காலப் பயணம்....
காலமும் தூரமும் ஒரு பாதையோ. ஒரு திசையோ அல்ல!
அல்லது ஒரு பொருளோ ஒரு உணர்வோ, ஒரு சக்தியோ எதுவும் அல்ல!
சூழலைப் புரிந்துகொள்ள பயன்படுத்திக்கொள்ள மனிதன் கருத்தளவில் வகுத்துக்கொண்டே ஏற்பாடே!....
இப்படி இருக்க காலப் பயணம் செய்து கடந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பயணம் செய்யலாம் என்று நம்புவதும் அது சாத்தியம் என்று அறிவியல் விளக்கம் கொடுக்க முயல்வதும் என்ன நியாயம்?...
ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடிக் கணக்கான அணுக்கள் உள்ளே சேர்வதும் வெளியேறுவதுமான ஒரு குறிப்பிட்ட வடிவம்தான் மனிதன்.
குரிப்பிட்டகாலம் குறிப்பிட்ட வடிவிலும் இயங்கு முறையிலும் வாழ்ந்து விட்டு இயற்கையோடு கலந்துவிட மட்டுமே அவனால் முடியும்
இந்த நிலையில் வாழும் மனிதன் எந்த ஒரு பொருள் வடிவமும் இல்லாத கருத்து வடிவான காலத்தில் பயணம் செய்ய முடியும் என்பது அபத்தமாக மட்டுமே இருக்க முடியும் .
நிலையற்ற அணுச் சேர்க்கையும் பிரிவுமான உடலியல்வாழ்க்கையில் இதில் எந்த வினாடியில் இருக்கும் உடம்பைக்கொண்டு காலப்பயணம் செல்ல முடியும்?
காலப் ப் பயண காலத்தில் மனித உடம்பின் பாத்திரம் என்ன?
காலப் பயண காலத்தில் மனித அறிவின் பாத்திரம் என்ன?...
அவனுடைய சக மனிதர்களுடனான தொடர்பும் உலகத்துடனான தொடர்பும் எப்படி?..
மூட நம்பிக்கைகளுக்கும் காலப்பயண நம்பிக்கைக்கும் வேறுபாடு என்ன?...
அதைவிட அறிவியலுக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது!..
அதன் மூலம் அறிவியல் ரீதியாக வாழ்வைப் புரிந்து கொண்டு சரியாக வாழ்வதற்குப் பதிலாக அறிவுக் குழப்பம் ஏற்பட்டு மக்கள் மேலும் மேலும் மூடநம்பிக்கைப் படுகுழியில்தான் தள்ளப்படுவார்கள்!.....
------------------------------------------------------------------------------------
நண்பர்களுடன் உரையாடியபோது எனது கருத்துக்களாக வெளிப்பட்டவை:
ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் எதிர்காலம் இறந்தகாலமாக மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருந்தாலும் எதிர்காலமும் இறந்தகாலமும் சமமே! இதில் நிகழ்காலத்துக்கு இடம் எங்கே?....
எதிர்காலத்தையும் இறந்தகாலத்தையும் நிகழ்காலம் என்ற இல்லாத ஒன்றால் பிரிக்கவே முடியாது. காரணம் எதிர்காலத்துக்கும் இறந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளி எதுவும் இல்லை!,,,,நிகழ்காலம் என்பது கால ஓட்டத்தின்மேல் நம்மால் எண்ணிப் பார்க்கப்படும் மனத்தால் நினைக்கப்படும் கற்பனைக் கோடுகளே! காலத்தின்மேல் இயக்கப்படும் Flying shuttle! ! அவ்வளவே!...
ஒவ்வொரு வினாடியில் கோடியில் ஒரு பங்குகூட எதிர்காலமாக இருந்து இறந்தகாலத்தில் பாய்கிறது. இதில் நிகழ்காலம் எங்கே?....
இப்போது வரை இருந்த இன்றையநாள் இறந்தகாலம். இதற்குமேல் வருவது எதிர்காலம். இதில் நிகழ்காலம் எங்கே?....
ஒரு நொடியிலும் இறந்தகாலமும் வருங்காலமும் சேர்ந்துதான் உள்ளது.....
அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதுவும் எதிர்காலம் இறந்தகாலத்தில் விழும் வீழ்ச்சியாகவும் இரண்டும் சேர்ந்து ஓடும் ஓட்டமுமாகத்தான் இருக்கமுடியும்...
இறந்தகாலமும் எதிர்காலமும் பிரிக்கமுடியாத ஒன்றாகச் சேர்ந்துள்ளது! அதற்கு நடுவில் நிகழ்காலம் என்பது எப்படி இருக்க முடியும்? எதிர்காலம் இறந்தகாலத்தில் விழும்போது அத்தோடு சேர்ந்து கொஞ்சதூரம் ஓடும் ஓட்டத்தைத்தான் நிகழ்காலம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.....அது உண்மை அல்ல! மாயத் தோற்றம்....
இறந்தகால அனுபவங்களை படிப்பினைகளாகக் கொண்டு வருங்கால வாழ்வைத் திட்டமிட்டு வாழ்வதே நமது வாழ்க்கை நிகழும் காலம் சிறப்பாக இருக்கச் சரியான வழி ஆகும்!.
காலம் பெருவெள்ளமாகக் கடந்துபோவதாகவே உணர்கிறோம். அதை அடிப்படையாகக் கொண்டுதான் வாழ்கிறோம். அதை எதிர்காலம், இறந்த காலம், நிகழ்காலம் என்று மூன்று காலங்களாகச் சொல்கிறோம். ஆனால் எதிர் காலத்தையும் இறந்த காலத்தையும் வரம்பற்ற ஒன்றாகப் பார்க்கிறோம். உணர்கிறோம். ஆனால் நிகழ்காலம் என்று சொல்லிக் கால வெள்ளத்தில் ஒரு கற்பனையான புள்ளியை வைத்து அதனுடன் கொஞ்சதூரம் ஓடுகிறோம் . அவ்வளவே! அதை இதுதான் என்று சொல்ல முடியாது.....

சிந்திக்க வேண்டிய சிறப்பான உண்மையான கருத்துப் பயணம்...
ReplyDeleteநன்றி ஐயா...
நன்றி நண்பரே!..
Delete