ss

Monday, May 13, 2013

எனது மொழி ( 132 )


அவசர சிகிச்சை.....

பெரிய மருத்துவ மனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு இருப்பது ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளைக் காப்பாற்றவா? 

அவர்களைக் காப்பாற்றவும் செய்யாமல் கொலையும் செய்யாமல் சிறுகச் சிறுகக் கொல்வதன்மூலம் இழுத்தடித்துப் பணம் கொள்ளை அடிக்கவா?...

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து உயிருடன் வெளி வருபவர்களை விட பிணமாய் வெளி வருபவர்கள்தானே அதிகம்?....



நான் இப்போது கடினமான நிலையில் இருப்பவர்களுக்குச் சொல்வதெல்லாம், 

விபத்தில் சிக்கியவர்களைத் தவிர மற்ற கடுமையாக நோய் முற்றிப் போனவர்களையும் வயதானவர்களையும் பொறுத்து .....

உயிருக்கு உத்திரவாதம் இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவில் வையுங்கள். 

இல்லாவிட்டால் சாதாரண வார்டில் வைத்து வலி இல்லாமல் மட்டும் செய்யுங்கள். 

சாகும் முன் கண்களால் அனைவரும் பார்த்தாவது அழுது மனதை ஆற்றிக் கொள்கிறோம். 

நோயாளியும் தனிமையில் வதைப் பட்டுச் சாகாமல் அனைவர் முகத்தையும் பார்த்துக்கொண்டே சாகட்டும் 

என்று மருத்துவர்களிடம் சொல்லுங்கள் என்பதுதான். 

நோயாளியை மட்டும் அல்ல பயங்கரக் கொள்ளையின்மூலம் அவர்களின் குடும்பத்தையும் பொருளாதாரக் கொலை செய்கிறார்கள்!....

நான் சொல்வது தவறா?......

அரசாங்கம் இதற்கென ஒரு சிறந்த மருத்துவர் குழுவைக் கொண்ட பறக்கும் படையை அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவ மனையையும் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைப் பரிசோதித்து சரியான காரணத்தால்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா?...உண்மை நிலவரம் நோயாளி குடும்பத்தாருக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்யவேண்டும்.

தவறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்....

ஒரு நோயாளியைச் சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் வந்து தொலைபேசியில் சொன்னால் உடனே பறக்கும் படை அந்த மருத்துவ மனைக்குச் சென்று சோதனை செய்ய வேண்டும்.

தகவல் ரகசியமாக வைக்கப்படவேண்டும்....

புகார் செய்தால் அதற்கு நடவடிக்கை எடுத்தாகணும் என்கின்ற நிர்பந்தம் இருப்பதால் கொஞ்சமாவது மக்கள் பயன் அடைவார்கள் அல்லவா!...

என்ன செய்வது குற்றவாளிகள் ஆளும் நாட்டில் எப்படியெல்லாம் சிந்திக்கவேண்டியுள்ளது!....

2 comments: