தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டுமா?....
இப்போதெல்லாம் தினமும் நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று நிறையப்பேர் வற்புறுத்துகிறார்கள் .
அதற்கான காரணங்களையும் பல விதமாகச் சொல்கிறார்கள்...
அதிலும் அமெரிக்கர் அல்லது ஜப்பானியர் யாராவது சொன்னால் அது வேத வாக்காகவே ஆகிவிடுகிறது!...
நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறதே தவிர யார் குடிக்கவேண்டும் யார் குடிக்கவேண்டியது இல்லை என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை!
எதனால் தண்ணீர் குடிக்க வேண்டும்?
தாகம் எடுத்தால்!
தாகம் எதனால் எடுக்கிறது?
நாம் உண்டது கரைக்கப்பட்டுச் செரிமானம் ஆகவும் நமது உடம்பில் வெப்பத்தாலும் வேறு காரணங்களாலும் வெளியேறும் நீரை ஈடு செய்வதற்காகவும்..
அப்படியானால் தாகம் இல்லாவிட்டால் தண்ணீர் குடிக்கவேண்டியது இல்லை அல்லவா?..
நிச்சயம் இல்லை!
அப்படியானால் தாகம் இல்லாமல் ஏன் தண்ணீர் குடிக்கவேண்டும்?
தேவை இல்லை!
குடிக்கச் சொல்கிறார்களே!
அப்படியானால் சம்பந்தப்பட்டவர் ஒரு நோயாளியாக இருக்க வேண்டும்.
ஆம்! ஒருவருக்குத் தாகம் ஏற்ப்படாமேலே தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்!
அந்தக் காரணத்துக்குப் பெயர்தான் நோய்!
தண்ணீர் நிறைய அருந்துவது ஒரு மருத்துவமாக மட்டும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கருத்து!..
அதற்கான தேவை இருக்கவேண்டும்.
அப்படி அதிக அளவு தண்ணீர் குடித்துக் கரைத்து வெளியேற்றவேண்டிய அளவு உடலில் கழிவுகள் இருக்க வேண்டும்...
தண்ணீர் நிறையக் குடிப்பதன்மூலம் கழிவுகளைச் சுத்தப்படுத்தி நோய் குணப்படுத்தப்படுகிறது!
ஆதாவது தண்ணீர் தேவைக்கு அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் தீமையை விட அங்கு நன்மை அதிகமாக கிடைக்கிறது!
அப்படி இல்லாமல் உடல் நலத்துடன் இருப்பவர்கள் தாகம் எடுக்காமல் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் அருந்துவதால் நன்மை எதுவும் இல்லை!
மாறாகத் தேவையின்றிச் சிறுநீரகங்கள் உட்படப் பல பாகங்களுக்கும் வேலை கொடுக்கிறோம். அது உண்மையில் மறைமுகமாக நமக்கு நாமே தீங்கு விளைவித்துக்கொள்வதே ஆகும்.
ஆதாவது நோயில்லாமல் மருந்து உண்பதற்குச் சமம் ஆகும்.
ஆகையால நோயற்றவர்கள் தாகம் எடுக்குமளவு தாகம் எடுக்கும் நேரத்தில் மட்டும் தண்ணீர் குடித்தால் போதும் என்பதே சரியான முறை ஆகும்!
நல்ல விளக்கம் ஐயா... நன்றி...
ReplyDeleteRespected sir,
ReplyDeleteWhy naturopathist telling always about drinking plenty of water after waking up? Is this just a treatment or should it be followed as life routine?
Regards
Anand