ss

Sunday, May 26, 2013

அரசியல் ( 49 )

ஒரு நாட்டின் தலைவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களாகவும் திருடர்களாகவும் மோசடிப் பேர்வழிகளாகவும் உள்ள ஒருநாட்டில் அரசுகள் எப்படி இருக்கும்?

அதைச் சகித்துக்கொண்டு வாழும் நாட்டுப்பற்றுடைய நல்லவர்களின் மனம் எப்படி இருக்கும்?.....

நாட்டில் தவறுகள் அடி முடி தெரியாத படி உயர்ந்து நிற்கின்றன !

அதன் மூலாதாரத்தை அறிவதும் ஒழித்துக்கட்டுவதும் தவிர்க்கமுடியாத தேவைகள்!

சட்டத்தை மீறாமல் ஒரு மனிதன் வாழ முடியாத அளவு நியாயங்கள் செத்துக்கொண்டிருக்கின்றன.

அதற்கு உயிர்கொடுக்க வேண்டும் என்றால் நாட்டிலுள்ள அப்பழுக்கற்ற தேசப் பற்றாளர்கள் கூடி நாட்டின் மானத்தையும் மக்களின் வாழ்வையும் மேம்படுத்த ஒரு பொதுக் கருத்தையும் திட்டத்தையும் உருவாக்க வேண்டும்!

தவறுகளுக்கு இடம்கொடுக்காத விதிகளுடன் ஒரு விடுதலை இயக்கத்தைத் துவங்கவேண்டும்!

அதுதான் நாட்டைக் குற்றவாளிகள் கைகளில் இருந்து விடுவிக்கும். குற்றங்களை ஒழித்துக்கட்டும்.

No comments:

Post a Comment