புதுவகை வேலி.....
நண்பர்களே!
நண்பர்களே!
இந்தப் படத்தில் உள்ள தாவரத்தின் பெயர் தெரியவில்லை...
ஆனால் நிறைய வீடுகளிலும் மற்ற இடங்களிலும் பார்க்கலாம்.
நாங்கள் எங்கள் தோட்டத்தின் நுழைவாயிலில் இரு பக்கமும் வளர்த்துள்ளோம்.
அதன் அழகையும் அடர்த்தியையும் பார்த்து விட்டு மேலும் ஒரு இருநூறு அடி தூரத்துக்கு வேலிபோல் ஓரத்தில் நட்டுள்ளோம்.
காரணம் அது பார்க்க அழகாக இருப்பதோடு உயிர் வேலியாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையே!...
எவ்வளவு தூரம் நடவேண்டுமோ அவ்வளவு தூரத்துக்கு சொட்டு நீர்க் குழாயைப் போட்டு அடிக்கு ஒரு செடி இருக்குமாறு நட்டு விட்டால் மிக அடர்த்தியாகவும் அழகாகவும் வளர்ந்து விடும்.
இதில் ஒரு சிறப்பு என்ன வென்றால் இந்தத் தாவரத்தை ஆடுகள் தின்னாது.
அப்படியே தின்றாலும் நல்லதாகப் போயிற்று. சில ஆடுகளுக்குத் தீனியும் கிடைத்துவிடும்.
மூலிகைப் பூச்சி விரட்டி தயாரிப்புக்கு இது பயன்படாலாம் என்ற எண்ணமும் எனக்கு உண்டு!...
சோதித்துப் பார்க்கலாம்...
நாற்றுக்களுக்காக எந்த சிரமமும் படவேண்டியது இல்லை!
வளர்ந்த செடிகளின் நுனிகளை சின்னச் சின்னக் கிளைகளாக வெட்டி நடவு செய்தால் போதும் அருமையாகத் தழையும்!
இது பற்றி உங்கள் கருத்து என்ன? இதன் பெயர் என்ன?....
No comments:
Post a Comment