பனையும் பயனும்!
இவற்றை நட்டுவைத்தால் நல்ல பனங்கிழங்குகள் கிடைக்கும்.
ஒரு பெரிய பழத்தில் இருந்து ஒரு லிட்டர் அளவுக்கு இதைத் தயாரிக்கலாம்.
பணம்பழக் கூழுடன் எலுமிச்சைச்ச் சாறு, நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள், சில சொட்டுக்கள் இஞ்சிச் சாறு விட்டுக் கலக்கிய பானம்.
அருமையான இயற்கைப் பானம்....
தேவையான பொருட்கள்:
பனங்கூழ், மக்காச் சோள ரவை, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய்த் தூள் , நெய்...
செய்முறை: பனங்கூழை அடுப்பில் வைத்துத் தேவையான அளவு ரவையையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதித்தபின் திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த் தூளையும் சேர்க்கவும்.போதுமான அளவு கெட்டியானபின் இறக்கி வைக்கவும்.
பனம்பழக் கேசரி தயார்!...
பனைமரம் ஒரு பாவப்பட்ட மரம்!
அதற்கு நாம் எந்த பராமரிப்பும் செய்யாமலே அது நமக்கு ஏராளமான பலன்களைக் கொடுத்தது.
இன்றும் கொடுத்து வருகிறது.
ஆனால் மனித இனமாகிய நாம் அதன் பயன்களை எல்லாம் மறந்து நன்றிகொன்றதனமாக அவற்றை அழித்து சூளைகளில் இட்டு எரித்து வருகிறோம்.
தாங்க முடியாத பஞ்ச காலத்திலும் தானும் தாக்குப்பிடித்து நம்மையும் வாழவைக்கும் திறன் கொண்டது!
ஆனாலும் நாம் அவற்றை அழிப்பதைவிடத் தற்கொலைத் தனமான செயல் ஒன்றும் இருக்காது!
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் பனைமரங்கள் நிறைந்திருந்தால் எந்தப் பஞ்சமும் வறட்சியும் எதுவும் செய்யாது.
செலவே இல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அனைத்து வழிகளிலும் காக்கும் திறன்கொண்ட பனைமரத்தைக் காப்போம்!
அது பனைமரத்துக்கு நாம் செய்யும் உதவி அல்ல! நமக்கு நாமே செய்து கொள்ளும் மாபெரும் உதவியாகும்!....
பனையைப் போற்றும் விதத்தில் நான் இரண்டு விதமான உணவுப் பண்டங்களைச் சொந்த உத்தியில் உருவாக்கியுள்ளேன். இது இனியும் தொடரும்.
முதலாவது பனம்பழ பானம்.
இரண்டாவது பனம்பழக் கேசரி...
எடுத்து வந்த பனம்பழங்கள்....
எடுத்து வந்த பனம்பழங்கள்....
பனம் பழத்தின் மேல்தோலை உரித்தவுடன்.....
மேல்தோல் உரித்தபின்னால் உள்ளிருக்கும் சதைப்பகுதி தண்ணீரில் கரைத்துப் பிழியப்பட்டபின் வெறும் கொட்டைகள்.
இவற்றை நட்டுவைத்தால் நல்ல பனங்கிழங்குகள் கிடைக்கும்.
ஒரு பனம்பழத்தின் சதைப் பகுதியைத் தண்ணீரில் கரைத்து பிழித்து எடுத்தபோது கிடைத்த பணங்கூழ்..
ஒரு பெரிய பழத்தில் இருந்து ஒரு லிட்டர் அளவுக்கு இதைத் தயாரிக்கலாம்.
பனம்பழ பானம்( ஜூஸ்)
பணம்பழக் கூழுடன் எலுமிச்சைச்ச் சாறு, நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள், சில சொட்டுக்கள் இஞ்சிச் சாறு விட்டுக் கலக்கிய பானம்.
அருமையான இயற்கைப் பானம்....
பனம்பழக் கேசரி!...
தேவையான பொருட்கள்:
பனங்கூழ், மக்காச் சோள ரவை, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய்த் தூள் , நெய்...
செய்முறை: பனங்கூழை அடுப்பில் வைத்துத் தேவையான அளவு ரவையையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதித்தபின் திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த் தூளையும் சேர்க்கவும்.போதுமான அளவு கெட்டியானபின் இறக்கி வைக்கவும்.
பனம்பழக் கேசரி தயார்!...
இவ்வளவு நல்ல பனைமரத்தை நாம் வெட்டலாமா?....
இதில் இருந்து சாறு எப்படி பிழிந்து எடுப்பது ??
ReplyDeleteபடங்களுடன் விளக்கத்திற்கு நன்றி...
ReplyDeleteஎன்னிடம் மூன்று பனை மரங்கள் உள்ளது, நாங்கள் பனம்பழத்தை வெட்டி உள்ளேயுள்ள சதை பகுதியை சிறிது தண்ணீர் விட்டு அதில் கருப்புக்கட்டி சேர்த்து அடுப்பில் வேகவைத்து சாப்பிட்டால் தேவாமிர்தம்தான்!!!!!!!!!!!!
ReplyDeleteThis is one source of food without chemicals. we are adding chemicals in all crops.
ReplyDeleteexcept this palm tree. so i can say this is pure natural food. In my childhood days i walked with my father towards palm tree forest and drink the Juice. It was so nice. Now a days these area became residential plots. I can number few trees ..
பனங்கொட்டை தேவை... மரம் உருவாக்க... எனக்குப் பதினைந்து ஏக்கர் நிலம் உள்ளது... இதில் ஒரு பத்தாயிரம் பனையை உருவாக்க ஆசை... பனங்கொட்டை எங்கே கிடைக்கும்.
ReplyDeletessdavid63@yahoo.com
சீசன்நேரம் சொல்லவும். எங்கள் ஊரில் கிடைக்கும். எனது மொபைல் நம்பர் 9445237591
Deleteபனங்கொட்டைகள் தேவைக்கு அனுகவும் மிக அதிகளவில் இருப்பு வைத்துள்ளோம்
Delete7502760599 8870351372
Thanks for sharing such wonderful blog post
ReplyDeleteLatest News & Vellore Information