ss

Monday, February 24, 2014

எனது மொழி ( 154 )

அவமானம்! அவமானம்!....

இருவருக்கு இடையே ஒரு பிரச்சினை முற்றித் தகராறு என்ற அளவுக்குப் போனால் அப்போது அவர்களில் யார் அங்கு ஆள்பலம் மிக்கவர், யாருக்கு செல்வாக்கும் உள்ளூர் ஆதரவும் அதிகம், யார் வசதியானவர், யாருக்கு அரசியல் பலமும் அதிகார பலமும் இருக்கிறது என்பது போன்றவைகளே நீதிமானாக விளங்குகின்றன! 

நியாமானவர்,  நேர்மையானவர், நாட்டுப் பற்றாளர், கல்வியாளர், பண்பாளர் சிந்தனையாளர்,பாராபட்சமற்றவர் என்பது போன்ற தகுதிகள் எல்லாம் செல்லாக் காசாகி விடுகின்றன.

அத்தவர்களைக் காக்க எந்தச் சட்டமும் அதை அமலாக்கும் துறைகளும் தயாராக இல்லை!

அவர்கள் கெட்டவர்களுடன் மோதினால் தலைகுனிந்து வாழவேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள்! 

இத்தகைய கேடுகெட்ட சூழலில்தான் நாம் மனச் சாட்சியை அடகுவைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.....

அவமானம்! அவமானம்! 

1 comment:

  1. yes sir...இத்தகைய கேடுகெட்ட சூழலில்தான் நாம் மனச் சாட்சியை அடகுவைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.....

    ReplyDelete