ss

Thursday, March 13, 2014

உணவே மருந்து ( 82 )


உணவும் விலைமாதும்.....

ஒரு விலை மாதுக்கு ஈடாக குடும்பப் பெண் இருக்க முடியாது! 

அவளைப்போல் தன்னை அழகு படுத்திக்கொள்ள மாட்டாள்!

அவளைப்போல் கவர்ச்சியாக இருக்க மாட்டாள்.

அவளைப்போல மயக்கும் மொழி பேசமாட்டாள்!

அவளைப்போல நாணமற்று நடந்துகொள்ள மாட்டாள்.

அவளைப்போல பலருடன் பலவிதமாக நட்பு வைத்துக்கொள்ள மாட்டாள்.

அவளைப்போல இனிய பொய்யான மயக்கும் மொழியைப் பேசமாட்டாள்.

கண்களையும் மற்ற அங்க அவயங்களையும் கட்டுப்பாடின்றி அலைய விட மாட்டாள்.


மாறாக ......

சாதாரண அழகுடன் காணப்படுவாள்.

கண்டிப்பாகவும் நடந்து கொள்வாள். 

அனைத்து விஷயங்களிலும் அனைத்துக் காலங்களிலும் எளிமையாக, துணையாக , நன்மையே நோக்கமாக இருப்பாள். 

அதன்காரணமாக விலைமாதுவின் தொடர்பு மீளாத் துயரத்திலும்  குடும்ப வாழ்க்கை நன்மையிலும் முடிகிறது...

இதுதான் பொதுவான சித்திரம். 

அதுபோல இன்றைய நவீன உணவுத் தயாரிப்புகளில் பெரும்பாலானவை கண்களுக்கு அழகையும் நாவுக்கு ருசியையும் நுகர்வதற்கு விதவிதமான வாசனையையும் கொண்டு தயாரிக்கப் படுகின்றன.

எண்ணையையும் சர்க்கரையையும் மசாலாக்களையும் வேதிப் பொருட்களையும் உள்ளடக்கி உயர் வெப்பத்தில் வித விதமான பண்டங்களாகத் தயாரிக்கப் படுகின்றன. 

அதற்கு ஈடாக அந்த உணவுப்பொருட்களில் உள்ள நல்ல அம்சங்களைஎல்லாம் பலி வாங்கி விடுகின்றன.

முடிவாக நமது உடலுக்கு அநேக நோய்களுக்குக் காரணமாகித் துயரத்தில் தள்ளி விடுகின்றன.

ஆதாவது ஒரு விலை மாதுவின் நட்பால் விளையும் அதே விளைவு!....

ஆனால் அதற்கு நேர மாறாக இயற்கை உணவுகள் பார்வைக்கும், நாவுக்கும் நுகர்வுக்கும் கவர்ச்சி குறைவாக இருந்தாலும் அதன் உள் கட்டமைப்பு நமது உடல் நலனுக்கு ஏற்றதாகவும் நோய்க்கு மருந்தாகவும் செயல் படுகிறது. 

அதன்காரணமாக நமது நோயற்ற நீண்ட ஆயுளுக்கு அது காரணம் ஆகின்றது!

சுற்றுச் சூழல் கேடுகளுக்குக் காரணமாக இல்லாமல் சூழலை மேலும் மேலும் அழகாக்குகிறது! 

ஆதாவது நல்லதொரு குடும்பப் பெண்ணால் ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் அதே விளைவு!.....

அப்படியானால் நமது நல்வாழ்வுக்கு ஏற்ற உணவு எது என்று சொல்லவும் வேண்டுமா?.....



2 comments:

  1. சொன்னவிதம் மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
  2. உணவே மருந்து ( 82 )

    உணவும் விலைமாதும்.....
    அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி ஐயா திரு Krishnasamy Subash

    ReplyDelete