உயிர் வதையும் மாமிச உணவும்!
நண்பர்களே!!
உயிர்களைத் துன்புறுத்துவதும் வதைப்பதும் வேறு.
மாமிசம் உண்பது வேறு!
மாமிசம் உண்பவர்கள் எல்லாம் கொடுமையாளர்கள் அல்ல!
மாமிசம் உண்ணாதவர்கள் எல்லாம் கருணையே வடிவானவர்கள் அல்ல!
பிற உயிரினங்கள் வாழும்வரை அவற்றை எப்படி நடத்துகிறோம் என்பதுதான் கருணையின் அளவுகோலாக உள்ளது! அதன்படி வாழும்வரை அன்புடனும் கருணையுடனும் நடத்தவேண்டும். பராமரிக்க வேண்டும்.
மற்றபடி ஒவ்வொரு உயிரினமும் வேறு உயிரினங்களின் அழிவின்மேல்தான் வாழமுடியும் என்பது வாழ்க்கை விதி!
அதை ஓட்டி மனிதனும் தான் வாழப் பிற உயிரினங்களில் பலவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் அழிப்பதைத் தவிர்க்க முடியாத வாழ்வு நெறியாகக் கொண்டு விட்டான்.
அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல!
சில உயிரினங்களைப் பொருத்தமட்டில் மாமிசம் உண்பவர்கள் நேரடிக் காரணம் ஆகிறார்கள். மற்றவர்கள் மறைமுகக் காரணம் ஆகிறார்கள்!
அதை மாற்றுவதுதான் தர்மம் என்றால் அதற்கான தெளிவான நடைமுறை சாத்தியமான வழியைச் சொல்ல வேண்டும்!
அதுதான் பயனுள்ளதாக இருக்கும்!
இது வாதம் அல்ல! சிந்திக்க ஒரு வேண்டுகோள்!....
நல்ல விளக்கம்...
ReplyDelete