் என்றாலும் அதை நம்பி மக்கள் ஏமாறுவது பரிதாபத்துக்கு உரியது!
மக்கள் மனங்களில் அறிவியல் பார்வை மேலோங்கினால் தவிர இந்த அவலம் தவிர்க்க முடியாது என்றே எண்ணுகிறேன்.....
No comments:
Post a Comment