ss

Monday, May 19, 2014

அரசியல் ( 67 )

சட்டத்துக்கு ஒரு கேள்வி!...

நாடு முழுவதும் நடந்த தேர்தலில் ஒரு தொகுதியிலாவது அனைத்தும் சட்டத்தை மீறாமல் அனைத்தும் நடந்தது என்று யாராவது சொல்ல முடியுமா?...



முடியாது என்றால் சட்ட நெறிகளை மதிக்காமல் நடந்து முடிந்த தேர்தலில் கிடைத்த வெற்றியும் தோல்வியும் சட்டபூர்வமானதுதானா?...

சட்ட மீறலைச் சட்டம் அனுமதிக்கிறது என்றால் அந்தச் சட்டப்படியான அரசியல் அமைப்பு எப்படி நியாயமானதாக இருக்கும்?.....

1 comment:

  1. சட்டம்! மீறலுக்கு உடந்தையாக இருப்பதுவேசட்டம்! ஆளுங்கட்சியின் சார்பில் இருப்பதே சட்டம்! நடந்த தேர்தல் ஆனாலும் நடக்க இருக்கும் தேர்தலானாலுமே சட்டம் எப்போதுமே ஆட்சியாளருக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்!வளைந்தும் நெளிந்தும் நெகிழ்ந்தும் கொடுக்கும். இதை அறியாமலா மக்கள் இருப்பார்கள்? மக்கள் எனில் யார்? ஒற்றை அல்லது பன்மை! ஒற்றைக்கும் பன்மைக்கும் பொருந்தும். என்றாலுமே ஊழலுக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சியாளர்களின் போக்கில் தம்மையும் இணைத்துக்கொள்ளும் திரளான மாக்களே மக்கள் ஆவார்கள்! இவர்கள் சட்டத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவர்களே ஆவார்கள். தாமரை மலர்கிறதோ இல்லையோ? தாமரையைச் சின்னமாகக்கொண்ட ஆட்சியில் ஊழல் மலரும். இலை விரிகிறதோ இல்லையோ இலையைச் சின்னமாகக் கொண்ட ஆட்சியில் ஊழல் விரியும்! எப்படியோ கை ஒடிந்துவிட்டது. அதுபோலவே செயற்கையான சூரியனும் மறைந்து விட்டது. எல்லாமே ஊழலின் உறுப்பினர்களைக் கொண்டவைகள் தானே! இவைகளுக்கு நெறிமுறை கிடையாது. வெற்றி என்பது தொகையின் அடிப்படையில் விலை பேசப்பட்ட ஒன்றுதானே தவிர உருப்படியான, ஊழலில்லாத வெற்றி இல்லையே!

    ReplyDelete