ss

Wednesday, November 6, 2013

தத்துவம் ( 20 )காலப் பயணம் .....

காலப் பயணம் பற்றி அறிவியலில் அதிகம் பேசப்படுகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டின்படி ஒளி வேகத்தில் பயணித்தால் காலம் ஸ்தம்பித்து நின்று விடும் என்றும் சொல்லப் படுகிறது.

ஒருவர் ஒளி வேகத்தில் பயணித்து குறிப்பிட்ட தூரம் சென்று திரும்பினால் அவர் எடுத்துக் கொண்ட காலத்தைப் போல் இரண்டு மடங்கு காலம் பூமியில் கடந்திருக்கும் அல்லது கூடுதலான காலம் கடந்திருக்கும் என்றும் சொல்லப் படுகிறது. 

ஆனால் அவர் என்ன பொருளில் சொன்னார், என்ன பொருளில் எடுத்துக் கொள்ளப் பட்டது, உண்மையாகவே அதை ஆதரிப்பவர்கள் எல்லாம் அதைப் புரிந்துதான் ஆதரிக்கிறார்களா? 

அல்லது ஐன்ஸ்டீன் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஒப்புக் கொள்வதுதான் பெருமை என்று நினைத்து ஒப்புக் கொள்கிறார்களா? 

ஒன்றும் புரியவில்லை!....

காலப் பயணம் என்பதை ஒரு கற்பனையான கதையாகத்தான் நினைக்க முடிகிறது. 

ஐன்ஸ்டீனின் கூற்றின் படி என்று சொல்லப்படுவது மட்டும் போதுமானது ஆகாது. 

அது அவரின் கூற்றையே கேள்விக் குறி ஆக்கும். 

காலம் என்பது ஒரு இடமோ ஒரு பொருளோ குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கதிரோகூட அல்ல! 

அது  மனிதன் உருவாக்கிக்கொண்ட ஒரு குறியீடு .

அதற்குள் பயணம் செய்வது என்பது எந்த வகையான சிந்தனை?....

அது முடியும் என்றால் காகிதத்தில் பெரு வெடிப்பு என்று எழுதி அதனுள் பயணம் செய்தால் பெருவெடிப்பு நிகழ்ந்த காலத்துக்குச் செல்லலாம் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். 

இப்போது ஒளியை விடக் கூடுதலான வேகத்தில் செல்லும் ஒரு வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொள்வோம். 

அதில் ஏறிக்கொண்டு எதை நோக்கி அந்த வாகனத்தைச் செலுத்துவது?

நூறு வருடங்களுக்குப் பின்னால் வரும் எதிர்காலத்தை அடைய அந்த வாகனத்தை எப்படிச் செலுத்த வேண்டும்?

நூறு வருடங்களுக்குப் பின்னால் இருந்த இறந்தகாலத்துக்குப் போக அந்த வாகனத்தை எப்படிச் செலுத்த வேண்டும்?

நம்மைச் சுற்றிலும் எல்லாத் திக்குகளிலும் அண்டம் விரிவடையும் நிலையில் எந்தத் திசையில் பயணித்து இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் அடைவது?

அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை ஒளிவேகத்தில் பயணித்துக்கொண்டே எப்படிப் பார்ப்பது?

நிறுத்துவது என்றால் எங்கே நிறுத்துவது?

ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் பூமியில் நடக்கும் ஒன்றை ஒளி வேகத்தில் வேறு திசையில் பயணித்து எப்படிக் காண முடியும்?

ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் காலப் பயணம் செய்து சந்திக்கும் ஒரு மனிதனும் அவனுடைய பல தலைமுறை முன்னோர்களும் தோன்றாத நிலையில் அப்படி ஒரு மனிதனை எப்படிக் காண முடியும்?

ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் சென்று நாம் சந்திக்கும் ஒருவரை நாம் கொன்றுவிட்டாலோ அல்லது நம்மை அவர் கொன்று விட்டாலோ என்ன ஆகும்?...

இன்னும் இதுபோன்ற பல கேள்விகளுக்கு யார் நம்பக்கூடிய விடைகளை அளிக்கப் போகிறார்களோ தெரிய வில்லை! 

ஐன்ஸ்டீனின் கோட்பாட்டைப் பற்றி ஐயம் எழுந்தால்  அவருடைய கோட்பாடுகளையே மேற்கொள் காட்டி காப்பி பேஸ்ட் செய்வதைத்தான் பலர் தங்கள் பதிலாக முன்வைக்கிறார்கள். 

தாங்கள் கற்றவற்றைத் தங்கள் புரிதலில் இருந்து வெளிப்படுத்த யாரும் தயாராக இல்லை! 

என்ன செய்வது!.....
------------------------------------------------------------------------------------------------------

இதுபற்றிய எனது மேலும் சில கருத்துக்கள்.....

இந்தக் கட்டுரையில் எழுப்பிடைள்ள கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைக்காமல் காலப் பயணம் பற்றிக் கற்பனை செய்வதில் பயனில்லை என்றே நினைக்கிறேன்.

அணுக்களால் ஆன ஜடப் பொருட்களால் ஆன மனிதனும் அவன் தயாரிக்கும் வாகனமும் ஜடப்பொருளே அல்லாத காலம் என்னும் கருத்துக்குள் எப்படிப் பயணம் செய்ய முடியும்?

அது முடியும் என்றால் கற்பனைக்கதைகளில் சொல்லப்படும் கதைகள் எல்லாமே உண்மை என்று ஆகிவிடும்.

மூட நம்பிக்கைகள்கூட அறிவியல் ஆகிவிடும்....

அறிவியல் சிந்தனைகளைத் தோற்கடித்து மக்களை அறியாமையிலேயே வைத்திருக்கச் செய்யப்படும் சதியாக இருக்குமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது!...
---------------------------------------------------------------------------------------------------------
பெரு வெடிப்பு என்பது ஒரு நிகழ்வு!

அதற்குப் பின்னால் பலநூறுகோடி வருடங்கள் கடந்திருக்கிறது.

பெருவெடிப்புக்குப் பின்னால் எப்படிக் காலம் நீண்டதோ அதுபோல அதற்கு முன்னும் வேறொரு நிலையில் காலம் நீண்டிருக்கத்தான் வேண்டும்.

எது ஒன்றும் இல்லாதிருந்து புதிதாகத் தோன்றவோ அல்லது இருந்து அதன்பின் இல்லாமல் போகவோ முடியாது.

ஒன்று இன்னொன்றாக அல்லது ஒரு நிலையில் இருந்து வேறொரு நிலைக்கு மாறிச் செல்ல மட்டுமே முடியும்.

அப்படியிருக்க பெருவெடிப்புக்கு முந்தைய நிலையை நாம் அறியவில்லை என்று மட்டுமே சொல்ல முடியும் .

எதுவும் இல்லை என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?

அப்படி இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்தையே உள்ளடக்கிய ஒரு நிலை புதிதாக எப்படித் தோன்றியது?
-----------------------------------------------------------------------------------------------------
ஒரு பக்கம் மட்டுமே உள்ள ஒரு நாணயம் இருக்க முடியாது. அதுபோல ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இருந்து ஒரு பக்கமாக மட்டும் காலமும் இருக்க முடியாது!...
-------------------------------------------------------------------------------------------------------

ஒரு பயணம் என்றால் அதற்கு புறப்படும் இடம் என்று ஒன்று இருக்க வேண்டும். அது தவிர செல்லும் இடம் அல்லது செல்ல நினைக்கும் இடம் என்று ஒன்று இருக்க வேண்டும். மேலும் செல்லும் வழி இன்னது என்றும் இருக்க வேண்டும்.

இந்த மூன்றுமே இல்லாத ஒரு பயணத்தை எப்படிச் செய்ய முடியும்?

அல்லது காலப் பயணத்தில் இந்த மூன்றும் எங்கு அமைந்துள்ளன?

--------------------------------------------------------------------------------------------------

2 comments:

 1. - முனைவர் க.மணி

  கைபேசி: 9944562192
  மின்னஞ்சல்: kmani52@gmail.com அண்மையில் வெளிவந்த நியூட்ரினோ பற்றிய தகவல், பிரபஞ்சம், அணு முதலானவை பற்றி நாம் செய்து வைத்திருக்கும் கொள்கைகளை தகர்த்துவிடும் போலுள்ளது. ஒளியை விஞ்சும் வேகத்தில் நியூட்ரினோ பயணம் செய்திருக்கும் நிலையில், ஐன்ஸ்டினின் கோட்பாடுகளை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்யவும், டெலிபோர்ட்டேஷன் செய்யவும் இனிமேல் முடியலாம். புராண சம்பவங்களும், ஈரேழு லோகங்களும் நிஜமாகலாம்.

  இந்தப் பேரண்டத்தில் ஒளியின் வேகம்தான் அதிகபட்சம். வினாடிக்கு 300,000 கி.மீ வேகத்தில் ஒளி பரவுகிறது. எந்தப் பொருளாலும் ஒளியின் வேகத்தை விஞ்ச முடியாது. உண்மையில் அதை எட்டக்கூட முடியாது. ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு அடிப்படையே இதுதான். குவாண்ட்ட அறிவியல் இதை அஸ்திவாரமாக வைத்து வளர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கட்டுரையில் எழுப்பிடைள்ள கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைக்காமல் காலப் பயணம் பற்றிக் கற்பனை செய்வதில் பயனில்லை என்றே நினைக்கிறேன்.

   அணுக்களால் ஆன ஜடப் பொருட்களால் ஆன மனிதனும் அவன் தயாரிக்கும் வாகனமும் ஜடப்பொருளே அல்லாத காலம் என்னும் கருத்துக்குள் எப்படிப் பயணம் செய்ய முடியும்?

   அது முடியும் என்றால் கற்பனைக்கதைகளில் சொல்லப்படும் கதைகள் எலாம உண்மை என்று ஆகிவிடும்.

   மூட நம்பிக்கைகள்கூட அறிவியல் ஆகிவிடும்....

   அறிவியல் சிந்தனைகளைத் தோற்கடித்து மக்களை அறியாமையிலேயே வைத்திருக்கச் செய்யப்படும் சதியாக இருக்குமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது!...

   Delete