முளைக் கட்டிய பாசிப் பயற்றில் இயற்கைமுறைக் குழம்பு!
இப்படி ஒரு குழம்பை நீங்கள் சாப்பிடிருக்கிறீர்களா?
தயாரிப்பு முறை:
தேவையானவை: தேங்காய், தனியா, சீரகம், பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை,கொத்துமல்லி, பூண்டு , சின்ன வெங்காயம், உப்பு.
அத்துடன் முளைக்கட்டி நன்கு முளை விட்ட பாசிப் பயறு.
சமைக்காமல் செய்வதால் பூண்டும் சின்ன வெங்காயமும் மிகவும் குறைவாகத்தான் சேர்க்கவேண்டும்.
முதலில் சொல்லப்பட்டவற்றில் தக்காளியில் பாதியையும் கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் தவிர மற்றதை நன்றாக ஆட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
அதனுடன் முளைக் கட்டிய பாசிப் பயற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.
அத்துடன் மீதித் தக்காளியையும் கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் நறுக்கி மேலே தூவி விடவும். (உண்ணும்போது கலக்கிக் கொள்ளலாம்!
இதை அனைத்துத் தானிய வகைகளால் செய்யப்பட்ட சாதத்துடனும் கலந்து சுவையாகச் சாப்பிடலாம்.
சாதம் சேர்க்காமல் தனியாகவும் உண்ணலாம்.
இதேபோல முளைக்கட்டிய நிலக்கடலை முத்துக்களைக் கொண்டும் செய்யலாம்.
சமைத்துத்தான் உண்ணவேண்டும் என்ற அவசியம் இருப்பவர்கள் இதில் ஒரு பகுதியை எண்ணையோ தாளிப்போ இல்லாமல் அடுப்பில் வைத்து வேகவைத்து மட்டும் சாப்பிடலாம்.
சமைத்து உண்மைவர்கள் இதேபோல வேறு பயறு வகைகளையும் பயன்படுத்திச் செய்யலாம்.
அதன் சுவையைச் சொல்லி முடியாது!
சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சுவையைச் சொல்லவும்!
No comments:
Post a Comment