ss

Saturday, May 25, 2013

அரசியல் ( 48 )


மறைந்தவர்கள் அனைவரும் நல்லவர்களா?

நமது நாட்டில் மக்கள் மனங்களில் ஒரு பெரும் நோய் உள்ளது. அல்லது உருவாக்கப்பட்டிருக்கிறது. 

ஆதாவது ஒருவர் தன் வாழ்நாளில் புகழ்பெற்றவராக இருந்துவிட்டால் அவர் நல்லவராயிருந்தாலும் சரி, கெட்டவராக  இருந்தாலும் சரி அவரைப் புகழ்பாடுவது அல்லது விமர்சிக்காமல் விடுவது. 

இந்த இரண்டுக்கும் காரணம் நடைமுறைவாழ்வில் காண்பவர்களுள் மக்களின் மனதுக்குப் பிடித்தமானவர்களாக வேறு யாரும் தெரியாமல் போவதே!

அது ஏன் செத்துப் போனவர்கள் எல்லோரும் நல்லவர் ஆகிறார்கள்? அவர்கள் தவறே செய்தததில்லையா? நிச்சயம் தவறு செய்திருப்பார்கள். தவறே செய்hமல் வாழும் ஒரு மனிதரை நாம் காணவே முடியாது. அப்படியொருவர் இருந்தால் அவர் உயிருள்ள உணர்வுள்ள ஒரு மனிதராக இருக்கமுடியாது. காரணம் தவறும் செய்பவன்தான் மனிதன். 

தவரே செய்யாதவன் ஒருவன் உலகில் இருந்தால் அவன் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? அவன் திருத்திக்கொள்ள என்ன இருக்கிறது? அவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்று எந்த அளவுகோலைக் கொண்டு மதிப்பிட முடியும்? பிறருக்கு வழிகாட்டத்தான் அவர்களுக்கு என்ன அறிவிருக்க முடியும்?

ஆதாவது வாழும் மனிதரில் இரண்டு வகைதான் இருக்க முடியும். முதலாவது தவற்றை உணர்ந்து திருத்திக்கொண்டு சரியான பாதையில் பயணம் செய்பவர்கள். இரண்டாவது தனது தவறுகளை உணராமலும் திருத்திக் கொள்ளாமலும் மேலும் மேலும் தவறான பாதையில் செல்பவர்கள். 

முதல்பாதையில் எந்த அளவு ஒருவர் பயணிக்கிறாரோ அந்த அளவு தனக்குத் தானே மட்டுமல்ல பிறருக்கும் வழிகாட்டக்கூடியவராக வாழ்கிறார். மனித சமுதாயத்துக்கே வழிகாட்டக்கூடியவர்களாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் வாழ்ந்து மறைந்தவர்களும் எந்தக் காலத்திலும் இருந்தார்கள். இப்போதும் இருக்கவே செய்கிறார்கள்.

அதேபோல இரண்டாவது முறையின்படி வாழ்வை வாழ்பவர்கள் அதில் எந்த அளவு வலுவானவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவு சரியற்ற வாழ்வை வாழ்கிறார்கள் என்பது பொருள் அவர்கள் மக்கள் மத்தியில் நிறைய அறியப்பட்டிருந்தாலும் மதிப்புமிக்கவர்களாக அறியப்படாமல் எந்த அளவு தவறானவர்களோ அந்த அளவுக்க இழிவானவர்களாக எண்ணப்படுவார்கள்.

சரி, சமுதாயத்துக்கு உகந்த மேன்மக்கள் யார் என்பதை எப்படி மதிப்பிடுவது? 

பலராலும் பாராட்டப்படுவதை வைத்தோ அவருக்கு இருக்கும் வசதி வாய்ப்புக்களை வைத்தோ அவருக்கிருக்கும் அதிகாரம் அல்லது புகழை வைத்தோ மதிப்பிடலாமா? நிச்சயம் முடியாது? காரணம் அதனால் எந்தப்பயனும் இல்லை!

அவர் வாழும் அல்லது வாழ்ந்த இந்த சமுதாயத்தில் அவருடைய வாழ்வு எப்படிப் பட்டதாக இருந்தது? சமுதாயத்தால் அவர் நன்மை அடைந்தாரா? அல்லது சமுதாயம் அவரால் நன்மை அடைந்ததா? அவருடைய சொல்லும் செயலும் எப்படிப்பட்டதாக இருந்தன? 

ஒரு மரம் தான் அழியும் முன்பு தன்னைப்போல் பல மரங்களை உருவாக்கும் எனதர விதைகளை நிலத்தில் விட்டுவிட்டுத்தான் மறைகிறது. 

தான் இருக்கும்போதே தன்னைப்போல் வேறு பல மரங்களும் வளர்நத பின்புதான் மறைகிறது. 

அதுபோல ஒரு மனிதன் தான் வாழுங்காலத்தில் தனக்குப்பின் தன்னைப்போலவே சந்ததிகளை உருவாக்கி விட்டுச் செல்வதுபோல சமுதாய வாழ்வில் தான் போற்றிவளர்த்த பண்புகளைப் பின்பற்றுவோரும் அடுத்த தலைமுறையில் பல்கிப்பெருகும் விதத்தில் வாழ்ந்து சென்றிருக்கவேண்டும். 

அதற்கு அவர் உருவாக்கிய அல்லது போற்றிப் பாதுகாத்த அல்லது பின்பற்றி வாழ்ந்த உயர் பண்புகளும் கருத்துக்களும் மக்கள் மனதிலே விதைகளைப்போல் விழுந்து முளைவிட்டிருக்க வேண்டும்.

அத்தகைய நல் விதைகளை சமுதாயத்தில் யார் விதைத்துவிட்டு மறைகிறார்களோ அவர்கள் தான் சரியாக வாழ்ந்தவர்கள். அவர்கள்தான் போற்றத்தகுந்தவர்கள் அவர்களின் கருத்துக்கள்தான் சமுதாயத்தை வழிநடத்தும் தத்துவங்கள்!

ஆனால் அத்தகைய பண்பாடுகள் எல்லாம் மக்கள் மனதில் இல்லாததால் முன்னோடிகளால் வளர்க்கப்படாததால் மக்களின் சராசரி மனநிலையும் அறிவுத் தரமும் எந்த மட்டத்தில் இருக்கறிதோ அதைப் பிரதிபலிப்பதாகத்தான் அவர்களின் சமுதாயத் தேர்வும் அமைகிறது. 

அவர்களின் வாழ்க்கையின் பெரும்பாகம் உயர் பண்பாட்டு வளர்ப்புக்குக் கொடுக்கப்படாததால் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்த சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்புடைய நிலைமைகளை நல்லதென்றும் அப்படியல்லாததைக் கெட்டதென்றும் நினைகிறார்கள்.

 அந்த மனநிலையில் அத்தகைய உதவி யார் தமக்கு அளிக்கக்கூடும் என்று அவர்கள் மனதுக்குப் படுகிறதோ அவர்களைப் புகழ்பெற்றவர்களாhகக் கருதுகிறார்கள்.

முன்பு அப்படி உயர்வாழ்வு வாழ்ந்தவர்களாக யார் இவர்கள் மனதுக்குப் படுகிறார்களோ  அல்லது அத்தகைய எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அவர்களைப் போற்றித் துதிபாடுவதோடு அத்தகையவர்களை விமர்சனத்துக்ககு அப்பாற் பட்ட மகான்களாகவும்  எண்ணுகிறார்கள். 

ஆனால் அத்தகைய பொய்யான மதிப்பீடுகளுக்கும் உண்மை நடப்புகளுக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இல்லை!

இத்தகைய இழிநிலை  இருப்பதால் சமுதாயத்தின் மதிப்புக்கு உரியவர்களாகத் தீயவர்களும் உண்மையில் சமூக விரோதிகளும்கூட வரமுடிகிறது.

குற்றவாளிகள்கூட வணங்கப்படுகிறார்கள்! 

நாடு எப்போது உருப்படும்?.....

No comments:

Post a Comment