ss

Tuesday, April 30, 2013

ஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 25 )



படைப்புத் தத்துவம்....

இல்லாத ஒரு இடத்தில் இருந்து இல்லாத ஒன்றை இல்லாத ஒன்று ஆக்கியது என்பது துவக்கத்தில் அறியாமையால் உருவானதும் அதன்பின் சக மனிதனை ஏமாற்றவும் பயன்பட்ட பயன்படுகிற பயனற்ற கோட்பாடு ஆகும். 

ஆதியில் ஒன்றை இன்னொன்று ஆக்கியது என்றால் அந்த இன்னொன்றை ஆக்கியது எது என்ற கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?...

அறிவியலாளர்களே ஒரு கட்டத்துக்கு மேல் சிந்தனையைச் செலுத்த முடியாமல் திணறுகின்ற ஒன்றை சர்வ சாதாரணமாக அறிந்துவிட்டவர்கள்போல் பேசுவதும் அதை நம்புவதுமான ஒரு நிலை இன்னும் உலகில் ஆதிக்கம் செலுத்தும் கோட்பாடாகவே நீடிப்பது மனிதனின் அறிவாற்றலுக்கு நேர் எதிரான அம்சம்....

அண்டத்தில் காணப்படும் எதுவும் அது அணுவினும் சிறியதாயினும் அளவிடமுடியாத அளவு பெரியதாயினும் அவை அனைத்தும் அவற்றைவிடப் பிரம்மாண்டனான இயக்கத்தின் உறுப்புக்களே !

அதில் ஒன்று இன்னொன்றாய் மாறி அமையுமே தவிர எந்த ஒன்றும்  மற்ற அனைத்தையும் படைக்க முடியாது.

அதனால் மனிதன் உட்பட அனைத்தும் பேரண்டத்தின், பேரியக்கத்தின் உறுப்புக்களே என்பதை உணரவேண்டும்.

 அந்த உறுப்புக்களாக உள்ள உயிரும் உணர்வும் அறிவாற்றலும் கொண்ட மனிதனும் மனிதனையொத்த உயிரினங்கள் வேறு இருந்தால் அவர்களும் தான் உள்ளடங்கிய பேரியக்கத்திற்கு  மற்றும் சக உயிரினங்களுக்கு இணக்கமாக வாழ்வது எப்படி என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். 

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமது உடல்பகுதி உட்பட அண்டத்தில் உள்ள அத்தனையும் எப்போதும் அதற்குண்டான சூழல் விதிகளுக்கு ஏற்ப இயங்கிக் கொண்டுதான் இருக்கும் என்பதையும் உணரவேண்டும்.

மனித வடிவில் நடக்கின்ற தனிக்குணங்களையும் நடவடிக்கைகளையும் தவிர மற்ற அனைத்தும் நமது கட்டுப்பாட்டுக்கும் எண்ணங்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்... 

படைப்புத் தத்துவம் பற்றிய இத்தகைய  சிந்தனைகளும் செயல்பாடுகளுமே உண்மையான ஆன்மிகம் ஆகும்! 

2 comments:

  1. /// நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமது உடல்பகுதி உட்பட அண்டத்தில் உள்ள அத்தனையும் எப்போதும் அதற்குண்டான சூழல் விதிகளுக்கு ஏற்ப இயங்கிக் கொண்டுதான் இருக்கும் என்பதையும் உணரவேண்டும். ///

    உணர வேண்டிய அருமையான வரிகள்...

    ReplyDelete
  2. ஆன்மிகத்தில் ஒரு புது உயரம்

    ReplyDelete