ss

Wednesday, May 22, 2013

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 26 )

கடவுள் நம்பிக்கை!  

கடவுளை நம்புபவர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை!....

அப்படி இருப்பது உண்மையானால் இத்தனை கோவில்கள் உள்ள உலகில் கடவுளுக்கு ஒரு கோவில் இருந்திருக்கும்!

கடவுளை வேண்டிப் பிரார்த்தனைகள் நடந்திருக்கும்!

கடவுளுக்காக ஒரு சிலையாவது இருந்திருக்கும்!

கடவுளுக்கு ஒரு திருவிழாவாவது நடந்திருக்கும்!

கடவுளுக்காக தாடிகள் விடப்பட்டு சிலபல மொட்டைகளாவது அடிகப்பட்டிருக்கும்!

ஆடுகள் வேண்டாம், எருமைகள் வேண்டாம், கோழிகள்கூட வேண்டாம், ஒரு கோழிக் குஞ்சாவது அறுக்கப்பட்டிருக்கும்.

கடவுளுக்கு உண்டியல் வைப்பாரும் இல்லை. அதில் சில்லரைக் காசுகள்கூடப் போடுவாரும் இல்லை! 

கடவுளுக்கான துதிப்பாடல்களோ பஜனைகளோ நடப்பதும் இல்லை சுண்டல் வழங்கப்படுவதும் இல்லை!.

கடவுளின் பெயரால் கல்யாணம் நடப்பதோ புரோகிதம் செய்யப்படுவதோ தாலி கட்டப்படுவதோ நிச்சயம் இல்லை!

குழந்தை பிறந்தாலும் கிழவன் இறந்தாலும் கடவுளின் பெயரால் எந்தச் சடங்குகளும் செய்யப்படுவதில்லை! 

கடவுளை வேண்டி எந்தப் புண்ணிய யாத்திரையும் செய்யப்படுவது இல்லை!

எந்தப் பேயை விரட்டவும்  எந்தச் சாத்தானை விரட்டவும் கடவுளின் பெயரால் மந்திரங்கள் ஓதப்படுவது இல்லை! 

எந்தப் பிரசங்கிகளும் கடவுளைப் பற்றிப் பிரசங்கம் செய்வதில்லை!

சுருக்கமாகச் சொன்னால் யாருடைய மனதிலும் கடவுளின் உண்மையான பிம்பமே கிடையாது! 

கண்ட கண்ட பெயர்களைக் கடவுள்களாக வாயால் சொல்கிறார்களேதவிர அனைவருக்குமான ஆன்மிகம் எது என்று அறியக்கூட விரும்புபவர்கள் இல்லை! 

ஆனாலும் துணிச்சலாகக் கடவுளை நம்புவதாக எப்படிச் சொல்கிறார்கள்?.....

சொல்பவரும் கேட்பவரும் ஏமாளிகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்!....










No comments:

Post a Comment