ss

Saturday, May 4, 2013

யோகக் கலை ( 5 )

ஐம்பதிலும் வளையும்!...

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா  என்பார்கள்...

ஆதாவது சிறு வயதில் ஏற்படாத நல்ல பழக்கங்களை முதிர்ந்த வயதில் ஏற்படுத்த முடியாது என்பது அதன் பொருள்.

அது உடல் உழைப்புக்கும் அது சார்ந்த பழக்கங்களுக்கும் பயிற்சிகளுக்கும் மற்றும் அனைத்துக்கும் பொருந்தும்.

ஆனால் இளம் வயதில் பல்வேறு காரணங்களால் தவறவிட்டவர்கள் முதிர்ச்சியடைந்த பின்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டியது இல்லை!. 



காரணம் எந்த வயதில் எதை எப்படிச் செய்ய வேண்டுமோ அந்த வயதில் அதை அப்படிச் செய்ய வேண்டும்...

சிறுவயதில் நன்றாக விளையாண்டு, பயிற்சிகள் செய்து, உடலை விருப்பம்போல் வளைத்து எல்லாவித இயக்கங்களுக்கும் தகுதி உடையதாய்ப் பேணுதல் உயர்ந்ததே! 

ஆனால் அப்படி இல்லாமல் குறிப்பிட்ட வயதைத் தாண்டியவர்கள் தாங்களும் நல்லபடி விளையாடவேண்டும் பயிற்சி செய்ய வேண்டும் என்று விரும்பினால் கவலைப்படவேண்டியது இல்லை! 

பொதுவாக வாழ்க்கைக்கு எந்த விதமான அசைவுகள் எல்லாம் தேவையோ அந்த அசைவுகளுக்கு ஏற்றதாக ஒவ்வொருவர் உடம்பும் பக்குவப்பட்டு விடுகிறது! 

அதிகமான சிக்கலான அசைவுகள் தேவைப்படாத வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அல்லது நேரம் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட சில வகையான அங்க அசைவுகளுக்கு மேல் இயங்காமல் இருப்பதால் அவர்களின் உடல் உறுப்புக்கள் அதற்கேற்ற முறையில் செயல்பட மட்டுமே தகுதி உடையவை ஆகிவிடுகின்றன. 

அனைத்து உடம்புக்கும் பொதுவாக இயங்கும் இதயம், நுரையீரல் போன்ற உறுப்புக்களும் தேவைக்கேற்ற அளவு மட்டும் செயல்படும் இயல்பை அடைந்து விடுகின்றன. 

அதன்காரணமாக ஏதாவது ஒரு நாள் அவசரத் தேவைக்காக சில அடிகள் வேகமாக நடந்தாலும், ஓடினாலும், சில படிகள் ஏறினாலும் கூட உடல் ஒத்துழைக்க மறுக்கிறது, வலிக்கிறது, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது, சுழுக்கு ஏற்படுகிறது,  இன்னும் இதயம் வேகமாகது துடிக்கவும் செய்கிறது.... 

குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னால் அறிவில் தெளிவு ஏற்ப்பட்டு உடல் கட்டுமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று உணரும்போது உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது! அது பழக்கத்தினால் நேரும் விளைவு. 

ஆனால் அதற்காக மனம் ஒடிந்து போக வேண்டியது இல்லை! 

காரணம் அந்த நிலையிலும் உடம்பைச் சிறப்பானதாக மாற்றி அமைக்க முடியும் .

ஆதாவது பயிற்சி என்பதை இரண்டு விதிகளாக வரையறுக்கலாம்...

 முதலாவது ஏற்கனவே இருக்கும் நிலையில் இருந்து அனைத்து விதத்திலும்  கூடுதலான எல்லைகளை உடம்பின் இயக்கங்கள் அடையவேண்டும் என்பதை  நோக்கமாகக் கொண்டு பயிற்சி செய்வது! உடம்பின் கட்டுக்கோப்பை மேம்படுத்திக்கொண்டே இருப்பது. 

 இரண்டாவது விதி தாங்கள் நினைத்த எல்லையைத் தொட்டபின்னால் அந்த நிலை பலவீனமடையாமல் தொடர்ந்து பயிற்சியின்மூலம் ஈடு செய்துகொண்டிருப்பது! 

இதில் முதல் விதியின்கீழ் அனைத்து வயதுள்ள அனைத்து மக்களும் பயிற்சி செய்து பயன் பெறலாம்.....

தங்களின் உடல் எந்த அளவு வளைகிறதோ அதைவிட கொஞ்சம் கூடுதலாக வளைப்பது, தங்களின் உடல் எவ்வளவு சுமக்குமோ அதைவிடக் கொஞ்சம் கூடுதலாகச் சுமப்பது, தங்களால் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அதைவிடக் கூடுதலான தூரம் நடப்பது, தங்களால் எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ அல்லது ஓட முடியுமோ அதைவிடக் கொஞ்சம் அதிகமான வேகத்தில் நடப்பது அல்லது ஓடுவது, என்பதைப் பயிற்சி முறைகளாகக் கொள்ள வேண்டும். 

அதன்காரணமாக உடம்பு தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்களைப்போல அதிகம் வளையாவிட்டாலும், அவர்களைப்போல வித்தைகள் செய்ய முடியாவிட்டாலும், அவர்களுக்குப் பயிற்சியால் கிடைக்கும் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். காரணம் பயிற்சியின் காரணமாகத் தேவை இல்லாத குப்பைகள் உடம்பில் இருந்து வெளியேறுகின்றன. இதயம், நுரையீரல் மற்ற செரிமான உறுப்புகள், சுரப்பிகள் அனைத்தும் தங்களின் வலிமையையும் திறனையும் வளர்த்துக்கொள்கின்றன. 

அதனால் விளைவில் ஐந்தில் வளைப்பவர்களும் ஐம்பதில் வளைப்பவர்களும் ஒன்றாகிறார்கள்.கிடைக்கும் பயனும் இருவருக்கும் ஒரே மாதிரித்தான் நன்மை அளிக்கிறது!...

வளையும் எல்லைகளைப் பற்றிய கவலை சர்க்கஸ் காரர்களுக்கும் தொழில்முறைப் பயிற்சியாளர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் மட்டும்தான் தேவை !


நல்லமுறையில் உடல்நலத்தைப் பேண விரும்பும் சராசரி மக்களுக்கு அந்தக் கவலை அவசியம் இல்லை! 

ஐம்பதிலும் தேவையான அளவு வளையும்!....

அனைத்து நன்மைகளும் கிடைக்கும்!....


2 comments:

  1. It is en garaging article.anybody can practice exercise at any age.

    ReplyDelete
  2. Due to my joint pain I am not able to walk even 100feet, not able to sit in the floor. please guide me to practice yoga without sitting on the floor.

    ReplyDelete