ss

Saturday, May 31, 2014

ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 34 )

வீடு பேறு....

ஆன்மிகத் தத்துவ ஞானிகளில் பெரும்பாலோரும்.அவர்களைப் பின்பற்றுபவர்களில் பெரியோர்களாக மதிக்கப் படுபவர்களும் அடிக்கடி பேசும் ஒரு முக்கியமான தத்துவம் வீடு பேறு!....

அது என்ன வீடுபேறு?

பிறப்பு இறப்பு அற்ற நிலையைத்தான் வீடு பேறு என்கிறோம்.

ஆதாவது அனைத்துமாக இருக்கிற பரம்பொருளில் இணைபிரியாமல் ஐக்கியமாகிக் கலந்து இருப்பது!

அதன் மூலம் உலகில் எவ்வுயிராகவும் பிறவாமல் இருப்பது!

உலகில் பிறவாமல் இருந்தால் உணர்வுள்ள வாழ்வை உணர்வது எப்படி?

துன்ப மயமான நரகம் வேண்டாம், இன்ப மயமான சொர்கத்தை ஏன் மறுக்க வேண்டும்?

பிறப்பு இறப்பு இல்லாவிட்டால் சுவர்க்கத்தை அடைவது எப்படி?

பிறப்பிறப்பு இல்லை என்ற நிலையைவிட சுவர்க வாழ்வு மேலானது அல்லவா?....

அதை ஏன் மறுத்து ஒதுக்க வேண்டும்?

காரணம் உள்ளது!

ஆதாவது சுவர்க்கம் என்ற ஒன்றை விரும்பினால் அதை அடைவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படி வளர்த்துக்கொள்ளாமல் மாறாக நடந்தாலோ அல்லது சுவர்க்கம் கிடைத்தபின்னாலும் தவறு செய்தால் மீண்டும் நரகம்தான்!

இந்த சுவர்க்கத்தை அடைவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றவர்களைவிடத் தோல்வி அடைந்தவர்களும் அடைபவர்க்களும்தான் அதிகம்!

அதனால் இந்த இரண்டும் வேண்டாம் என்றால் பிறப்புக்கு முந்தைய நிலையில் ஆதாவது இறை நிலையில் இருந்து உயிர் நிலைக்கு மாறிச் செல்லாத ஆதாவது நிரந்தரமாக இறைநிலையிலேயே நிரந்தரமாக இருந்துவிட்டால் அதைவிடத் துன்பமற்ற நிலை வேறு எதுவாக இருக்க முடியும்?

அதுதான் வீடு பேறு எனப்படுகிறது!

இப்படி வீடுபேற்றைப் பற்றி இவ்வளவு உயர்ந்த விருப்பம் கொண்டிருக்கும் நம்மில் யாராவது அதை அடைந்திருக்கிறார்களா?....

அடைந்திருப்பார்கள்...ஆனால் அவர்கள் யார் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

அதனால் மக்களால் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப் படுபவர்களை வீடுபேறு அடைந்தார்கள் என்று சொல்வது வழக்கம் ஆகி விட்டது!

அவர்கள் அடைத்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமலே அடைந்தார்கள் என்று சொல்கிறோம்.

அவர்கள்மேல் மதிப்பு வைத்திருக்கும் அனைவரும் அதை ஒப்புக்கொள்கிறார்கள்....

ஆக இன்னதென்று அறியப்படாத ஒரு நிலையை பலர் அடைந்தார்கள், இன்னும் அனைவரும் அடையலாம், அடைய முடியும் என்ற நம்பிக்கை இருப்பது மட்டுமல்ல வளர்க்கவும் படுகிறது.

இது ஆன்மிகத்தின் கூறுகளாகக் கருதப்படும் அனைத்து மதங்களும் ஏறக்குறைய வேறுபட்ட கண்ணோட்டத்தில் பின்பற்றும் ஒன்றாகும்.....

இப்போது நாம் முன்வைக்கும் கேள்வி என்னவென்றால் இந்த சுவர்க்கம், நரகம், வீடுபேறு ஆகியவை எங்கு இருக்கின்றன ? அவற்றை அடையும் வழிகள் என்ன என்பதே?...

யாருக்காவது இதற்கான பதில் திட்டவட்டமாகத் தெரியுமா?

இந்த மூன்றையும் அடைந்தவர்கள் யார் என்று தெரியாமலேயே அதை ஆணித் தரமாக நம்புவதற்குக் காரணங்கள் என்ன?

காரணம் என்ன என்பதை அறியும் முன்பாக அப்படிப்பட்ட கருத்துக்கள் ஏன் தோன்றின என்பதையும் பார்க்க வேண்டும்

இவை மூன்றுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

ஒன்று இன்பமயமனது! மற்றொன்று துன்பமயமானது! மூன்றாவதோ இந்த இரண்டும் அற்றது!

துன்பமயமானதையும் தவிர்த்து, இரண்டும் கேட்டானையும் தவிர்த்து இன்பமயமான ஒரு நிலையைத்தான் உயர்ந்த நிலையாகக் கொள்ள வேண்டும்?

ஏன் அப்படிக் கொள்ளவில்லை!

அதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது!.....

ஆதாவது வாழும் ஒவ்வொருவரும் இன்பமான வாழ்வையே விரும்புகிறோம்! ஆனால் அனைவருக்கும் அது வாய்ப்பது இல்லை!

ஆனால் துன்பமான வாழ்வு அனைவருக்குமே வாய்க்கிறது!

ஆதாவது விரும்பி முயற்சி செய்யும் இன்ப வாழ்வு கிடைப்பது இல்லை.

ஆனால் வேண்டாம் என்று நினைக்கின்ற துன்ப வாழ்வு கிடைக்கிறது!

இது விருப்பத்துக்கு நேர் எதிரான அம்சம்!....

இது பெரும்பாலோருடைய வாழ்வில் யதார்த்தமாக இருப்பதால் ஏமாற்றமே வாழ்வின் பொருளாகி விட்டது!

துன்பத்தை விரும்பமுடியவில்லை. இன்பம் எவ்வளவு முயன்றாலும் கிடைப்பதும் இல்லை!

அதனால் உண்மையில் துன்பம் ஒன்றே வாழ்க்கையாக உணரப்படுகிறது!

அதனால் கிடைக்காத இன்பத்தைத் தேடித் தேடி அலைந்து துன்பமே வாழ்வாக வாழ்வதைவிட இன்பமும் வேண்டாம் துன்பமும் வேண்டாம் என்ற நிலைக்குப் போய்விட்டால் அது துன்பத்தை விட உயர்ந்ததுதானே!

அதனால் இன்பதுன்பங்களின் மேல் பற்று வைக்காமல் ஆதாவது இன்பத்தை இன்பமாகவும் துன்பத்தைத் துன்பமாகவும் நினைக்காமல் பற்றற்ற வாழ்வில் நிலைத்திருப்பதே உயர்ந்த நிலையாகச் சொல்லப்பட்டது.

ஆனால் அப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தவர் யாரும் இல்லை!

காரணம் அப்படி வாழ்வது நடைமுறை வாழ்வில் சாத்தியமாக இருக்கவில்லை!

அப்படியானால் இதற்கு என்னதான் முடிவு?

அதுதான் சுவர்க்கம், நரகம், வீடுபேறு.....

யதார்த்த வாழ்வில் கிடைக்காத இன்பங்களைஎல்லாம் சுவர்கத்தில் கிடைக்கும் என்று ஆறுதல் சொல்லப்பட்டது.

தவறான செயல்களுக்கான தண்டனை நரகத்தில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இவை இரண்டுமே தொடர்ந்து பந்தத்திலும் பிறப்பு இறப்பான வாழ்விலும் நாட்டத்தை அதிகரிக்கக் கூடியவையாக இருப்பதால் இவை இரண்டையும் தாண்டி அவை இரண்டுமே அற்ற ஒன்றான வீடுபேறு என்ற ஒரு கருத்து உயர்த்திப் பிடிக்கப்பட்டது...

ஆனால் இவை எதுவுமே மக்களின் துன்பங்களுக்குத் தீர்வாகவும் இன்பங்களுக்கு வழியாகவும் இருக்கவில்லை.

காரணம் என்ன?

காரணம் ஒன்றே ஒன்றுதான்!
ஆதாவது துன்பங்களைத் தவிர்ப்பதற்கும், இன்பங்களை அடைவதற்கும் எது சரியான வழியோ அது கற்பிக்கப்படவில்லை! பின்பற்றப்படவும் இல்லை!

ஆதாவது மனித இனத்தின் கோட்பாடுகளில் பெரும்பாலானவை இந்த உலகமே மனிதனுக்காகப் படைக்கப்பட்டது என்கிற நிலைபாட்டில் இருந்தே உருவாகிறது.

அடிப்படையான அந்த நிலைபாடு தவறானதால் அதனை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களும் தவறாகவே வழி காட்டுகின்றன!

ஆனால் மனிதரும் இயற்கையின் ஒரு அங்கமே , உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் உருவாகும் தத்துவங்கள் தவறான வழிகாட்டுதல்களைச் செய்யாது....

ஆதாவது கேள்விகளுக்குப் பதிலாகவும் விவாதங்களில் எதிர்ப்படும் கருத்துக்களைச் சந்திப்பதர்காகச் சொல்லப்படும் விளக்கங்களாகவும்தான் நடைமுறையில் உள்ள ஆன்மிகக் கோட்பாடுகள் தோன்றி வளர்ந்தனவே அன்றி அனைத்து மக்களுக்கும் தெளிவான வழிகாட்டும் நோக்கில் அல்ல!

அதனால்தான் அவை மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதும் இல்லை.

மக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க முயல்வதும் இல்லை!

அதனால் ஆன்மிகம் என்பதே மூடநம்பிக்கைகள் மட்டுமே என்பதான ஒரு நிலைக்கு மக்கள் ஆகிவிட்டார்கள்.

அதன்காரணமாகவே ஆன்மிகத்தை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறேன்....


Thursday, May 29, 2014

சிறுகதைகள் ( 17 )

அதுதான் அம்மா! 

வளர்மதி இறந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

துக்கம் விசாரிக்க வரத் தாமதமான ஒரு சிலரும் வந்து போய்விட்டார்கள்.

சோகம் இன்னும் நீங்கவில்லை! அவ்வளவு எளிதில் நீங்கக்கூடிய ஒன்றா அது?...

ஆண் பெண் என்று இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவரை இரண்டாவது கணவனாக மணம் செய்து ஒரு முப்பத்தியைந்து ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் முருகேசன்!

அவர்களுடைய தாம்பத்தியத்தில் ஒரு சிறு கீரல்கூட விழாமல் வாழ்ந்த வாழ்க்கை….

தன் மூலம் ஒரு குழந்தை இல்லை என்று மனதாலும் நினைக்காத ஒரு பண்பான வாழ்க்கை…

இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டிய இறுதிக்கட்ட வாழ்க்கை எஞ்சியிருந்த நிலையில் மீள முடியாத நோய்க்குப் பலியானது அவருக்குத் தாங்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.




அவர்களின் திருமணத்தின்போது அவருக்கு வசதி என்று சொல்லும்படி ஒன்றும் இல்லை! ஒரு சிறு நிறுவனத்தில் காவலாளி வேலை….
மனைவி வளர்மதிக்கு அரசு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கும் வரை வாழ்க்கை கடினமாகவே இருந்தது.

அதன் பின்பு சிறு குழந்தைகளாக இருந்த ரஜனீஸ{ம் ரேகாவும் வளர்ந்து ஆளாகவும் ஓரளவு வசதி வரவும் சரியாக இருந்தது.

அவர்களும் படிப்பு  வேலை திருமணம் என்று அனைத்தும் முடிந்து வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொண்டார்கள்.

ஆனால் எதையும் காணும் வாய்ப்பு இல்லாமல் வளர்மதி ஓய்வு பெற்றபின்னால் சில வருடங்கள்கூட வாழாமல் போய்விட்டார்.

முருகேசனுக்கு ஒன்றைத்தான் தாங்க முடியவே இல்லை!

ஆதாவது கண்ணைமூடும் முன்னால் தன்னிடம் எதுவும் சொல்ல வில்லை  என்பதே அது!

அடிக்கடி மகனிடமும் மகளிடமும்  அதையே கேட்டு;ககொண்டிருந்தார். அம்மா உங்களிடமாவது ஏதும் சொன்னாளா என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தது அவர்களுக்கும் பெரும் வேதனையாக இருந்தது!

அவரும் வேலைக்குப் போவது இல்லை! மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சேவை செய்தது தவிர பாடுபட்டது தவிர தனக்கென்று அவர் எதும் வைத்துக்கொள்ளவில்லை.

பாசமுள்ள மனைவி போய்விட்டாள். பிள்ளைகளும் அவரவர் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளோடு வெளியூர்களில் வசிக்கிறார்கள். இனி தான் என்ன செய்வது?....யாரிடம் இருப்பது? தனது வாழ்வுக்கு இனி என்ன ஆதாரம்?...

வேறு சாதியைச் சேர்ந்த ஒரு விதவைப்பெண்ணைத் திருமணம் செய்த அவரை விலக்கி வைத்த உறவினர்கள் விலகியே போய்விட்டார்கள்.

தன்னையும் சேர்த்து அழைத்துக்கொண்டு போகாமல் தன்னைமட்டும் தவிக்க விட்டுப் போய்விட்டாளே என்று மனதுக்குள் வெந்து கண்ணீர் விட்டபடி இருந்தார்.

மகனும் மகளும் அவரவர் இருக்கும் ஊர்களுக்குத் திரும்பும் நாள் நெருங்கி வந்தது.

அப்பாவிடம் வந்து நாங்கள் இங்கேயே இருக்க முடியாதுப்பா! புறப்படுகிறோம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இங்கேயே இருக்கிறீர்களா? எங்களுடன் வந்துவிடுகிறீர்களா என்று கேட்க, அவர் இதயமே வெடித்ததுபோல் பொங்கிப் பொங்கி அழுது விட்டு மீண்டும் அவ எதுவும் சொல்லாமப் போயிட்டா!.... நான் என்ன சொல்லட்டும் என்று மேலும் மேலும் குமுறினார்.

ஏல்லோரும் நல்லா இருங்க என்பதைத் தவிர வேறென்றும் யாரிடமும் கடைசிவரை சொல்லவே இல்லை!

ஒரு வழியா மகனும் மகளும் அவர் எதிர்பார்த்து ஏங்கிய அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டார்கள்.
“அப்பா! ஏன் இதையே திரும்பக் திரும்பக்கேட்கறீங்க? அம்மா எல்லோரும் நல்லா இருங்கன்னு அந்த வேதனையிலும் அடிக்கடி சொன்னாங்க! வேறு என்ன சொல்ல சொல்லியிருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க?

ஏன்னைப்பத்தி ஒண்ணும் சொல்லலியா?...

ஊங்களைப்பத்தி என்ன சொல்லியிருக்கணும்பா?

“ அப்பாவைப் பாத்துக்குங்க அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தாப் போதுமே!...”

“ ஓ!..... அதுதான் உங்க வேதனையா?... அப்படியானா எங்களைப் பத்தி உங்ககிட்டே எதாலும் சொன்னாங்களா?”

“இல்லை”

“ஏன்பா?”

“தெரியலே!”

“ அதுதான் அம்மா!"

“ உங்களை நல்லாப் பாத்துக்கணும்ணு எங்க கிட்டேயோ எங்ககிட்ட எப்பவும்போல இருக்கணும்ணு உங்ககிட்டேயோ அம்மா சொல்லியிருந்தா நீங்க இத்தனை நாள் வாழ்ந்ததுல அர்த்தம்; இல்லாமப் போயிருக்கும்பா!”

“அப்படியா சொல்றீங்க?”

“ஆமாம்பா! அப்படிச் சொல்லியிருந்தா நீங்க இத்தனை காலமும் அம்மாவுக்குத் எங்களுக்கும் தெய்வமா இருந்ததை , இருக்கப் போவதை அவமதிச்சதா ஆகியிருக்கும்! அதுமட்டும் அல்ல, நீங்களும் அம்மாவும் எங்களை நல்ல பிள்ளைகளா வளர்க்கலை என்றும் ஆகியிருக்கும்! அப்படியா அப்பா? நீங்க எங்க அப்பா இல்லையா?..... நாங்க உங்க பிள்ளைகள் இல்லையா?... அம்மா உங்களையும் நீங்க அம்மாவையும் நம்பலையா?..”

சொல்லும்போதே அவன் குரல் உடைந்து தழுதழுக்க ஆரம்பித்து கடைசியில் கதறி விட்டான்!

அவரும் உடன் சேர்ந்து கதரியதைத் தவிர அவரால் வேறு ஒன்றும் பேச முடியவில்லை!.....

==================================================================

எனது மொழி ( 163 )

உண்மை பொய்யாகும்! 


பொய்களைப் பயன்படுத்தி உண்மையை நிரூபிக்க முயல்வது உண்மையைப் பொய்யாக்கிவிடும்.
=================================================================

நிர்பந்தம்....

மனிதசமுதாயத் தவறுகள் அனைத்தும் விரும்பிச் செய்யப்படும் தவறுகள் அல்ல! 

தவறுகளைச் சார்ந்து வாழவேண்டிய நிற்பந்தம்தான் மனிதனைத் தவறு செய்ய வைக்கிறது. 


ஆகையால் உலகையும் வாழ்வையும் அறிவியல் மற்றும் உயர் தர்ம நெறிகளின்படி  ஆராய்ந்து அனைவருக்கும் பொருந்தும் திட்டவட்டமான நெறிகளை உருவாக்கி அதன்படி வாழ்ந்தால் மனித வாழ்வை  இழிவாக நினைந்து வருந்தவேண்டியது இல்லை.....

====================================================================

எனது மொழி ( 162 )

கொல்தலும் வதைத்தலும்.....

மண்ணில் விளைந்து கிடைக்கும் தாவர உணவு வகைகளை தாவர உணவு என்கிறோம். 

அவற்றையும் வேறு சில உயிரினங்களையும் உண்டு வாழ்கின்ற உயிரினங்களின் இறந்த உடம்பின் மாமிசம் முதலியவற்றை மாமிச உணவு என்கிறோம். 

இவை இரண்டுமே மனிதனின் தவிர்க்க முடியாத உணவுகள்தான். 

இதில் வதைப்பது என்பது பெரும்பாலும் கொல்வதற்கு முன்பாகத்தான் அதிகமாக நடக்கிறது! 

அதனால் கொல்லும் முன்பாகவும் கொல்லும்போதும் பிற உயிரினங்களை எப்படி நடத்துகிறோம் என்பதே வதைத்தல் என்பதற்கு அளவுகோல்! 

கொல்லுதல் தவறு என்பது ஒரு தார்மீகப் பண்புதான் தவிர உலகில் வாழும் ஒவ்வொருவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொல்லுதலில் பங்கேற்கிறோம். 

அதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!

Monday, May 26, 2014

எனது மொழி ( 161 )

தொடலும் விடலும் 

தீயதைத் தொடவோ நல்லதை விடவோ நாம் கற்ற தர்மங்கள் அனுமதிப்பதில்லை !. 

அதன் வழி நடப்பதால் வரும் துன்பத்திலும் ஒரு இன்பம் இருக்கிறது!.....

===============================================================

சித்தாந்தமும் வேதாந்தமும்....

சரியோ தவறோ தங்களுக்குத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களை ஆழமாக தர்கரீதியாக விவாதிப்பார்கள்.

அதுதான் சித்தாந்தம், தத்துவம், கோட்பாடு என்று சொல்லப் படுகிறது.

ஆனால் அப்படி ஆழமாக விவாதிக்கத்தக்க விஷயங்கள் தங்களிடம் இல்லாதபோதும் தங்களின் நிலையை விட்டுக்கொடுக்கத் துணிவு இல்லாதவர்கள் குத்துமதிப்பாக வேதம் சொல்கிறது, மகான்கள் சொன்னார்கள், சாஸ்திரத்தில் உள்ளது, ஐதீகம் அப்படி, சம்பிரதாயம் இப்படி என்றெல்லாம் சொல்லிச் சமாளிப்பார்கள்....

அதைத்தான் வேதாந்தம் என்பது!...

சித்தாந்தம் சாரம் மிக்கதாகவும் வேதாந்தம் கட்டுக் கதைகளுக்கு நெருக்கமாகவும் இருக்கும்!....
==================================================================

Friday, May 23, 2014

விவசாயம் ( 80 )

சின்னவெங்காயம் சேமிப்பில் புது யுக்தி!.....

நண்பர்களே! 

என் ஒன்று விட்ட தம்பி தோட்டத்தில் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது. 

விலை குறைவாக இருந்ததால் அதை விற்பனை செய்யாமல் பக்குவமாகச் சேமிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் முன்னோர் சேமித்தபடி பட்டறை போட்டுச் சேமிக்கத் தகுந்த மூங்கில்தட்டிகள், மூங்கில்கள், நிலத்தில் பட்டறை கட்ட பெரும் பாண்டுக் கற்கள் போன்றவை தயார் நிலையில் இல்லாததால் பெரும் செலவு செய்யவேண்டிய நிலை இருந்தது!

ஆனால் அதைத் தவிர்த்து தார்க்காலிகமாகப் புது முறையில் பட்டறைபோட முயற்சி செய்து செய்தும் முடித்தார்கள். 

அதன் முதல்படியாக, வெங்காயத்தை அறுவடை செய்து தாளை அரியாமல் அப்படியே பரவலாக நிலத்திலேயே காயும்படி விடப்பட்டது...

வெங்காயம் வெய்யிலில் காய்ந்தால் தரம் குறையும் என்பதால் பிடுங்கப்பட்ட வெங்காயம் தாள் மேலே இருக்கும்படி அறி அறியாக நிறுத்தியே வைக்கப்பட்டது....

அப்படியே நான்கு நாட்கள் காய விடப்பட்டது. பக்குவமாக வெங்காயம் காயாமல் தாள்மட்டும் காய்ந்துவிட்டது. 

 சுமார் 300  மூட்டைகள் ஆகக்கூடிய வெங்காயத்தைச் சேமிக்க மூன்று பட்டறைகளாகப் போட முடிவு செய்யப்பட்டது.

பட்டறையின் அடியில் தென்னை ஓலைகள் நீளமாகப் பரப்பப்பட்டது.  

சுமார் ஐந்தடி  அகலமும் மூன்றடி உயரமும் கொண்ட தாக நீளமான குவியலாக அதன்மேல் நன்கு உலர்த்தப்பட்ட வெங்காயம் கொட்டப்பட்டது. 

பார்த்தால் சாலைபோட ஜல்லிக்கற்களை நீளமாகக் கொட்டியதைப்போல் இருக்கும்! 

அதன்மேல் வேறு விவசாயிகளின் நிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட காய்ந்த வெங்காயத்தாள் தூவப்பட்டது. 

அதன்பின்பு வெங்காயப் பட்டறையைச் சுற்றிலும்  தரைமட்டத்தில் தாள்மேல் மண் போட்டு அரை அடி மண் அணைக்கப்பட்டது. 

அப்போதுதான் மழைபெய்தால் தரை வழியாகத் தண்ணீர் உள்ளே செல்லாமல் இருக்கும்! 

அதன் பின்பு பட்டறைமேல் தென்னந்தடுக்குகளைக் கொண்டு வேயப்பட்டது. 

அதன்பின்னால் பட்டறையைச் சுற்றியும் வாய்க்கால் வெட்டி வடிகால் அமைக்கப்பட்டது. 

ஆதாவது பட்டறையில் விழும் மழைநீர் வெளியேறுவதற்காக இந்த ஏற்பாடு!....

மெல்லிய கட்டுக் கம்பிகளைக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகக் கட்டிவிட்டால் காற்றால் பட்டறை பாதிக்கப்படாது!

இப்போது முழுமையான பட்டறை தயார்!....

இந்தமாதிரி மூன்று பட்டறைகள் அமைக்கப்பட்டு சுமார் 300 மூட்டை வெங்காயம் சேமிக்கப்பட்டு உள்ளது.....

பட்டறை போட்டு ஒன்றரை மாதங்கள் ஆகின்றன. வெங்காயம் நன்றாக இருக்கிறது!...







Thursday, May 22, 2014

அரசியல் ( 70 )

நன்றி! நன்றி!! நன்றி!!!

தேர்தல் கமிஷனின் சிறப்பான செயல்பாட்டால்.....

கடந்த தேர்தலில் கிரிமினல்கள் யாரும் தேர்தலில் நிற்க முடியவில்லை....

கோடி கோடியாகப் பணம் வைத்திருப்பவர்களின் பப்பு வேகவில்லை!

நல்லவர்களும் நாட்டுப் பற்று மிக்கவர்களும் மட்டுமே தேர்தலில் நிற்கவும் வெற்றிபெறவும் முடிந்தது!....

லஞ்சம் என்பது ரசத்துக்குப் போடும் இஞ்சி அளவுகூடக் கொடுக்கப்படவும் இல்லை. வாங்கப் படவும் இல்லை!...

சின்னஞ் சிறு முறைகேடுகள் கூட நடக்காததால் இவ்வளவு பெரிய நாட்டில் இத்தனை மக்கள் வாக்களித்தும் இத்தனைபேர் தேர்தலில் நின்றும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது!...




வங்கிக்குப் பணம் கொண்டு சென்றவர்கள், வியாபாரத்துக்குக் கொண்டு சென்றவர்கள், சம்பளம் பட்டுவாடா செய்யச் சென்றவர்கள் போன்ற பயங்கரக் குற்றவாளிகளிடம் இருந்து நிறையப் பணமும் தங்கமுமாகப் பறிமுதல் செய்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர்!....

கடைசி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களுக்குச் சென்று சேரவேண்டிய நன்மைகள் தடங்கலின்றிப் போய்ச் சேர அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்!....

இத்தனை நன்மைகளையும் செய்த தேர்தல் கமிஷனுக்கு இந்திய நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!...

Monday, May 19, 2014

அரசியல் ( 69 )

ஒரே ஒரு விஷயம்.....

இந்தத் தேர்தலில் என் மனதைப் பாதித்தது ஒரே ஒரு விஷயம் மட்டும்தான்!...

ஆதாவது கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தளபதியான உதயகுமார் அவர்கள் தேவை இல்லாமல் அவசரப்பட்டு ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக்கொண்டு வேடமும் தரித்துத் தன்னையும் தனது மகத்தான போராட்டத்தையும் சிறுமைப் படுத்திக் கொண்டார் என்பதே!...


அவரைப் பொருத்தவரை அணுசக்திப் பயன்பாட்டுக்கு எதிரான போராட்டத்தை நாடு தழுவிய அளவில் எடுத்துச் செல்வார் என்று மிகவும் எதிர்பார்த்தேன்! 

அந்த எதிர்பார்ப்பும் வீணாய்ப் போயிற்று! 

அவர் மீண்டும் முந்தைய மதிப்புக்குரிய இடத்தை அடைவாரா?....

அரசியல் ( 68 )

இது என்ன பார்வை?...

டெல்லி சட்டசபைத் தேர்தலில் மற்றவர்களைவிடக் கூடுதலான இடங்கள் கிடைத்தவுடன் கெஜ்ரிவால் உடனே நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டார்!....

அது சரி என்றால் இப்போது அடைந்த படுதோல்வியால் அவருடைய தகுதிகள் எல்லாம் பறிபோய் விட்டதா?.....

அவர் வெற்றி பெற்றபோது துதி பாடியவர்கள் இப்போது தோல்வி கிடைத்ததால் தூற்றப் போகிறீர்களா?....

என்ன அரசியல் பார்வை இது?....

அரசியல் ( 67 )

சட்டத்துக்கு ஒரு கேள்வி!...

நாடு முழுவதும் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியிலாவது அனைத்தும் சட்டத்தை மீறாமல் அனைத்தும் நடந்தது என்று யாராவது சொல்ல முடியுமா?...



முடியாது என்றால் சட்ட நெறிகளை மதிக்காமல் நடந்து முடிந்த தேர்தலில் கிடைத்த வெற்றியும் தோல்வியும் சட்டபூர்வமானதுதானா?...

சட்ட மீறலைச் சட்டம் அனுமதிக்கிறது என்றால் அந்தச் சட்டப்படியான அரசியல் அமைப்பு எப்படி நியாயமானதாக இருக்கும்?.....

Saturday, May 17, 2014

அரசியல் ( 66 )

முதல் ஆணை!...

வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு நினைவூட்டல்......

ஏற்கனவே ஆண்டவர்கள் மீது எண்ணற்ற குற்றச் சாட்டுக்கள் உள்ளன! 

அவைதான் உங்களின் வெற்றிக்குப் படிக்கட்டுக்களாக அமைந்தன!...

இப்போது அதிகாரம் உங்கள் கைகளில்!

அதைப் பயன்படுத்திக் குற்றவாளிகள் அனைவரையும் பிடித்துத் தண்டிக்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!.


அதைச் செய்தால் நாடு கிரிமினல்களிடம் இருந்து விடுதலை பெறும்!...

நாட்டு மக்கள் என்றென்றும் உங்களுக்கு வெற்றிக் கனிகளைத் தந்துகொண்டே இருப்பர்!...

அதனால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ......

போதுமான அளவு கைவிலங்குகளை உற்பத்தி செய்யவேண்டும் என்று ஆணை  இடுவதே!....

இடுவீர்களா!.....

Thursday, May 15, 2014

எனது மொழி ( 160 )

ஈகோ...

ஒருவரின் எண்ணங்களின் சமநிலை மாறும்போது, சீர்தூக்கிப் பார்க்கும் பண்பு பலவீனப்ப்படும்போது எழும் தகாத உணர்வே ஈகோ ஆகும்!...

அதேசமயம் அப்படிப்பட்ட பலவீனத்துக்கு ஆளாகாமல் குறைகளை விமர்சித்தல் ஈகோ ஆகாது! அதையும் பலர் ஈகோவாக நினைப்பதால் ஈகோவுக்கும் விமர்சனத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போகிறது! 

அங்கே நியாயம் மதிப்பை இழக்கிறது!.....

Wednesday, May 14, 2014

அரசியல் ( 65 )

யார் தருவார் ஒரு நல்லரசை?...

நடந்து முடிந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் விளைவுகள் நிச்சயம் ஒரேமாதிரிதான் இருக்கும் நண்பர்களே!...

காரணம் யாரும் உண்மையைச் சொல்லிக் களத்தில் இறங்கியவர்கள் அல்லர்!....

அதனால் அடிப்படையிலேயே மாற்றம் நிகழவேண்டும். 

தேசபக்தர்கள் அரங்கத்துக்கு வரவேண்டும். 

மக்களுக்குத் தலைமைதாங்கிக் கிரிமினல்களைத் துடைத்தெறிய வேண்டும்!....

சரியான அரசியல் பொருளாதாரத் திட்டங்களை வகுத்து நாட்டை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்!....

ஒத்த குணம் படைத்த எந்தக் கட்சி வந்தாலும் நம்மை உண்மையில் ஆளப்போவது கிரிமினல்களே!....

கட்சிக்கு உள்ளும் கட்சிக்கு அப்பாலும் அரசு அதிகார மட்டத்திலும் தனிநபர் மனதிலும் தவறு செய்ய நினைக்கும் ஒருவருக்குக் குலை நடுங்க வைக்கும் அரசு எதுவோ அதுதான் உண்மையான மக்கள் அரசு!.

நல்லவர் மனம் நோகாமல் அமைதியுடன் வாழ உத்திரவாதம் தரும் அரசு எதுவோ அதுதான் நல்லரசு!. 

அத்தகைய அரசை இவர்களில் யார் தருவார்கள்?....

நாட்டில் நல்லவர்களும் தேசப்பற்று மிக்கவர்களும் திருப்தியாக வாழ்கிறார்களா என்பதுதான் நல்லாட்சி நடக்கிறதா என்பதற்கு அளவுகோல்!...

அந்த அளவுகோலை வைத்து அளந்தால் யார் ஆளத் தகுதியுள்ளவர் யார் தகுதி இல்லாதவர் என்பது விளங்கும்.

நபர்களின் பெயர் முக்கியம் அல்ல!

அவருடைய செயல்பாடுகளால் விளைந்த நாட்டு நலன் என்ன என்பதே முக்கியம்!...

நல்ல ஓட்டுக்கும் கள்ள ஓட்டுக்கும் வேறுபாடு இல்லாத ஒரு தேர்தலில் எந்த நபருக்கு வாக்களித்தாலும் விளைவு ஒன்றுதான்.

காரணம் ஆட்களும் கட்சிகளின் பெயர்களும்தான் வேறு. மக்களுக்கும் அவர்களுக்கும் நிலவும் உறவுகள் ஒன்றுதான்!.

அந்த உறவில் மாற்றம் வரவேண்டும்!

மக்கள் ஏமாளிகளாகவும் ஏமாற்றுபவர்களாகவும் என இரு வேடங்களில் மட்டும் என்றென்றும் நடிப்பது சரியல்ல!...

நமது நாடும் மதிப்புக்குரிய நிலையை அடையவேண்டும் என விரும்புவது அனைவரின் உரிமை மட்டுமல்ல. கடமையும்கூட!....

Saturday, May 10, 2014

உணவே மருந்து (84)

கசப்பு இனிப்பாகும் விந்தை!.....

நண்பர்களே! ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்!

அதுபோல பல்லுக்கு நன்மையையும் உறுதியும் சேர்க்கும் மற்றொன்றுதான் வேம்பு! 

அதன் குச்சியால் பல்துலக்கும்போது அது பற்களுக்கு உறுதி சேர்ப்பது மட்டுமல்ல சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது!..

ஆனால் அதன் கசப்புச் சுவை காரணமாக அதன் பயனை அறிந்தவர்கூடப் பயன்படுத்துவது இல்லை!

ஆனால் அதன் பயன்பாட்டில் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தினால் கசப்புச் சுவையைத் தவிர்த்து திருப்தியாகப் பல் துலக்கலாம். 

ஆதாவது  நமது நாக்கின் அனைத்துப் பகுதிகளும் அனைத்துச் சுவைகளையும் உணர்வது இல்லை! ஒவ்வொரு சுவைக்குமான சுவை மொட்டுக்கள் நாக்கின் ஒவ்வொரு பாகத்திலும் அமைந்துள்ளன. 

அதன்படி கசப்புச் சுவையை உணரக்கூடிய சுவை மொட்டுக்கள் வாயின் உட்பகுதியில் நாக்கின் பின்பாதியில் அமைந்துள்ளன. 

நாம் கசப்பை மெல்லும்போது அந்தச் சுவை மொட்டுக்கள் மூலம் கசப்பை உணர்வதால் வேப்பங்குச்சியால் பல் துலக்குவதை வெறுக்கிறோம்.

ஆனால் அந்தக் கசப்பைச் சிறுதும் அறியாமல் வேப்பங்குச்சியால் சிறப்பாகப் பல்துலக்கலாம்.

ஒரு துண்டு வேப்பங்குச்சியை ஒடித்து அதன் நுனியை முன்பற்களால் நன்றாக மென்று மஞ்சிபோல் ஆக்கவேண்டும். 

அப்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் குச்சி நுனி நாக்கைத் தாண்டக் கூடாது! அதேபோல கடைவாய்ப் பற்களைப் பயன்படுத்தக் கூடாது. 



ஓரிரு தடவை பிசுறுகளையும் எச்சிலையும் வெளியே துப்பி விட வேண்டும்.

இப்போது கசப்பு போயேபோச்சு என்று சொல்லிக்கொண்டே வழக்கம் போல் பல் துலக்கலாம் .

வேப்பங்குச்சி எல்லா இடங்களிலும் கிடைப்பதால் கசப்புத் தெரியாமல் பல்துலக்கப் பழகிக் கொண்டால் தினமும் அருமையாக இயற்கை முறையில் பல் துலக்கலாம்! 

அதே நேரம் பல்பொடிக்காகவும் பல்பசைக்காகவும் செலவு செய்யும் பணத்தையும் மிச்சப் படுத்தலாம்....

அதுதான் இனிமை!.....

எனது மொழி ( 159 )

நவீன வழிகாட்டிகள்!...

தொலைக் காட்சிப் பெட்டியும் வீடியோ கேமும் கிரிக்கெட் மட்டையும் வருங்காலத்துக்குச் சிறந்த வழிகாட்டிகள் ஆகிவிட்டன!.

புத்தகங்கள் படிக்கும் பண்பு மறைந்து வருகிறது!....

தவறு பிள்ளைகள்மேலும் இல்லை. 

பெற்றோர்கள் மேலும் இல்லை. 

ஆசிரியர்மேலும் இல்லை!....

இன்றைய நிலைமையை எண்ணிப் பொங்கி எழாத நல்லோர்தான் குற்றவாளிகள்! 

நல்லவர்களிடம் இருந்து கோழைத்தனம் நீங்க வேண்டும்! 

அனைத்தும் சரியாகும்!....

Thursday, May 1, 2014

எனது மொழி.....(எனது செய்திகள்)..

1. எனது மொழி (1)

2. தூக்கில் தொங்கும் தமிழ்!

3. இன்பமும் துன்பமும் (வாழ்க்கை) 

4. அமைதி 

5. கடவுள் நம்பிக்கையும் மறுப்பும்
http://www.drumsoftruth.com/2012/04/5_7122.html

6. இயற்கையின் நீதி!

7.மூடத்தனம் 

8. அறிவியலும் அட்சய திருதியையும்
http://www.drumsoftruth.com/2012/04/8.html

9. வாழ்வின் கூறுகள்

10. மொழி, தத்துவ ஆய்வு..

11. தாய்மொழி தப்புமா?

12.வெற்றியும் தோல்வியும்

13. விமர்சனம்

14. வலியவனும் எளியவனும்

15. படைப்பு

16. இன்பமும் துன்பமும்

17. இயற்கையின் பதிலடி

18. பயன் என்ன?

18 A விடிவு!

19. சுதந்திரம்!
http://www.drumsoftruth.com/2012/05/19.html

20. உணர்வில் நஞ்சு!

21. எந்த மார்க்கம் சரி?

22. வெற்றிப் படிகள்

23. உலகிற்கு ஏற்ற இகம்!

24. நற்பண்பு
http://www.drumsoftruth.com/2012/05/24.html

25. புதைசேறு

26. தீண்டாமை

27முரண்பாடு

28. அபாயம்

29. வழிகாட்டி 

30.உறவு

31. கவலை 
 http://www.drumsoftruth.com/2012/06/31.html

32. நல்ல கோழை

33. உண்மையும் பொய்யும்
http://www.drumsoftruth.com/2012/06/33.html

34. போலிகள், உடலும் உள்ளமும்...

35. .அப்படி ஒரு காலம்

36. மனிதனும் இயக்கமும்

37. இறைவன்

38.தத்துவம்

39. அமைதி

40. உயர்ந்த நிலை

41. இது என்ன நியாயம்?

42. அறிவின் குறைபாடு

43.அறிவுச் செல்வம்

44. வாழ்க்கைக் கப்பல்

45. வேறுபாடு

46. வாழும் காலம்!, நல்லவர்களின் அரசியல்
http://www.drumsoftruth.com/2012/06/blog-post_24.html

47. ஆனந்த வாழ்வு, சொந்தமும் இரவலும்...

48. சராசரி மன நிலை

49. நம்பிக்கையும் மறுப்பும் 
  http://www.drumsoftruth.com/2012/07/49.html

50. விருப்பமும் வெளிப்பாடும்

51. ஒரு கேள்வி, இவை எதற்கு...

52. மகான்களுக்கு மரியாதை!...

53. அருமையும் கொடுமையும்

54. தகுதி

55. மனிதன்!
http://www.drumsoftruth.com/2012/07/55.html

56. மதத் தர்மங்கள்!

57. கனவுகள்

58. மூன்றும் ஒன்றும்

59. செலவில்லாமல்......
http://www.drumsoftruth.com/2012/08/59.html

60. கனவு

61.எறும்பும் யானையும் சமம்

62. ஆசை

63. சிறப்பும் விபத்தும்

64. அறிவுத் தெளிவு , ... பண்டமும் பாத்திரமும்

65.அறிவியல்

66. உயிர் வாழ்க்கை!

67.நீரும் நெருப்பும், வெற்றியும் தோல்வியும்
http://www.drumsoftruth.com/2012/09/67.html

68.படைப்பாளிக்கு அழகு

69.ஊருக்கு உபதேசம்!

70. நாடு உருப்படுமா?

71. இது என்ன நியாயம்?

72.மூட நம்பிக்கையின் வெற்றி!

73. முடிவு!

74. பண்டமும் பாத்திரமும் 

75. நல்லோர் தீயோர்

76. உலகமயமாக்கல்

77. ஏன் இப்படிக் கூடாது?

78. காந்திஜி 

79.சித்தர்கள் 

80. வணக்கத்தின் பொருள்

81. மூன்றுவித வாழ்க்கை

82. கொல்லாமை

83. அனுமானம்

84. தனிநபரும் கொள்கையும் 

85. மூன்று வழிகள்

86. நான்கு படிகள் 

87. சட்டம்

88. ஒன்றில்லாமல் ஒன்றில்லை!

89.அறிவியலும் அதன் எதிரிகளும்!

90. ஜனநாயகம்...
http://www.drumsoftruth.com/2012/12/90.html

91. அறிவியலும் மூட நம்பிக்கையும்! 

92. நம்பிக்கைச் சுதந்திரம்!

93. மன வருத்தம்
http://www.drumsoftruth.com/2012/12/93.html

94. விஞ்ஞானமும் மெய்ஞானமும்

95. தத்துவம் 

96. விஷ வட்டம்

97. சூழ்நிலை

98. எது சிறப்பு?

99. நாயினும்!..

100. ஒழுக்கத் தூண்கள்! 

101. தற்கொலைப்பாதை

102. ஆன்மிகமும் மேதைகளும் 

103.  குளிர்ச்சி அல்லது உஷ்ணம்

104. காலம்

105. அறிவியல் கண்ணோட்டம்

106. மதமும் கலையும்

107. நாகரிகம்
http://www.drumsoftruth.com/2013/01/107.html

108. பயன்

109. அடிப்படை!

110. நான்!

111. பயம்!

112. ஆயுள்

113. தண்ணீர் தண்ணீர்!

114. இருப்பும் அறிவும்.....

115. உணர்வு அறிவாகுமா?...

116. ஆசை! 

117. நம் நாடு! 

118. தியானமும் மவுனமும்... 

119.விருப்பும் வெறுப்பும்....

120. யானையும் பூனையும் ராக்கெட் விடுமா?...

121.தீயவர்களின் பலம்! 

122. உண்மை முகம்!

123.நாவன்மை

124. செதுக்கல்...
http://www.drumsoftruth.com/2013/04/124.html

125. தனி விதி...

126. காலம் கடந்த திருமணம்..

127. பிரிவினைத் தீயில் பெட்ரோல்....

128. தவறு செய்தால்....

129. நல்ல அரசியல்!
http://www.drumsoftruth.com/2013/05/129.html

130. நிலத்தடி நீர்வளம்
 http://www.drumsoftruth.com/2013/05/130.html

131. கள்ளச் சாராயமும் கல்வியும்...

132. அவசர சிகிச்சை.....

133. மூட நம்பிக்கைகளின் ஊற்றுக்கண்... 

134. மனிதனும் மதிப்பெண்ணும்

135. மாற்று

136. இது சரிதானா?

137. நோயும் தீர்வும்...
http://www.drumsoftruth.com/2013/06/137.html









146. பிச்சை...





151. அறிவாளிகள்....

152. படிப்பினை...




156. நம்பிக்கை...



159.நவீன வழிகாட்டிகள்!...

160.ஈகோ...
http://www.drumsoftruth.com/2014/05/160.html

161. சித்தாந்தமும் வேதாந்தமும்....
http://www.drumsoftruth.com/2014/05/161.html

162.கொல்தலும் வதைத்தலும்....
http://www.drumsoftruth.com/2014/05/162.html

163. உண்மை பொய்யாகும்! 
http://www.drumsoftruth.com/2014/05/163.html

164.

யோகக்கலையும் உடல்பயிற்சியும்...கட்டுரைகள்...