ss

Wednesday, July 17, 2013

பங்கு வர்த்தகம் ( 3 )



ஏன் அதைச் செய்கிறார்கள்?


பங்கு வர்த்தகத்தைச் சரியாகச் செய்து தாங்கள் போடும் பணத்துக்கும் மேலாகப் பல மடங்கு அதிக லாபம் பார்க்க ஒவ்வொருவருக்கும் விருப்பம்.

ஆனால் அந்த அளவு ஒவ்வொருவரும் அதன் நெளிவு சுழிவுகளை அறிந்தவர்கள் அல்ல! 

அதனால் என்ன? 

எதற்குத் தேவை இருக்கிறதோ அதற்குச் சந்தையில் கிராக்கி இருந்துகொண்டே இருக்கும்.

அதனால் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்து எல்லோரையும் பணக்காரர்கள் ஆக்குவதற்கென்றே ஆபத் பாந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். 

அவர்கள்தான் ஆலோசனை வழங்குபவர்கள்!. 

நான் பல முறை கேட்டிருக்கிறேன் . பங்குகளின் விலை குறைவாக இருக்கும்போது  வாங்க வேண்டும் . அதிகமாக ஏறியவுடன் விற்கவேண்டும் என்பது இவர்களின் ஆலோசனையாக உள்ளது. 

அதேபோல உச்சத்தில் இருக்கும்போது விற்றும் வைக்கலாம். குறைந்தபின் வாங்கி  லாபத்துடனும் வெளி வரலாம். 

ஆனால் நான் கெட்ட ஒரு கேள்விக்கு உள்ளூர் தரகர்களில் இருந்து தொலைக்காட்சியில் ஆலோசனை சொல்லும் கனவான்கள் வரை யாரும் சரியான பதில் சொல்லவில்லை! 



அந்தக் கேள்வி:

குறைவான விலைக்கு வாங்கி வைத்து விலை ஏறியவுடன் விற்பதும் லாபம் பார்ப்பதும் சரியே! அதிக விலைக்கு விற்றுவைத்து குறைந்தபின் வாங்கி  லாபம் பார்ப்பதும் சரியே! 

கேள்வி என்னவென்றால் விலை கிடுகிடுவென ஏறியபின்னால் குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் லாபம் பார்க்க விற்கும்போது அடுத்து விலை இறங்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில் அதை வாங்குபவர்கள் ஏன் வாங்குகிறார்கள்?

அதேபோல அதிகவிலைக்கு விற்று கடகடவெனக் குறைந்த நிலையில் வாங்கி லாபத்துடன் வெளி வருபவர்களிடம் அடுத்து விலை ஏறுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ள நிலையில் எதற்காக அவ்வளவு குறைந்த விலைக்கு விற்பவர்கள் விற்கிறார்கள்?

இப்படிக் கேட்டால் அவர்கள் மொழியில் என்னென்னவோ சொல்கிறார்கள் . ஆனால் நம்பக்கூடியதாக இல்லை! 

நம்பும்படியான காரணத்தை அறிந்தவர்கள் சொல்லுங்கள்!....

6 comments:

  1. சரியாகத் தெரியலை என்பது உண்மை...

    ReplyDelete
    Replies
    1. அப்படி இருந்தும் எண்ணற்றவர்கள் இந்தப் புதை சேற்றில் சிக்கிக் கொள்கிறார்களே!.....

      Delete
  2. வணக்கம் அய்யா!

    நீங்கள் இங்கு வைக்கும் கேள்விகள் சரியானவைதான். ஆனால் இது மக்களின்மன நிலைமையை பொறுத்த வியாபாரம். இங்கு வியாபாரம் செய்கிறவர்கள் கைதேர்ந்த, மன உறுதி மிக்கவர்கள், தேவைக்கு அதிகமான பணம் இருபவர்கள் மட்டும்தான் வெற்றி பெறுகின்றனர்.

    சாதாரன மக்கள் என்னதான் விலை அதிகம் ஏறினாலும் இன்னும் ஏறட்டும் என்று விற்காமல் வாங்காமல் காத்து இருப்பார்கள். அதுமட்டும் இன்றி சிறு முதளிடளர்கள் விலை மேலே போகிறது என்று வாங்குவார்கள்.அப்போதுதான் இந்த பெரும் முதலைகள் தங்களிடம் உள்ள பங்குகளை ஏமாந்தவர்களின் கைகளில் கொடுத்து விட்டு ஒதுங்கு கொள்வார்கள். அதை வாங்க ஆள் இல்லாமல் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் சிறு முதலிட்டாளர்களுக்கு ஏற்படுகிறது.

    அதைபோல விலை இறங்கும் போது இன்னும் இறங்கிவிடும் என்ற பயத்தில் சிறு முதலீட்டார்கள் அதை விற்கின்றனர். அப்போது அந்த பெரும் முதலைகள் அதை குறைந்த விலைக்கு வாங்கி அதை விற்காமல் வைத்து இருப்பதால் விலை இறங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லை.

    விலை இறங்கும் போது வாங்க வேண்டும். ஏறும் போது விற்க வேண்டும் என்பதுதான் இங்கு வியாபார மந்திரம். ஆனால் மக்கள் மனநிலை ஏறும் போது வாங்குவதும், இறங்கும் போது விற்பதும்மாகத்தான் உள்ளது அய்யா.

    இங்கு விலை ஏறும் போது வாங்குபவர்களும், விலை இறங்கும்போது விற்பவர்களும் அதிகமான சிறு முதலிட்டாளர்கள், அனுபவம் அற்றவர்கள், மன உறுதி அற்றவர்கள் தான் அதிகம். இவர்கள் எல்லாம் இழப்பைத்தான் சந்திக்க வேண்டியது இருக்கும். அடுத்து மனித இயல்பும் இப்படிதான் வேலை செய்கிறது.

    சூதாட்டம் போல் உள்ள பொருள் வணிகம், தினசரி வணிகம் பக்கம் போகாமல் நல்ல பங்குகளை நம்மிடம் உள்ள உபரியான பணத்தில் ( அவரச தேவை என்று விற்க கூடாது) வாங்கி வைத்து விட்டு பலகாலம் பின் விற்று லாபம் பார்பதுதான் இங்கு வெற்றி பெற இருக்கின்ற ஒரே வழி என்பது எனது அனுபவம் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ஆர் வி ஆர்!

      Delete
  3. *****சாதாரன மக்கள் என்னதான் விலை அதிகம் ஏறினாலும் இன்னும் ஏறட்டும் என்று விற்காமல் காத்து இருப்பார்கள் என்று திருத்தி கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது ஆர் வி ஆர்!

      Delete