ss

Saturday, April 12, 2014

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 31 )

ஒரு ஆன்மிக உரையாடலில் எனது கருத்துக்கள்...

(நண்பர்களே!...
சுவர்க்கம் என்றால் என்ன?
நரகம் என்றால் என்ன?
வீடுபேறு என்றால் என்ன?
இவை எங்கு உள்ளன?....
இவற்றை நாம் ஏன் அடைய வேண்டும்?......
அடையும் வழி என்ன?......இப்படிக் கேட்டு நான் முகநூலில் பதிவு போட்டபோது நடந்த உரையாடலில் எனது கருத்துக்கள்)
=================================================================

உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னால் அடையும் நிலையைத்தான் இப்படி மூன்றுவிதமாகப் பிரித்துச் சொல்கிறார்கள். அதனால் நாம் வாழும் வாழ்க்கையில் காண்பவற்றை அப்படிச் சொன்னால் தத்துவங்களில் முரண்படுகிறோம் என்பது பொருள்!....
==================================================================

உயிரினங்களின் மற்றும் தாவரங்களின் இயங்கு முறையையும் இயங்கு நிலையையும்தான் உயிர் என்கிறோம். அது நின்று விட்டால் உயிர் போய்விட்டது என்கிறோம்....உண்மையில் அப்படி ஒன்று தனித்து நிலவ முடியாது!....
=====================================================================

ஊர் உலக வழக்கில் உள்ள தவறுகளையும் முரண்பாடுகளையும் ஆராய்வதுதான் சரியான சிந்தனை முறை!....
==================================================================

சிந்தித்து அறிய முடியாத ஒன்றைச் சொல்பவர் எப்படி ஞானியாக இருக்க முடியும்? அதை அவர் எப்படிச் சிந்திக்காமல் சொல்லியிருக்க முடியும்?

சிந்தித்து வெளிப்படும் ஒரு கருத்தைச் சிந்தனையின்மூலம்தான் நடைமுறை வாழ்க்கை அனுபவங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கமுடியும்!

சிந்திக்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதால்தான் வாழ்க்கையே முரண்பாடுகளில் சிக்கிச் சீரழியும் வாழ்க்கையாக உள்ளது!...
===============================================================

(அய்யா உடம்பை இயக்கம் செய்யும் சக்தி எது? நீங்கள் தூங்கி விட்டால் கூட இதயம் செயல் படுகிறது. கிட்னி வேலை செய்கிறது. சுவாசம் நடக்கிறது.

உண்ணும் உணவை ஜீரணம் செய்வது யார்? என்ன சக்தி அது?) என்ற கேள்விக்கான பதில்....

அதுதான் இயக்கம் நண்பரே! அந்த இயக்கத்தை வெளியில் இருந்து தனித்த எதோ ஒரு சக்தி இயக்குவது இல்லை....இயங்கத் தகுதி உள்ளவரை இயங்குகிறது! முடியாவிட்டால் நின்றுபோகிறது!.....

ஆதாவது அத்தனையுமாக இருக்கின்ற பரம்பொருளாக இருக்கின்ற மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள்ளும் அதற்கான முறையில் நடக்கிறது

அந்தச் சக்திக்குப் பொருந்தாத பல்வேறு காரணங்களைக் கற்பித்து ஒருவருக்கொருவர் ஏமாற்றியும் ஏமாந்தும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் சக்தி வேண்டும்! ஆனால் அந்த சக்தி எப்படிப் பெறப்படுகிறது என்பதில்தான் முரண்பாடுகள்!.....

இன்னதென்று தெரியாத ஒன்றுதான் அந்தச் சக்தியை வழங்குவதாக நினைப்பது தவறான முறை! 

பேரியக்கத்தின் ஒரு அங்கமாக எண்ணற்ற இயக்கமுறைகள் நிகழ்கின்றன, அதில் ஒருவகைதான் மனிதன் உள்ளிட்ட உயிரியல் வாழ்க்கை முறை என்பது சரியான முரண இல்லாத சிந்தனை...
================================================================

பரம்பொருள் என்பது சம்பந்தமில்லாத எதோ ஒன்று அல்ல! அத்தனையுமாக இருக்கின்ற எல்லையற்ற பேரியக்கம்! குருட்டு நம்பிக்கை அல்ல!.....
==================================================================

ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொன்னாலும் அதைக் கணக்கில் கொள்ளாமல் அடுத்த கேள்வி கேட்பது எல்லோராலும் முடியும். ஆனால் சொன்ன பதில்களில் உள்ள ஆழமான உண்மைகளைக் கருத்தில்கொள்ள வேண்டும் . அதுதான் அறிவுடைமை! 
==================================================================

ஆதாவது எனது குறிக்கோள் மூடநம்பிக்கைகள் அற்ற ஆன்மிகம். ஆனால் இன்றைய ஆன்மிகம் என்பதே வெறும் மூடநம்பிக்கைகளாகவே புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது....அதுதான் சிக்கலே!
ஆன்மிகத்தை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும்.
===============================================================

பிறப்பும் இறப்பும் அற்ற நிலையைத் தான் வீடுபேறு என்கிறோம். அதை வாழும் காலத்தில் எப்படி அடைய முடியும்?.....

வீடு பேறு அடையவேண்டும் என்று மனிதர்களில் ஒரு பகுதியினர் மட்டும் விரும்புவதாகச் சொல்கிறார்கள்...அடைந்தவர் யார் என்று கேட்டால் நிச்சயம் பதில் சொல்ல இயலாது.....ஆதாவது போகாத ஊருக்குப் பிறருக்கு மட்டும் வழிகாட்டும் விநோதக் கோட்பாடு இது!....
================================================================

ஆதாவது கேள்விகளுக்குப் பதிலாகவும் விவாதங்களில் எதிர்ப்படும் கருத்துக்களைச் சந்திப்பதர்காகச் சொல்லப்படும் விளக்கங்களாகவும்தான் நடைமுறையில் உள்ள ஆன்மிகக் கோட்பாடுகள் தோன்றி வளர்ந்தனவே அன்றி அனைத்து மக்களுக்கும் தெளிவான வழிகாட்டும் நோக்கில் அல்ல! 

அதனால்தான் அவை மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதும் இல்லை. மக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க முயல்வதும் இல்லை! 

அதனால் ஆன்மிகம் என்பதே மூடநம்பிக்கைகள் மட்டுமே என்பதான ஒரு நிலைக்கு மக்கள் ஆகிவிட்டார்கள். 

அதன்காரணமாகவே ஆன்மிகத்தை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறேன்....
==============================================================

நாத்திகர்கள்கூட ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளைத்தான் தாக்குகிறார்கள் மறுக்கிறார்கள்...

ஆனால் இந்தப் போலி ஆன்மிகவாதிகளோ நாத்திகர்களைக்கூட விட்டு விடுகிறார்கள். ஆன்மிகத்தில் சீர்திருத்தம் கூறுபவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்!...

காரணம் அவர்கள் உண்மையான ஆன்மிகத்தைக் கற்றுக்கொள்ளவே இல்லை என்பதே!...

அதனால் அவர்களின் வாதங்களை நியாயப்படுத்தப் பல வியாக்கியானங்களை விளக்கி நாம் துன்பப் படுவதைவிட மக்களுக்குச் சம்பந்தமில்லாத வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத தத்துவக் குப்பைகளைக் கடாசிவிடுவதே சிறந்ததாகும்!....
===============================================================

இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரே முற்போக்கான மதவாதிகளால் நிராகரிக்கப்பட்ட அநாகரிகமான நம்பிக்கைகளைக்கூட இன்றும்கூட அகற்றவேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாதவர்களால்தான் இந்திய ஆன்மிகம் இன்று பெரிதாகப் பேசப்படுகிறது...

அதையும் நம்புவதால்தான் நாடு இன்னும் சீரழிவில் இருந்து மீள வழி இல்லாமல் கிடக்கிறது....
==============================================================

ஆசையைத் துறக்கவேண்டும், துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றுபோல் பாவிக்கவேண்டும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டவேண்டும், துன்பம் செய்தவர்க்கும் நல்லது செய்யவேண்டும் இதுபோன்ற அற்புதமான கருத்துக்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும் வஞ்சகச் சொற்களாகவே இந்தியாவில் கையாளப் படுகிறது!...

அது உண்மைதான் என்பதற்கு ஆதாரம் இந்திய ஆன்மிக முன்னோடிகளில் எவரும் இதன்படி நடப்பவவர் கிடையாது!....

ஆக நல்ல விஷயங்களைக் கூட மோசடிக்குப் பயன்படுத்தும் பாவாத்மாக்கள்!.... 

இவர்களை ஆன்மிகவாதிகளாக நினைப்பதைவிட ஆன்மிக நிந்தனை வேறு கிடையாது!....

No comments:

Post a Comment