ss

Wednesday, October 16, 2013

விவசாயம் ( 67 )

எந்த நிலையிலும் இழப்பு வேண்டாம்!......

நண்பர்களே! 

எந்த ஒரு விலை நிலவரத்திலும் விவசாயத்தில் இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு முன் நிபந்தனை இருக்கிறது! 

அதுதான் அதிகபட்ச விளைச்சலை உறுதிப் படுத்துவது! 

அதிக பட்ச விளைச்சல் எடுக்கும்போது விளைச்சலின் தரம் அதிகமாக இருக்கும்.

விலையும் அந்த நேரத்தின்  அதிகபட்சமாக இருக்கும். 

ஆனால் அதற்கு மாறாக விளைச்சல் குறைவாக எடுக்கும்போது விளைச்சலின் தரமும் குறைந்து விடுகிறது! 

அதன் தொடர்ச்சியாக விலையும் அந்தநேரத்தின் குறைந்த பட்ச விலையாகத்தான் இருக்கும். 

உதாரணமாக சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொள்வோம்.....


ஒரு ஏக்கரில் எட்டு டன் விளைச்சல் இருந்தால் அன்றைய அதிகபட்ச விலையாக பத்து ரூபாய் கிலோவுக்கு என்று வைத்துக் கொண்டால்கூட எண்பதாயிரம் ரூபாய் வரவு கிடைக்கும். 

அதில் ஐம்பதாயிரம் ரூபாய் முட்டுவளி செலவு போனாலும்  மீதி நிகர வருவாயாக முப்பதாயிரம் ரூபாய் கிடைக்கும்! 

அதே சமயம் விளைச்சல் ஐந்து டன்னாக இருந்தால் அப்போதைய நிலையில் ஏழு ரூபாய்க்குத்தான் ஒரு கிலோ விற்கும்! 

ஐந்து டன்னுக்கு மொத்தம் முப்பத்தி ஐந்தாயிரம்தான் கைக்கு வரும்! 

அதனால் முட்டுவளிக்கே போதாமல் பதினைந்தாயிரம் ரூபாய் இழப்பு ஏற்ப்படும்....

அது தவிரக் குடும்ப செலவுகளும் சேர்ந்து பெரிய இழப்பாக மாறும்!.....

இந்த நிலைதான் ஒவ்வொரு பயிர் சாகுபடியிலும் ஏற்படும். 

அதனால் சந்தை விலை எப்படி இருந்தாலும் இழப்பு ஏற்படக் கூடாது என்றால் விளைச்சலை முதல் தரத்திலும் அதிகபட்ச அளவிலும் எடுக்க வேண்டும்!......

அதுவே விவசாய வெற்றிக்குக் குறைந்த பட்ச உத்திரவாதமாக இருக்கும்! 

4 comments:

 1. அதிக சேதம் ஏற்படாது தகுந்த முன்னேற்பாடுகள் செய்து விளைந்த பொருளை சேமித்து நல்ல விலைக்கு விற்றிட உழைப்பிர்க்கான பலனை விவசாயி பெற்றிடலாம்.இன்று Post harvest technolgy முக்கியத்துவம் கொடுக்கபட்டுள்ளது,ஒவ்வொரு விளைபொருளும் எவ்வாறு அறுவடை செய்யப்பட்டு சேதமில்லாது சந்தைக்கு சென்றிடும் வரை பாதுகாத்தல் வேண்டும் ,என்பதும் இன்று நடை முறையில் வந்துள்ளது

  ReplyDelete
 2. அருப தரிசனம்

  இரு முக்கோணங்கள் சதுரமானது
  செவ்வகம் நகைத்தது .........
  வட்டங்கள் வடிவம் மாற்றி ஆகாசமானது ........
  அங்கு ஒன்று இங்கு ஒன்று என வாணநக்சத்திரம்
  பூலோக பூககளின் வாசனையில் திளைத்து
  ஒளி வடிவில் கிழ இறங்கின .........
  கணிகையும் கிழவனும் பிரம்மித்து பிரம்ம ரூபம் கொண்டு
  மனமெனும் அசுர இருப்பு
  ஆகாசத்தில் கைவீரல்கள் கொண்டு
  மௌன மொழியில் எழுதிய கவிதையில்
  சுபாஷ் கிருஷ்ணமூர்த்தி நகைகிறார் .............
  வாழும் இறைவன் தான் என உணர்ந்த அத்வைத சாமி
  சபாஷ் சபாஷ் என்கிறது அசரீரி
  ஒம்மெனும் ஆதி ஒலியும்
  அருப தரிசனம் தருகிறது ........................
  புத்தன் சாகவில்லை வாழ்கிறான் நம் உள் ....................பாலு

  ReplyDelete
 3. நவீன சேமிப்பு கிடங்கு அமைப்புகள் 2.
  சரியான பயிர் இன்ன பகுதியில் இந்த அளவு 3.
  அரசாங்கம் விவசாயி குழுக்கு சரியான அறிவு பாதை அமைத்து வழி காட்டுதல்.........
  உரம் விதை கடை வைத்தவர்கள் கோடிஸ்வரர்கள் ஆகினர் ..............பாடுபட்ட வீவசாய் வீணாய் போனான் .....
  பனியனிலும் இரும்பிலும் சம்பாரித்த பணம் பூமி ஆகி
  மறுபடியும் வனங்கள் ஆகின்றன ...............
  கடைசியில் மனுஷன் எதை உண்பான் ................வீவசாயம் செய்பவன் இல்லை என்றால் உலகு அழியும் .........

  ReplyDelete
 4. http://www.swamysmusings.blogspot.com/search?updated-min=2008-12-31T10:30:00-08:00&updated-max=2009-10-17T12:49:00%2B05:30&max-results=48&start=17&by-date=false நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-1)
  எல்லோரும் தாங்கள் பிரபல பதிவராக ஆகவேண்டுமென்றுதான் விரும்புவார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் (இருந்தால் மட்டுமே) மேலே படிக்கவும். அந்த ஆசை இல்லையென்றால் உடனே இந்த தளத்தை மூடிவிட்டு வேறு உபயோகமான வேலையைப்பார்க்கவும்.
  ஆனால் இவை அனைத்தும் என் சொந்தக்கருத்துக்களே. யாருடைய மனதையும் எள்ளளவும் புண்படுத்துவதற்காக இந்த பதிவை எழுதவில்லை. அப்படி யாராவது தங்கள் மனது மிகவும் புண்பட்டு விட்டதாக எண்ணினால் அவர்களுக்கு என் அட்வான்ஸ் அபாலஜூஸ் (apologies). (சரியான தமிழ் வார்த்தைகளை யோசிக்க சோம்பல்). புதிதாக பதிவு எழுதப்போகும் உங்களுக்காக மிகவும் எளிய முறையில் படிப்படியாக கொடுத்திருக்கிறேன்.
  முதல் படி :-
  நீங்கள் முதலில் ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டும். இந்த பதிவைத்தான் நீங்கள் பிரபலப்படுத்தப போகிறீர்கள். பதிவு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாதா? அப்படியென்றால் நீங்கள் இந்த விளையாட்டிற்கு லாயக்கில்லை. பேசாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருங்கள்.
  இரண்டாவது படி:-
  இந்தப்பதிவிற்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் அல்லவா? இது ரொம்ப, ரொம்ப முக்கியம்! ‘’சுடுகாடு’’, ‘’பாழுங்கிணறு’’, ‘’பன்னிக்குட்டி’’, ‘’எங்க வீட்டு பொடக்காழி’’ இந்த மாதிரி ஒரு நல்ல பெயராக யோசித்து ஒரு பெயர் வைக்கவும். அடுத்த்தாக உங்களுக்கு (பதிவர்) ஒரு பெயரை தேர்ந்தெடுக்கவும். காட்டான், மொல்லமாரி, முடிச்சவிழ்க்கி, கொலைகாரன், இந்த மாதிரியான ஒரு பெயரை உங்களுக்கு சூட்டிக்கொள்ளவும்.
  என்னய்யா இது அக்கிரமமாக இருக்கிறதே! படித்தவர்கள் எழுதும் வலைத்தளங்களை இப்படி கொச்சைப்படுத்தலாமா என்று நினைக்கிறீர்களா? இதற்கே இப்படி தயங்கினால் நீங்கள் வலையுலகத்தில் ஓரங்கட்டப்படுவீர்கள். தயக்கப்படாதீர்கள். இனி வருபவை இதைத்தூக்கி சாப்பிடும்படியாக இருக்கும். முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள். தைரியமாக மேலே படியுங்கள்.
  மூன்றாவது படி:-
  ஆகக்கூடி உங்கள் முதல் பதிவை ஆரம்பித்து விட்டீர்களா! வாழ்த்துக்கள். இதே மாதிரி மேலும் ஒன்பது பதிவுகள் வெவ்வேறு பெயர்களில் ஆரம்பியுங்கள். எதற்காக இன்னும் ஒன்பது பதிவுகள்? எனக்கு ஒரு பதிவை பிரபலமாக்கினால் போதுமே, எதற்காக இந்த வீண் வேலை என்று நினைக்கிறீர்களா? பதிவுலக நுணுக்கங்கள் புரியும் வரை “குரு” சொல்வதை ஒழுங்காகக்கேட்டுப்பழகுங்கள். எல்லாம் உங்கள் நன்மைக்கே!!!
  நான்காவது படி;-
  உங்கள் நண்பர்களில் கணினி வைத்திருப்பவர்கள் பத்து பேரைப்பிடியுங்கள். அவர்களைத் தாஜா செய்து, அவர்களை நன்றாக கவனித்து – அது எப்படி என்பது போகப்போக விளங்கும் – அவர்கள் ஒவ்வொருவரும் தலா பத்து பத்து வலைத்தளங்களை ஆரம்பிக்கச்சொல்லுங்கள். இது எதற்கு என்று பின்னால் விளக்குகிறேன்.
  ஆச்சா! இப்போது நீங்கள் உங்கள் பதிவை பிரபலமாக்குவதற்கு வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்தாகிவிட்டது. இனி பதிவு எழுதவேண்டியதுதான் பாக்கி.
  இதுவரை எழுதியவற்றையெல்லாம் பலமுறை படித்து மனதில் பதிநவைத்துக்கொள்ளுங்கள். மீதி அடுத்த பாகத்தில்....
  பாகம் 2 – தொடரும்... if you are intersest please go that blog anna

  ReplyDelete