ss

Saturday, April 19, 2014

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 33 )

எதை நிராகரிப்பது?....

ஆன்மிகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழித்துக் கட்டினால் நாத்திகர்களுக்கு வேலையே இல்லை!...

காரணம் அவர்களால் மூட நம்பிக்கைகளை மட்டுமே தாக்க முடியும் உண்மையான ஆத்திகத்தை ஒன்றும் செய்ய முடியாது!. 

அதனால் ஆன்மிகவாதிகள் நாத்திகர்களைக் கண்டபடி வசைபாடுவதை விட்டுவிட்டு அதற்குக் காரணமான மூடநம்பிக்கைகளை ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும். 

நிராகரிக்கப்படவேண்டியது ஆத்திகமோ நாத்திகமா அல்ல! 

மூட நம்பிக்கைகளே!.....

நடைமுறை வாழ்கை அனுபவங்களுக்கும் முரணற்ற இயற்பியல் கோட்பாடுகளுக்கும் எது இணக்கமாக இருக்கிறதோ அதுதான் சரியான நம்பிக்கை!

அப்படியல்லாமல்  நடைமுறை வாழ்க்கை அனுபவங்களுக்கும் இயற்பியல் கோட்பாடுகளுக்கும் முரணாக எது சொல்லப்படுகிறதோ அல்லது ஏற்றுக்கொள்ளப் படுகிறதோ அதுதான் மூட நம்பிக்கை!...

அத்தகைய நம்பிக்கையை வளர்க்கும் ஆத்திகமும் நாத்திகமும் மதிக்கத் தக்கவை!

மற்றவை மதிக்கத் தகாதவை!....

ஆத்திகமும் நாத்திகமும் நமது இருப்பைப் பற்றிய இருவேறு பார்வைகள்!

சரியாக அதைப் பின்பற்றுபவர்கள் அந்த இரண்டு பாதைகள் வழியாகவும் பயணித்து நல்வாழ்வு வாழ முடியும்.

சரியாகப் பின்பற்றாதவர்கள் இரண்டில் எந்த வழியைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அது ஏமாற்று வேலையே!.....

அணுவில் இருந்து அண்டம்வரையான அனைத்துமாக விளங்குவதைப் பரம்பொருள் அல்லது பரமாத்மா என்றும் அதனுள் அடங்கியுள்ள அனைத்தையும் குறிப்பாக மனித உயிர்களை ஜீவன் அல்லது ஜீவாத்மா என்றும் சொல்லி அவற்றுக்கிடையேயான உறவுகளையும் கடமைகளையும் சொல்வது ஆன்மிகம்......

மாறாக அணுவில் இருந்து அண்டம் முடிய எல்லையற்று விளங்கும் இயக்கத்தைப் பேரியக்கம் என்றும் அதனுள் அடங்கிய அனைத்தையும் பேரியக்கத்தின் உட்கூறுகளாகவும் சொல்லி மனிதன் வாழவேண்டிய முறையைப் பற்றிச் சொல்வது நாத்திகம்...

அல்லது அறிவியல்பார்வை....

இதில் இரண்டும் வேறுபட்டதாகத் தெரிந்தாலும் வாழ்க்கைக் கடமைகள் எனும்போது இரண்டும் ஒன்றாகிவிடுகிறது....

அந்த இருபெரும் தத்துவங்களும் மோதிக்கொள்வது இல்லை!

அதற்கு அவசியமும் இல்லை!

ஆனால் அவற்றைப் பின்பற்றுவதாகச் சொல்லும் மனிதப் பதர்கள்தான் முட்டிமோதிக் கொள்கிறார்கள்....

2 comments:

  1. ஆன்மீகவாதிகள் மூடநம்பிக்கையை வளர்த்தி வாழ்வது இன்றைய வாழ்வியல். அறியும் அறிவை இன்று நாம் நம்முடைய வாழ்கையோடு பொருத்தியறிதல் பார்த்து எதார்த்தமாய் வாழ்ந்தால் அதுவே நடுநிலை. என்னதான் கற்றாலும் என்னதான் கேட்டாலும் என்னதான் சாதித்தாலும் இன்புறா மனத்தின் இயல்பை எங்கே எய்து எதை நாடி இருப்பது. இப்பபடி தர்க்கம் செய்து ஆராய்வதை காட்டிலும் சும்மா இருப்பதில் சுகம் சாணாகம்.

    ReplyDelete
  2. ஆராய்ந்தால் புது வழி புலப்படலாம்!...இல்லாவிட்டால் இந்தக் குழப்பத்தில் இருந்து மக்கள் விடுபடுவது எப்போது என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயம்!...

    நடப்பில் பின்பற்றுவது தவறான நிலை என்று உணர்ந்தாலும் அதை மாற்றிக்கொள்ளும் துணிவு இல்லை என்பதுதான் மக்களின் நிலை!..

    ReplyDelete