நம்மாழ்வார்!.இனி?... ஒரு வேண்டுகோள்!
நண்பர்களே!
வேதிப் பொருட்களின் பிடியில் சிக்கி மூச்சுத் திணறித் தவிக்கும் வேளாண்மையையும் உணவுப் பொருட்களையும் சுற்றுச் சூழலையும் மீட்கத் தன் வாழ்வை அர்ப்பணித்த மகான் நம்மாழ்வார் அவர்கள்!
அவரை ஒரு தனிமனிதராகக் கருதாமல் ஒரு இயக்கமாகவே கருதினர் மக்கள்!
அவரும் சளைக்காமல் இயற்கை வேளாண்மை என்ற கருத்தை மக்கள் மனதில் ஏற்றிவைத்தார்!
அது இன்று விழிப்புணர்வு பெற்றுப் பரவி வருகிறது!
அவரைப் பொருத்தவரை அவருடைய லட்சியப் பாதையில் மகத்தான வெற்றி பெற்று மறைந்துவிட்டார்!...
ஆம்! தனியொரு மனிதராகக் களத்தில் இறங்கி இன்று இயற்கை வேளாண்மை என்றால் அவர் பெயரை நினைக்காமல் முடியாது என்ற அளவுக்கு அந்தப் பாதையில் தான் நடந்ததும் அல்லாமல் தனக்கு இணையாகப் பலரையும் உருவாக்கியும் சென்றிருக்கிறார்!
அவருக்கு மக்கள் அதிலும் குறிப்பாக வேளாண் பெருமக்கள் செய்ய வேண்டிய நன்றிக் கடன் என்பது அவரைப் புகழ்ந்து பாராட்டுவதும் மரியாதை செய்வதும் மட்டும் அல்ல!
அவருடைய லட்சியத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்குச் செய்யும் மிகப்பெரிய கைம்மாறு ஆகும்!
அவருடைய கனவு என்னவென்று ஏராளமான இளைஞர்களுக்குத் தெரியும்.
அதை நனவாக்குவதற்கான பாதையில் பயணிப்பதே தொடர்ந்து செய்ய வேண்டிய கடமை ஆகும்......
அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?
செய்யவேண்டியதெல்லாம் ஐயாவின் லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்கை வேளாண்மை என்பதை முழு இயற்கை வேளாண்மையாக உழவுத் தொழிலை மாற்றுவதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதே!....
அதற்கான வழிகள்......
முதலாவதாக தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பாகங்களிலும் உள்ள இயற்கை வேளாண்மை முன்னோடிகளின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்ய வேண்டும்.
அவர்கள் அனைவரையும் தொடர்புகொண்டு அனைவரையும் ஒரு இடத்தில் ஒருங்கிணைக்க வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் அடுத்து நம்மாழ்வார் ஐயா என்ற ஒரு மனிதரின் இயக்கமாக இருந்ததை மக்கள் இயக்கமாக வளர்க்க என்ன செய்யலாம் என்பதை ஆலோசிக்க வேண்டும்.
அந்த ஆலோசனைகளில் கிடைக்கும் பயனுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு விரிவான அறிக்கையை அறைகூவலாக மக்கள் முன்னால் வைக்க வேண்டும்!
அனைத்துப் பகுதிகளில் உள்ள இயற்கை வேளாண் ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து வழி நடத்த ஒரு மையம் உருவாக்கப்படவேண்டும்.
அந்த மையம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பலமான இணைப்புச் சங்கிலியாக விளங்க வேண்டும்.
அதன்பின்னால் அனைத்து வட்டாரங்களில் இருந்தும் முன்னோடிகளைத் தெரிந்தெடுத்து ஒரு விரிவான துவக்க மாநாட்டை நடத்த வேண்டும்.
அந்த மாநாட்டில் சிறந்த நிபுணர்களைக் கொண்டு பல்வேறு பிரச்சினைகளையும் தீர்வுகளையும் பற்றி உரையாற்றச் செய்து அனைவரின் கருத்துக்களையும் பெற வேண்டும்.
அதே மாநாட்டில் அந்த அமைப்பை வழி நடத்திச் செல்ல ஒரு தலைமை குழுவையும் பொதுக் குழுவையும் தேர்வு செய்ய வேண்டும்.
அந்தக் குழுவின் வழிகாட்டுதலில் இயற்கை வேளாண்மை சம்பந்தமாகவும் அதை நாடுதழுவிய உழவு முறையாக மாற்ற எடுக்கவேண்டிய முயற்சிகள் சம்பந்தமாகவும் விரிவான ஒரு அறிக்கையை தயார் செய்ய வேண்டும்.
அதில் இயக்கமாக உருவாக்குவதற்கான அம்சங்களும் விதிகளும் இடம் பெற வேண்டும்.
அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு இயக்கமாகப் பதிவு செய்ய வேண்டும்.
அப்படிப் பதிவு செய்யப்படும் ஒரு அமைப்பில் நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளை இணைக்கத் திட்டமிட வேண்டும்!....
தவறே செய்யாத செய்ய முடியாத விதிகளையும் நடைமுறைகளையும் கொண்ட இயற்கை வேளாண் இயக்கத்துக்கு ஒரு வெற்றிகரமான துவக்கத்தை நிகழ்த்த வேண்டும்......
அதில் ஏராளமான விவசாயிகளையும், நிபுணர்களையும், கல்வியாளர்களையும் ஈடுபடுத்துவதன்மூலம் குறைந்த காலத்தில் மாபெரும் இயக்கமாக வளர முடியும்!.....
அந்த இயக்கம் அரசியல் சார்பற்ற ஒரு இயற்கை விவசாயிகள் இயக்கமாக வளர்வதன்மூலம் அரசுகளின் ஒத்துழைப்பைப் பெறுமளவும் அரசு அதற்கேற்ப சட்டங்கள் இயற்றுமளவும் மகத்தான சக்தியையும் மதிப்பையும் பெறும்!
இப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை உருவாக்க நம்மாழ்வார் ஐயாவுடன் நெருக்கமாக இருந்தவர்களும் அவர் தங்கியிருந்து வழிநடத்திய வானகமும் இயற்கை வேளாண்மை தொடர்பாக ஐயாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்தவர்களும் வானகத்தைத் தலைமையகமாகக் கொண்டு முன்முயற்சி எடுக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.....
=====================================================================
வானகம் தொடர்பாக அடுத்து எழுதிய கட்டுரைகள் இந்த இணைப்புகளில் பாருங்கள் நண்பர்களே! விரிவான கருத்துக்கள் உள்ளன....
http://www.drumsoftruth.com/2014/10/83.html
http://www.drumsoftruth.com/2014/10/85.html
http://www.drumsoftruth.com/2015/12/88.html
=====================================================================
வானகம் தொடர்பாக அடுத்து எழுதிய கட்டுரைகள் இந்த இணைப்புகளில் பாருங்கள் நண்பர்களே! விரிவான கருத்துக்கள் உள்ளன....
http://www.drumsoftruth.com/2014/10/83.html
http://www.drumsoftruth.com/2014/10/85.html
http://www.drumsoftruth.com/2015/12/88.html
இதற்கு ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தினாலொழிய ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை ஐயா.
ReplyDeleteஆம் நண்பரே!....ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை...
Delete