ss

Wednesday, May 14, 2014

அரசியல் ( 65 )

யார் தருவார் ஒரு நல்லரசை?...

நடந்து முடிந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் விளைவுகள் நிச்சயம் ஒரேமாதிரிதான் இருக்கும் நண்பர்களே!...

காரணம் யாரும் உண்மையைச் சொல்லிக் களத்தில் இறங்கியவர்கள் அல்லர்!....

அதனால் அடிப்படையிலேயே மாற்றம் நிகழவேண்டும். 

தேசபக்தர்கள் அரங்கத்துக்கு வரவேண்டும். 

மக்களுக்குத் தலைமைதாங்கிக் கிரிமினல்களைத் துடைத்தெறிய வேண்டும்!....

சரியான அரசியல் பொருளாதாரத் திட்டங்களை வகுத்து நாட்டை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்!....

ஒத்த குணம் படைத்த எந்தக் கட்சி வந்தாலும் நம்மை உண்மையில் ஆளப்போவது கிரிமினல்களே!....

கட்சிக்கு உள்ளும் கட்சிக்கு அப்பாலும் அரசு அதிகார மட்டத்திலும் தனிநபர் மனதிலும் தவறு செய்ய நினைக்கும் ஒருவருக்குக் குலை நடுங்க வைக்கும் அரசு எதுவோ அதுதான் உண்மையான மக்கள் அரசு!.

நல்லவர் மனம் நோகாமல் அமைதியுடன் வாழ உத்திரவாதம் தரும் அரசு எதுவோ அதுதான் நல்லரசு!. 

அத்தகைய அரசை இவர்களில் யார் தருவார்கள்?....

நாட்டில் நல்லவர்களும் தேசப்பற்று மிக்கவர்களும் திருப்தியாக வாழ்கிறார்களா என்பதுதான் நல்லாட்சி நடக்கிறதா என்பதற்கு அளவுகோல்!...

அந்த அளவுகோலை வைத்து அளந்தால் யார் ஆளத் தகுதியுள்ளவர் யார் தகுதி இல்லாதவர் என்பது விளங்கும்.

நபர்களின் பெயர் முக்கியம் அல்ல!

அவருடைய செயல்பாடுகளால் விளைந்த நாட்டு நலன் என்ன என்பதே முக்கியம்!...

நல்ல ஓட்டுக்கும் கள்ள ஓட்டுக்கும் வேறுபாடு இல்லாத ஒரு தேர்தலில் எந்த நபருக்கு வாக்களித்தாலும் விளைவு ஒன்றுதான்.

காரணம் ஆட்களும் கட்சிகளின் பெயர்களும்தான் வேறு. மக்களுக்கும் அவர்களுக்கும் நிலவும் உறவுகள் ஒன்றுதான்!.

அந்த உறவில் மாற்றம் வரவேண்டும்!

மக்கள் ஏமாளிகளாகவும் ஏமாற்றுபவர்களாகவும் என இரு வேடங்களில் மட்டும் என்றென்றும் நடிப்பது சரியல்ல!...

நமது நாடும் மதிப்புக்குரிய நிலையை அடையவேண்டும் என விரும்புவது அனைவரின் உரிமை மட்டுமல்ல. கடமையும்கூட!....

No comments:

Post a Comment