ss

Friday, December 6, 2013

உணவே மருந்து (77)

பாலும் தயிரும்.... 

பாலைப் பச்சையாக நாம் சாப்பிடுவது இல்லை.

காய்ச்சித்தான் சாப்பிடுகிறோம். 

அதன்மூலம் நிறைய சத்துக்கள் கிடைக்கின்றன என்பது உண்மை.

ஆனால் அவை இயற்கையானவை அல்ல. 

ஆனால் தயிராகவோ, மோராகவோ சாப்பிடும்போது அதன் இயற்கைத் தன்மை புதுப்பிக்கப்படுகின்றது. 

பாக்டீரியாக்கள் அந்தப் பணியைச் செய்கின்றன. 

அதனால் பாலை விடக் கூடுதல் பயன்கள் தயிர், மோர் ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்றன. 

எந்த உணவில் என்ன சத்துக்கள் அடங்கியுள்ளன என்று அறிந்து உண்பதே மிகவும் தவறான பழக்கம் ஆகும்! 

அதனால் அவற்றுள் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி நான் அக்கரைப்படுவது இல்லை! 

அதை நமது உடம்பின் உணர்வுகளும் செரிமான உறுப்புக்களும் பார்த்துக் கொள்ளும்!....

நாம் அக்கரைப்படவேண்டியதெல்லாம் நாம் உண்ணும் உணவு இயற்கைக்கு நெருக்கமாகவும் சுவையாகவும் இருக்கிறதா என்பதே!.....

அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பால் நமக்குத் தவிர்க்க முடியாத உணவு அல்ல!...

No comments:

Post a Comment